Wednesday 26 February 2014

ஒரு இந்திய வேகவீச்சாளர் தோன்றுகிறார்...


கோலி: “போட்றா அவனுக்கு ஒரு பீமர்”


ஒரு இந்திய பந்து வீச்சாளர் 149 கி.மீ வேகத்தில் வீசுவதை நேற்று தான் முதன் முறை பார்த்தேன். வாருன் ஆரொன் முன்னர் 140 தாண்ட மாட்டார். இப்போது தோனி தலைமையில் இல்லை என்றதும்  அவர் மிக சுதந்திரமாக உணர்ந்து வீசினார். தோனியின் சிறப்பு ஷோயப் அக்தரே என்றாலும் 130 கி.மீ வேகத்தில் குழந்தை மாதிரி வீச வைப்பார். அந்தளவுக்கு கட்டுப்பாட்டு பைத்தியம் அவர்.
Read More

Saturday 22 February 2014

சில நம்பிக்கை நட்சத்திரங்கள்

இடது பக்கம் கீழே சாம்சன், வலது பக்கம் மேலே குல்தீப் யாதவ், கீழே கானி



இன்று 19 வயதுக்கு கீழானவர்களுக்கான உலக்க் கோப்பை காலிறுதியில் இந்தியா இங்கிலாந்திடம் தோற்று விட்டது. ஆனால் இது போன்ற தொடர்களில் வெற்றி தோல்வி ஒரு சாதனையொ இழப்போ அல்ல. வீர்ர்கள் அடையாளம் காணப் படுகிறார்கள். ரஞ்சி கோப்பையை விட நெருக்கடி மிகுந்த சூழலில், நல்ல தரமான அணிகளுக்கு எதிரே அவர்கள் எப்படி ஆடுகிறார்கள் என பார்க்க ஒரு சந்தர்ப்பம். அந்த அடிப்படையில் இந்த இந்திய அணியின் கணிசமான வீர்ர்கள் கவர்ந்தார்கள்.
Read More

Thursday 20 February 2014

ராஜீவை கொன்றது சரியா என கேட்கலாமா?




புலிகள் ராஜீவை கொன்றார்கள் என்பது உண்மை. அதை நாம் மறுக்க வேண்டியதில்லை. மறுப்பது என்பதே அது ஒரு குற்றம் என்கிற எண்ணத்தில் இருந்து வருகிறது. இது அவசியமற்ற ஒன்று. ஏன் எனக் கூறுகிறேன்.
Read More

Tuesday 18 February 2014

பேஸ்புக்கை விட்டு ஏன் விலக நினைக்கிறோம்?





ஒரு குடும்ப சண்டை எப்படி இரண்டு நாட்களில் சமூக வலைதளம் மூலம் வெடித்து கட்டுப்பாட்டை கடந்து வளர்ந்து சுனந்தா புஷ்கரை தற்கொலைக்கு தூண்டியது என்பதைப் சமீபத்தில் பார்த்தோம். சமூக வலைதளங்கள் நம்மை தேவைக்கு அதிகமாக உணர்ச்சிவசப்பட வைப்பதுடன், யாரையும் பழிவாங்கும் அபார அதிகாரமும் நமக்கு உள்ளதாக ஒரு போலி தன்னம்பிக்கையையும் கொடுக்கிறது. இது தன் கணவனின் காதலியாக தான் நம்பின பாகிஸ்தானிய பத்திரிகையாளரை பழிக்கும்படி, ஒற்றர் என அவமானிக்கும்படி சுனந்தாவை வெறியேற்றுகிறது. பிறகு இந்த பிரச்சனை அவர் கைமீறிப் போகிறது. டிவிட்டரில் குற்றச்சாட்டை சுனந்தா எழுதவில்லை, யாரோ அதை ஹேக் செய்து விட்டார்கள் என ஷஷி தரூர் கூற சுனந்தா அதை பொதுப்படையாக மறுக்கிறார். இந்த சொற்போரில் தோற்று விட சமூக வலைதளம் தரும் போலி கௌரவம் அவரை அனுமதிக்கவில்லை. அவர் தன் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் துணையுடன் பாகிஸ்தானிய பெண்ணையும் தரூரையும் எதிர்கொண்டிருந்தார் என்றால் முதலில் பிரச்சனை கட்டுப்பாட்டுக்குள் இருந்திருக்கும். விவாதிக்கப்பட்டு, சமரசங்கள் பேசப்பட்டு கோபம் மெல்ல மெல்ல வெளிப்பட்டிருக்கும். ஆனால் டிவிட்டர் சூழல் பிரச்சனைகளை சட்டென பெரிதாக்கி அதை உருவாக்கியவரை முழுங்கிக் கொள்கிறது. பிறகு ஒரு அர்த்தத்தில் சண்டைகள் டிவிட்டரின் மூளை சொல்கிறாற் போல் நடக்கின்றன. சம்மந்தமில்லாத பார்வையாளர்களும், ஊடகங்களும் உள்ளே வந்து அடிச்ச கைப்புள்ளக்கே இவ்வளவு காயமுன்னாஎன பேச துவங்கி யாரையும் அப்பிரச்சனையில் இருந்து வெளியேற முடியாதவாறு செய்கிறார்கள். இலங்கையை எரிக்க அனுமார் வாலில் தீயை வைத்துக் கொண்ட கதை தான் இதுவும். ஒரே வித்தியாசம் ஊரை எரித்த பின்னும் நம் வால் தீயை எளிதில் அணைக்க முடியாது.
Read More

Sunday 16 February 2014

என்.டி ராஜ்குமாரும் தேவதேவனும்






“செத்துப் போனவர்களோடு” நானிருந்து என ஆரம்பிக்கும் கவிதை ஒரு தலித் அரசியல் பேசும் படைப்பு என்றாலும் இன்னொரு புறம் தேவதேவனை நினைவுபடுத்துகிறது. குறிப்பாக இறுதியில் சட்டென தோன்றி விரியும் மயிலின் குறியீடு.
”செத்துப் போனவர்களோடு நானிருந்து
பித்து நிலையில் பேசிக் கொண்டிருக்க
எனது அகப்பேயை பிடித்தடைக்க வந்த
வேலவனோ
கும்பத்துக்குள் அடைத்து வைத்திருந்த
முருகனை திறந்து விட்டான்
மாந்திரிக இலைவிரிப்பில் அவன்
செந்திணையை உருட்டி வைக்க
வேட்டை நாய்களென
கூட்டமாய் வந்த எனது பிசாசை
பிடித்தடைத்த சாகசக்கதைகளை
சுவாரச்சியமாய் பேசிக் கொண்டே
முருகன்
மயிலை
விட்டுச் சென்று விட்டான்
அவள்
எனக்கு:
தோகை விரித்து ஆடிக் கொண்டிருக்கிறாள்”
முருகனை இங்கு வைதிகத்துக்கு மாற்றான ஒரு நாட்டார் தெய்வமாக காட்டுகிறார் என்பது புரிந்திருக்கும். தெய்வங்களை அபகரிப்பதற்கான இந்த சமூக போராட்டங்களுக்கு இடையே “மயில்” எனும் தரிசனம் கவிஞருக்குள் ஒரு பெரும் விரிவாக வளர்ந்து கொண்டே போகிறது. 
கலாச்சார கள்வர்களால் தொன்மங்களை அபகரிக்க முடியும். ஆனால் நினைவுகளை, கற்பனையை, இயற்கையை, அதன் பகுதியாய் தன்னை மாற்றிக் கொள்ளும் ஒரு மனிதனுக்குள் ஒரு ஆதிதெய்வம் புகுந்து ஏற்படுத்தும் அக எழுச்சியை அவனிடம் இருந்து பிரிக்க முடியாதே! ஒரு அரசியல் கவிதையை ஒரு ஞானியின் சொற்கள் வடிக்கும் போது தான் இப்படியான கவிதை தோன்ற முடியும்.

என்.டியின் “கருடிக்கொடி” பற்றி எழுதிக் கொண்டிருக்கும் விமர்சனக் கட்டுரையில் இருந்து ..
Read More

Monday 10 February 2014

அமைதியும் வன்முறையும்

நான்கு வருடங்களுக்கு முன்பு மெரீனாவில் நடந்த கருத்தரங்கில் வாசித்த கவிதை





சுவர்க்க வாசல்
போரில் சிதறின பாலகர்களின்
அடுக்கான வரிசைகள்
கைதெறித்தவர்கள் காலிழந்தவர்கள்
வயிறு கிழித்து வீசப்பட்ட
முகம் சிதைந்த சிசுக்கள்
முன்னவரில் பின்னவர் சாய்ந்து தவழ


தேவன் கட்டளையிட்டார்
பூமியில் மறுபடி உயிர்த்தெழுந்து
கருணை மொழி சொல்லித் தர

வரிசை கலைய
எதிர்பட்ட சாத்தான்
ஆறுமாத சிசு ஒன்றின் முதிராத இதயத்திடம்
உதடு வைத்து கேட்டான்
"உங்கள் தாய்மொழி என்ன?"

யாருக்கும் தெரியவில்லை.
மௌனம் இறுகி காற்று நின்றது.
"ஏதாவது பேசுங்களேன்"

கசியும் குருதியை சிசு
தொட்டுக் காட்ட
சாத்தான் மறைந்தான்.

குருதி காயும் தொறும்
தோன்றிச் சொன்னான்

"கேளுங்கள் கேள்விதான் உங்கள் மொழி"

ரத்தத்தின் குழந்தைகள்
நிற்கவே இல்லை
கடைசிச் சொட்டு குருதியை
போட்டல் பூமி உறிஞ்சும்வரை.

வரிசையில் எஞ்சினவன்
ஒரு பாலகன்.

வடுவற்ற முழு உடலாய்
தேவன் திரும்பினார்
தீர்ப்பு நாளன்று

குருதி காணாமல்
வறண்ட பூமி வெடித்தது
தேவன் உடல் சுருங்கிற்று
உயிர் வற்றியது

அக்கணம்
சிறு விரலால்
அவர் நெஞ்சைப் பிறாண்டினான் இறுதி பாலகன்
தேவன் உயிர்த்தார்
முதற்சொட்டு மழையை அறிந்தது
வானம்
பூமி தளும்பியது
மானிடம் விழித்தது.

கண்மூடுமுன் இறுதி பாலகன்
ஒரே முறை தாய்மொழி பேச வாய் திறந்தான்
தேவன்
உயிப்பித்தார் அவனை
மீண்டும்.




Read More

Sunday 9 February 2014

நீயா நானா - ஆண் பெண் நட்பு


ஆண் பெண் நட்பின் சிக்கல் என்ன என நான் பேசிய நீயா நானா
Read More

நீயா நானா - உடல் பருமன் பற்றிய கற்பனைகள்


உடல் பருமன் பற்றிய பயங்கள் மிகைப்படுத்தப்படுகின்றன என்பதை நான் விவாதித்த நீயா நானா
Read More

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates