எனக்கு ஒரு நண்பன் இருக்கிறான். பெயரளவில் தான். ஒரு முறை நான் ஆஸ்பத்திரியில் சாகக் கிடக்கும் போது போன் பண்ணினான். நான் மயக்கத்தில் இருந்தேன். என் மனைவியிடம் பேசினான்.
மனைவி: “ஹலோ யாருங்க? அபிலாஷ் கோமாவில இருக்காரு. பேச முடியாது”
நண்பன்: “எனக்கு 22தேதி கல்யாணம் நடக்கப் போவுது. அவனை அழைக்கலாமுன்னு தான் கூப்பிட்டேன்”
மனைவி: “அவரு ரொம்ப சீரியஸா ஆஸ்பத்திரியில இருக்காருங்க.”
நண்பன்: “ஆமா அதுக்குத் தான் கூப்பிட்டேன். எனக்கு கல்யாணம் 22ஆம் தேதி. சொல்லாமுன்னு கூப்பிட்டேன்”
மனைவி: “இல்லை அவருக்கு...”
நண்பன்: “எனக்கு கல்யாணம்...எனக்கு கல்யாணம்...எனக்கு கல்யாணம்”
நான் நலமான பிறகு இதை தெரிந்து கொண்டேன். ஒருவேளை போன் லைனில் ஏதாவது தகராறு இருந்திருக்கலாம். அதனால் தான் அவன் புரியாமல் சொன்னதையே சொல்லி இருப்பான் என நினைத்துக் கொண்டேன். ஆனால் கொஞ்ச நேரத்தில் அதே நண்பன் அழைத்தான்.
“டேய் உன்னை எவ்வளவு நாளா புடிக்க டிரை பண்றேண்டா. இன்னும் ஒரு வாரத்துல எனக்கு கல்யாணம் டா”
“நான் இப்போ தான் உயிருக்கு போராடி பொழைச்சு வந்திருக்கேன். ரெஸ்டில இருக்கேன்”
“அதாண்டா. உனக்கு போன் பண்ணினா நீ பேச மாட்டேங்குற. உன் மனைவி தான் பேசுறா. எனக்கு கல்யாணம்னு உங்கிட்ட சொல்ல ஆசையா வந்தேன்”
“டேய் நான் அப்போ கோமாவில இருந்தேன். எப்பிடி பேச முடியும்?”
“ஆங்...? சரி உனக்கு போன் பண்ணினா நீ எடுக்க மாட்டேங்குற. ஆளை பிடிக்க முடியல. ரொம்ப பெரிய ஆளாயிட்ட இப்போ. சரி எனக்கு கல்யாணம். அதுக்காவது இப்போ வந்து தொலை”
அதுக்கு மேல் முடியாமல் கட் செய்து விட்டேன்.
இந்த அளவுக்கு இல்லையென்றாலும் கிட்டத்தட்ட இதோ போன்ற பலருடன் தினமும் உரையாடி வருகிறேன். “என்னடா மச்சான் எப்படி இருக்க?” அல்லது “வணக்கம் எப்பிடி இருக்கீங்க?” என்று வாஞ்சையாக கூட கேட்பார்கள்/நலம் விசாரிப்பார்கள். நீங்கள் உங்கள் நிலைமையை விவரித்தால் அதை கேட்காமல் தம்மைப் பற்றி பேச ஆரம்பிப்பார்கள். அதெப்படி நான் பேசும் போது மட்டும் உங்களுக்கு காது கேட்காம போகுதுடா?
தயவு செய்து அவரை எல்லாம் (இவர்களை போன்றவர்களிடம்) நண்பர் என்று சொல்லாதீர்கள்... நினைக்காதீர்கள்...
ReplyDelete//அதெப்படி நான் பேசும் போது மட்டும் உங்களுக்கு காது கேட்காம போகுதுடா?//
ReplyDeleteஅது ஒரு தீராத சீக்குங்க. நல்லாகாதுங்க.