அவரை பிரெட் என்று தான் அழைத்தார்கள்
அவர் எப்போதுமே பாரின் கடைசி இருக்கையில்
கதவருகே
இருந்தார்.
திறப்பதில் இருந்து மூடும் வரை
அவர் எப்போதுமே
அங்கே தான் இருந்து கொண்டிருப்பார்.
என்னை விட அதிகமாகவே
அங்கே அவர் இருந்தார்,
அது ஒன்றும்
அவர் யாரிடமும்
எப்போதும் பேசினதில்லை.
கோப்பை கோப்பையாய்
குழாய் பியரை குடித்து
அங்கே வெறுமனே இருப்பார்.
பாருக்கு நேர் குறுக்காய்
தனக்கு முன்னார் பார்ப்பார்,
ஆனால் என்றுமே
யாரையுமே அவர் பார்த்ததில்லை.
மற்றொரு விசயமும்
உள்ளது.
அவ்வப்போது
எழுந்து
தானியங்கு இசை பெட்டியிடம்
செல்வார்;
எப்போதுமே
ஒரே இசைத்தட்டை தான் ஓட விடுவார்:
“போனபார்ட்டின் பின்னடைவு”
அந்த பாடலை
இரவு பகலாய்
அவர் ஓட விட்டார்.
அது அவரது பாட்டு,
சரிதான்.
குழாய் பியர்
தலைக்கு ஏறியதும்
அவர் எழுந்து
“போனபார்ட்டின் பின்னடைவை”
ஆறு ஏழு முறைகள்
ஓட விடுவார்.
அவர் யார் என்றோ
எப்படி வாழ்கிறார் என்றோ
யாருக்கும் தெரியவில்லை.
தெருவுக்கு குறுக்காய்
ஒரு விடுதி அறையில்
தங்கி இருந்தார்.
தினமும்
பார் திறந்ததும்
அதன் முதல் வாடிக்கையாளர்
அவர்
என்பதை தவிர
நான் பார் பணியாளர்
கிளைடிடம் எதிர்ப்பு தெரிவித்தேன்
“கேள், அவர்
அதை வைத்து
எங்களை எல்லாம் பைத்தியமாக அடிக்கிறார்
ஒரு கட்டத்தில்
எல்லா இசைத்தட்டுகளும்
சுழற்சி வரிசையில் வருகின்றன
ஆனால்
‘போனபார்ட்டின் பின்னடைவு’
போவதில்லை
இதன் பொருள்
என்ன?”
“அது அவரது பாடல்”
கிளைட் சொன்னார்.
“உங்களுக்கு என்று
ஒரு பாடல் இல்லையா?”
சரி, இன்று நான்
ஒரு மணி போல் உள்ளே வந்தேன்;
வழமையனவர்கள் எல்லாரும்
இருந்தார்கள்
ஆனால் பிரெட் அங்கு
இல்லை
எனக்கான மதுவுக்கு உத்தரவிட்டேன்
பிறகு சத்தமாக கேட்டேன்
“அட இந்த பிரெட்
எங்கே?”
“பிரெட் இறந்து விட்டான்”
கிளைட் சொன்னார்.
பாரின் இறுதி வரை
பார்வையிட்டேன்
திரைச்சீலைகள் ஊடே
சூரியன் இறங்குயது
ஆனால் கடைசி
முக்காலியி;
யாரும் இல்லை.
“என்னிடம் விளையாடுகிறாயா”,
நான் சொன்னேன்
“பிரெட் கழிப்பறைக்கோ
எங்கேயோவாவது
சென்றிருப்பான்”
“இன்று காலை
பிரெட் வரவில்லை” கிளைட்
சொன்னார், “அதனால்
நான அவரது
ஹோட்டல் அறைக்கு சென்று பார்த்தேன்
அங்கே அவர்
இருந்தார்
ஒரு சுருட்டு பெட்டியை
போல்
விறைத்து போய்”
எல்லாரும் மிகவும்
அமைதியானார்கள்
எப்படியும்
அந்த மக்கள்
அதிகம்
பேசுபவர்கள் அல்ல.
“சரிதான்”, நான் சொன்னேன், “குறைந்தது
போனபார்ட்டின் பின்னடைவை
நாம் இனிமேல்
கேட்க வேண்டி இராது”
யாருமே
எதுவும் சொல்லவில்லை.
“அந்த இசைத்தட்டு
இன்னும்
தானியங்கி இசைப்பெட்டியில் தான் உள்ளதா?”
நான் கேட்டேன்.
“ஆமாம்”, கிளைட்
சொன்னார்.
“சரி”, நான் சொன்னேன்,
“நான் அதை மேலும் ஒருமுறை
போடப் போகிறேன்”
நான் எழுந்தேன்
“நிறுத்து”
கிளைட் சொன்னார்.
அவர் பாரை சுற்றி வந்து
தானியங்கி இசைப்பெட்டியிடம்
சென்றார்.
அவர்
கையில்
ஒரு சிறு சாவி இருந்தது.
தானியங்கி இசைப்பெட்டியில்
சாவியை நுழைத்து
அதை
திறந்தார்.
உள்ளே கைவிட்டு
ஒரு இசைத்தட்டை
வெளியே
எடுத்தார்.
பிறகு அந்த
இசைத்தட்டை
தன் முட்டியில்
மோதி உடைத்தார்.
“அது அவரது
பாடல்” கிளைட்
சொன்னார்.
பிறகு அவர்
தனையங்கி இசைப்பெட்டியை பூட்டினார்,
உடைந்த இசைத்தட்டை
பாருக்கு பின்புறம்
கொண்டு சென்று
குப்பையில் எறிந்தார்.
பாரின்
பெயர்
ஜுவல்ஸ்
அது
கெரன்ஷா மற்றும்
ஆடம்ஸில்
இருந்தது
இப்போது
அது
அங்கில்லை
No comments :
Post a Comment