Showing posts with label மார்க்வெஸ். Show all posts
Showing posts with label மார்க்வெஸ். Show all posts

Thursday, 18 November 2010

கதை சொல்ல வாழ்கிறேன் (மார்க்வெஸ்): அத்தியாயம் 26



இது என் மனதை இளக்கியது; ஏனெனில் எங்களை மதிய தூக்கத்தில் இருந்து எழுப்பிய கற்களின் வசைமாரி போன்ற அந்த ஒற்றை இடிமுழக்கம் இப்போதும் நினைவில் உள்ளது; ஆனால் அது மூன்று மணிக்கு மட்டுமே நிகழ்ந்தது என்பதை நான் ஒரு போதும் அறிந்திருக்க இல்லை.
பொதுவறை வழிப்பாதைக்குப் பிறகு முக்கிய தருவாய்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்ட வரவெற்பறை இருந்தது; சாதாரண வருகையாளர்கள் அவர்கள் ஆண்களாயிருக்கும் பட்சத்தில் அலுவலகத்திலும், பெண்கள் என்றால் பெகோன்னியேக்கள் கொண்ட பொதுவறை வழிப்பாதையிலும் குளிர்பீருடன் வரவேற்கப்படுவர். பிறகு படுக்கை அறைகளின் புராணிக உலகம் ஆரம்பமாகியது. முதலில் என் தாத்தா பாட்டியின் அறை, தோட்டத்தை எதிர்நோக்கிய ஒரு பெருங்கதவு மற்றும் கட்டுமானத் தேதி (1925) கொண்ட மரச்செதுக்கு ஓவியமுடையது. அங்கு என்னை தூக்குவாரிப் போடும்படியான அதிர்ச்சியை அம்மா வெற்றிகரமான அழுத்தத்துடன் அளித்தாள்: “இங்கே தான் நீ பிறந்தது!”. இது எனக்கு முன்பு தெரிந்திருக்க இல்லை; அல்லது நான் மறந்திருக்கக் கூடும்; ஆனால் அடுத்த அறையில் நான் நான்கு வயது வரை தூங்கின, என் பாட்டி எப்போதும் வைத்திருந்த, மரத்தொட்டிலை கண்டெடுத்தோம். நானதை மறந்து விட்டிருந்தேன்; ஆனால் அதைப் பார்த்த உடனே முதன்முதலாய் அணிந்த சிறு நீலப்பூக்கள் அச்சிட்ட தளராடையில் யாரேனும் வந்து பீயால் ரொம்பின என் டயப்பரை கழற்றி விடும்படி நான் கதறி அழுதது நினைவு வந்தது. மோசசின் கூடையை போன்று சிறிதாயும் பலவீனமாகவும் இருந்த அந்த மரத்தொட்டிலின் கம்பிகளை பற்றிக் கொண்டு தடுமாறியபடியே என்னால் நிற்க முடிந்தது. இது என் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடையே ஒரு வழக்கமான விவாத மற்றும் வேடிக்கை நிமித்தமாக விளங்கியது. இவர்களுக்கு எனது அந்நாளைய வெப்புறாளம் வயதுக்கு மீறின தர்க்க சிந்தனையாக படுகிறது; இதற்கெல்லாம் மேலாய், எனது துயரத்துக்கு காரணம் எனது மலம் மீதான அருவருப்பு அல்ல, எனது தளர் மேலாடையை எங்கே அழுக்காக்கி விடுவேனோ என்ற அச்சமே என்று நான் வற்புறுத்தி சொன்ன பின்னரும் கூட. அதாவது அது ஒரு சுகாதார முன்முடிவு பற்றிய கேள்வியல்ல, மாறாய் அழகியல் அக்கறையே; மேலும் அது என் ஞாபகத்தில் நீடித்துள்ள முறையைக் கொண்டு அதுவே எனது முதல் எழுத்தாள அனுபவம் என்று நம்புகிறேன். அந்த படுக்கை அறையில் நிஜவாழ்க்கை அளவிலான, தேவாலயங்களில் உள்ளவற்றை விட அதிக எதார்த்தமாகவும், துயர வாட்டத்துடனும் தோன்றிய புனிதர்களின் சிலைகள் கொண்ட வழிபாட்டுத்தலம் ஒன்று இருந்தது; அத்தை பிரான்ஸிஸ்கா சிமோபோசியா மெழியா எப்போதும் அங்குதான் தூங்கினாள்; நாங்கள் ஆன்ட் மாமா என்றழைத்த இவர் தாத்தாவின் முதல் அத்தை மகள்; அந்த வீட்டின் தலைமகளாகவும், சீமாட்டியாகவும் தன் பெற்றோரின் மரணத்துக்கு பின் வாழ்ந்திருந்தாள். அனைவரது மரணம் வரையில், அணைக்கப்படாத சாஸ்வத விளக்கின் ஒளியில் கண்சிமிட்டும் புனிதர்களிடத்து கிலி கொண்டு ஒருபக்கம் நான் தொங்கு படுக்கையில் தூங்கினேன்; என் அம்மா கூட திருமணத்துக்கு முன், புனிதர்கள் மீதான பெரும்பீதியால் வதைக்கப்பட்டு, அங்குதான் தூங்கினாள்.
எனக்கு விலக்கப்பட்டிருந்த இரு அறைகள் பொதுவறை வழிப்பாதையின் முடிவில் இருந்தன. முதல் அறையில் என் அத்தைப் பெண் சாரா எமிலியா மார்க்வெஸ் வாழ்ந்தாள்; என் மாமாவுக்கு திருமணத்துக்கு முன் பிறந்த இவள் என் தாத்தா பாட்டியால் வளர்க்கப்பட்டாள். சிறுவயதில் இருந்தே அவளிடம் இருந்த இயல்பான வேறுபாட்டு பண்போடு, ஒரு அற்புதமான கதைகளின் தொகுப்பு என்னிடம் இருந்து உருவாக காரணமாய் என் முதல் இலக்கிய பசியை தூண்டிய ஒரு வலிமையான ஆளுமையையும் அவள் கொண்டிருந்தாள்; சல்லேஜாவால் முழுவண்ண ஓவியங்களுடன் பிரசுரிக்கப்பட்ட அவற்றை நான் அலங்கோலப்படுத்தி விடுவேன் என்று பயந்து அவள் எனக்கு தரவில்லை. இதுவே எழுத்தாளனாய் என் முதல் ஏமாற்ற எரிச்சல். பழைய மரசாமான்கள் மற்றும் காலங்காலமாய் என் குறுகுறுப்பை தூண்டிய ஆனால் என்றுமே எனக்கு திறந்து பார்க்க அனுமதி கிடைக்காத பெரிய பயணப்பெட்டிகளுக்குமான சேமிப்பறையே கடைசி அறையாக இருந்தது. என் அம்மா தன் வகுப்புத் தோழிகளை தன்னுடன் விடுமுறை நாட்களை கழிக்க வீட்டுக்கு அழைத்தபோது, என் தாத்தா பாட்டி வாங்கின எழுபது சிறு நீர்க் கலங்களும் அங்கே பாதுகாக்கப்பட்டிருந்தன என்று நான் பின்னர் அறிந்து கொண்டேன்.
எதிர்நோக்கியபடி அதே பொதுவறை பாதையில் பழங்கால, நகர்த்த ஏதுவான, சுட்ட கல்லாலான மூடு-உலை அடுப்புகள் கொண்ட ஒரு பெரிய அடுக்களை இருந்தது; என் பாட்டியின் பணிக்கான பெரிய மூடு-உலை அடுப்பும் அங்கிருந்தது; அவள் அப்பம் சுடுவதை வாழ்வுப் பணியாய் கொண்ட தலைமை சமையற்காரர்; அவளது சிறு மிட்டாய் மிருகங்களின் சாறு நிரம்பின வாசத்தில் அந்திப் பொழுது தோயும். வீட்டில் வாழ்ந்த அல்லது பணி செய்த பெண்களின் ஆட்சிப் பகுதி அது; என் பாட்டிக்கு பல பணிகளில் உதவி செய்யும் போது அவர்கள் ஒரே குரலில் பாடுவர். மற்றொரு குரல் எங்கள் பாட்டாபாட்டியிடம் இருந்து சொத்தாய் வந்த நூறுவயது கிளி லோரன்சோ மேக்னிபிக்கோவின் உடையது; அது ஸ்பானிய எதிர்ப்பு கோஷங்களை கத்தும், சுதந்திரத்திற்கான போரின் போதான பாடல்களை பாடும். அதற்கு எந்த அளவுக்கு கிட்டப்பார்வை என்றால் ஒரு நாள் ஸ்டியூ தயாராகும் பானையில் விழுந்து, பிறகு நீர் அப்போதுதான் சூடாக ஆரம்பித்திருந்ததால் அற்புதம் எனக்கருதும் படியாக காப்பாற்றப்பட்டது. ஜூலை 20-அன்று மதியம் மூன்று மணிக்கு தனது பீதியிலான கீச்சிடல்கள் கொண்டு வீட்டில் இருப்போரை தூக்கத்தில் இருந்து எழுப்பியது: “காளை, காளை, காளை வருது!” தேசிய விடுமுறையான அன்று ஆண்கள் உள்ளூர் காளைச்சண்டை காண போயிருந்ததால், வீட்டில் பெண்கள் மட்டுமே இருந்தனர்; கிளியின் கத்தல்களை முதுமை தளர்ச்சி காரணமான நினைவிழப்பின் வெறிப்பிதற்றல்களாகவே அவர்கள் கருதினர். சதுக்கத்தில் உள்ள கொட்டகையை உடைத்துக் கொண்டு தப்பித்த ஒரு வெறி பிடித்த காளை அடுக்களைக்குள் படுவேகத்தில் நுழைந்த போது தான் கிளியிடம் பேசத் தெரிந்த வீட்டில் உள்ள பெண்கள் அது எதைப் பற்றி கத்துகிறது என்பதைப் புரிந்து கொண்டனர்; காளை ஒரு நீராவிக் கப்பல் போல் உக்காரமிட்டு தன்னிலை இழந்த கோபவெறியில் அப்பஞ்சுடும் அறையின் சாமான்களை, அடுப்புகள் மேலிருந்த பானைகளை நோக்கி பாய்ந்தது. எதிர்திசையில் போய்க் கொண்டிருந்த நான் அச்சமுற்ற பெண்களின் புயலால் காற்றில் எறியப்பட்டு சேமிப்பறையை அடைந்தேன். ஓடி வந்த காளையின் சமையலறை முழக்கம் மற்றும் சிமிண்டு தரையில் அதன் குளம்புகள் தாவி ஓடின ஒலியும் வீட்டை அதிர வைத்தது. முன்னறிவிப்பு ஏதும் இன்றி காற்று வசதிக்கான கூரை ஜன்னலில் அது தோன்றியது; அதன் அனல் தெறிக்கும் குறுமூச்சுகள் மற்றும் பெரும் சிவப்பேறிய கண்கள் என் ரத்தத்தை உறைய வைத்தன.

அதைக் கையாள்பவர்கள் அதனை காளைப் பட்டிக்குள் திரும்பக் கொண்டு சென்ற போது அந்த அதிரடி நிகழ்வுகளின் வெறியாட்டம் வீட்டில் ஆரம்பித்து விட்டிருந்தது; எண்ணற்ற காப்பிக் கலயங்கள் மற்றும் ஸ்பாஞ்சு கேக்குகளின் துணையுடன் கலவரப்பட்டு பிழைத்தவர்களால் பல்லாயிரம் தடவை திரும்பத் திரும்ப, ஒவ்வொரு தடவையும் முன்னதை விட அதிக சாகசமிக்கதாய், அது கதைக்கப்படும்.

சுற்றுக்கட்டு அத்தனைப் பெரிதாக தெரியவில்லை; ஆனால் பல்வெறுபட்ட மரங்கள், மழை நீர் சேகரிக்கும் சிமிண்டு தொட்டியுடன் கூடிய மூடப்படாத குளியல் தொட்டி மற்றும் மூன்று மீட்டர் உயரத்தை ஒரு பலவீனமான ஏணியில் ஏறி அடைய வேண்டிய உயர்த்தப்பட்ட தளமேடையும் இருந்தன. கைப்பம்பால் என் தாத்தா விடிகாலையில் நிரப்பக் கூடிய இரண்டு பெரும் பீப்பாய்கள் அங்கே வைக்கப்பட்டிருந்தன. அதற்கு அப்பால் கரடுமுரடான பலகைகளினால் எழுப்பப்பட்ட தொழுவம் மற்றும் வேலையாட்கள் குடியிருப்பு இருந்தன; வெகு முடிவில் பழமரங்கள் கொண்ட பிரம்மாண்ட புழக்கடை மற்றும் இரவுபகலாய் செவ்விந்திய வேலைக்காரிகள் வீட்டின் கழிவறைக் கலன்களை காலி செய்யும் ஒரே கழிவறை இருந்தன.

Read More

Monday, 8 November 2010

கதை சொல்ல வாழ்கிறேன் (மார்க்வெஸ்): அத்தியாயம் 25



பலமுறை சொல்லப்பட்ட விவரணையின் படி ஜூலை 20 சுதந்திர நாளின் கொண்டாட்டங்களின் போதான வாணவெடிகள் கூரையில் விழுந்ததில் இந்த வீடு சாம்பலாகி போனது; பற்பல யுத்தங்களின் எந்த வருடத்து சுதந்திர நாள் என்பது யாருக்கும் தெரியாது. மிச்சமானது எல்லாம் சிமிண்டு தரைகளும் பாப்பலேலோ ஒரு அரசு அலுவராய் விளங்கிய பல்வேறு தறுவாய்களில் அவரது அலுவலகமாய் விளங்கிய, தெருவை எதிர்நோக்கிய கதவுடன் கூடிய இரண்டு அறைகளின் தொகுதி மட்டுமே.
அந்த வெப்பம் மாறாத அழிவுகளில் இருந்து குடும்பம் தனது அறுதியான புகலிடத்தை அமைத்தது. பூக்கள் வைத்த மாடமுடைய, குடும்ப மகளிர் அமர்ந்து சட்டங்களில் சித்திரப்பின்னல் இட்டு மாலையின் குளிர்மையில் உரையாடும் பொது அறை வழிப்பாதையில் வரிசையாக எட்டு அறைகள் கொண்ட ஒரு நீண்ட வீடு. அறைகள் ஒன்றோடொன்று வேறுபடாது எளிமை ஆனவை; ஆனால் அவற்றின் கணக்கற்ற விரங்கள் ஒவ்வொன்றிலும் என் வாழ்வின் அதிமுக்கிய கணம் ஒன்று உள்ளதை அறிய எனக்கு ஒரு ஒற்றை கண்ணோட்டம் போதுமானதாக இருந்தது,
முதல் அறை வரவேற்பறை மற்றும் என் தாத்தாவின் தனிப்பட்ட அலுவலகமாக விளங்கியது. அதில் ஒரு நழுவுமூடி மேசை, பஞ்சுத்திணித்த உறை கொண்ட சுழல்நாற்காலி, ஒரு மின்விசிறி மற்றும் ஒரு ஒற்றை பிரம்மாண்ட கந்தலான புத்தகம் ஸ்பானிஷ் மொழி அகராதி வைத்திருக்கும் ஒரு காலி புத்தக அலமாரியும் இருந்தன. அதற்கு வலது பக்கம் என் தாத்தா தனது சிந்த மணி நேரங்களை செலவழித்து திரும்பும் உடல்களும், சிறிய மரகத கண்களும் உடைய சிறு தங்க மீன்கள் உருவாக்கும் பட்டறை இருந்தது; இம்மீன்கள் அவருக்கும் உணவை விட அதிக ஆனந்தம் கொடுத்தது. சில குறிப்பிடத்தக்க முக்கியஸ்தர்கள் அங்கே வரவேற்கப்படனர், குறிப்பாய் அரசியல்வாதிகள், வேலையற்ற அரசு அதிகாரிகள் மற்றும் மூத்த போர் வீரர்கள். அவர்கள் இடையே பலதரப்பட்ட தருணங்களில் இரு வரலாற்று சிறப்புடைய விருந்தாளிகளும்: தளபதிகள் ராபேல் உரிபே மற்றும் பெஞ்சமின் ஹெரேரா; இவ்விருவரும் எங்கள் குடும்பத்தோடு மதிய உணவு அருந்தி உள்ளனர். ஆனால் என் பாட்டி உரிபே உரிபே பற்றி தன் வாழ்நாளின் மிச்சமெல்லாம் நினைவு கூர்ந்தது மேஜையில் அவரது மிதத்தன்மையை பற்றியே” “அவர் ஒரு பறவையைப் போல உணவருந்தினார்”.
எங்களது கரீபியன் கலாச்சாரம் காரணமாக அலுவலகம் மற்றும் பட்டறை இருந்த பகுதி பெண்களுக்கு விலக்கப்பட்டதாக இருந்தது; நகரத்து உணவு மற்றும் மது விடுதிகள் பெண்களுக்கு சட்டப்படி விலக்கப்பட்டிருந்ததை போன்றே இருந்தும் காலப்போக்கில் அது ஒரு மருத்துவமனை அறையாக மாற்றப்பட்டது; அங்கு அத்தை பெட்ரா காலமானாள்; பாப்பலேலோவின் சகோதரி வெனேபிரீடா மார்க்வெஸ் தனது நீண்ட நோய்மையின் கடைசி மாதங்களை கழித்தாள். என் பால்யத்தில் அந்த வீட்டினுள் கடந்து சென்றிருந்த பல வீட்டுப் பெண்கள் மற்றும் தற்காலிக பெண்களின் காற்றுப் புகாத சுவர்கபுரி இவ்வாறு ஆரம்பம் கொண்டது. இரு உலகங்களின் வசதிகளை அனுபவித்த ஒரே ஆண் நான் மட்டுமே. பெண்கள் தையலிட அமரும் மாடமும், தினமும் மதிய ரயிலில் வரும் எதிர்பாக்கப்பட்ட அல்லது எதிர்பாராத பதினாறு விருந்தாளிகளுக்கான மேஜையும் உடைய உணவறை பொது அறை வழிப்பாதையின் விரிவான ஒரு பகுதி மட்டுமே. அங்கிருந்து அம்மா உடைந்த பேகோனியே பூந்தொட்டிகள், அழுகின அறுவடை வயல், எறும்புகளால் அரிக்கப்பட்டு மீதமான மல்லிகைத் தண்டு ஆகியன பற்றி சிந்தனையில் ஆழ்ந்து பெருமூச்சு விட்டாள்.
மல்லிகைப் பூக்களின் சூடான நறுமணம் தாங்க முடியாது எங்களுக்கு சில நேரங்களில் மூச்சுத் திணறும்”. அவள் வண்ண மயமான ஆகாயத்தை நோக்கியவாறு சொன்னாள்; ஆழ்மனதில் இருந்து ஏக்கப் பெருமூச்சு விட்டாள். “ஆனால் அப்போதில் இருந்து நான் ரொம்ப ஏங்கியது அந்த மூன்று மணி இடியோசைக்காகத் தான்”
Read More

Monday, 1 November 2010

கதை சொல்ல வாழ்கிறேன் (மார்க்வெஸ்): அத்தியாயம் 24





 கதவு சற்று திறக்க மிகத் தயக்கமான முறையில் நிழல்களில் இருந்து ஒரு பெண் கேட்டாள்: “என்ன வேண்டும்?
ஒருவேளை பிரக்ஞையற்ற, அதிகாரத்துடன் அம்மா பதிலுரைத்தாள்: “ நான் லூயிசா மார்க்வெஸ்
பிறகு தெருக்கதவு முழுக்கவே திறந்தது, அதோடு இரங்கல் ஆடையில் ஒரு வெளிறிய, எலும்புகள் புடைத்த பெண் தோன்றி ஆவி உலகத்தில் இருந்து எங்களைப் பார்த்தாள். உள்ளறையின் பின்னில் இருந்து மேலும் ஒரு முதிய மனிதர் நிரந்தர நோயாளியின் நாற்காலியில் ஆடினார். பல வருடங்களுக்குப் பின் இந்த வீட்டை வாங்க விருப்பம் தெரிவித்த குடியிருப்போர் இவர்கள் தாம்; ஆனால் அவர்களிடம் வாங்குவோருக்கான தோரணை இல்லை; மேலும் யாருக்கும் ஆர்வம் ஏற்படுத்தும் நிலைமையில் வீடு இல்லை. என் அம்மாவுக்கு கிடைத்த தந்தியின் படி குடியிருப்போர் பாதி விலையை பணமாக தர ஏற்றுக் கொண்டிருந்தனர்; அதற்கு அவள் ரசீது ஒப்பிட்டுத் தர வேண்டும்; மிச்சப் பணம் வருட முடிவில் ஒப்பந்தங்கள் முடிவான பின் தரப்படும்; ஆனால் ஒரு வருகை ஏற்பாடாகியது யாருக்கும் நினைவில்லை. செவிடர்களுக்கு இடையிலான ஒரு நீண்ட உரையாடலுக்கு பின், எவ்வித உடன்படிக்கையும் நிலுவையில் இல்லை என்பது மட்டும் தெளிவானது. இந்த மூடச்செயல் மற்று பயங்கர வெக்கையால் ஆட்கொள்ளப்பட்டு என் அம்மா வியர்வையில் குளித்து சுற்றுமுற்றும் குறும்பார்வை இட்டாள். பிறகு பெருமூச்சு விட்டாள்.
“இந்த பாவம் வீடு ரொம்ப நாட்கள் தாங்காது
“அதை விட மோசமாக உள்ளது”, அந்த மனிதர் சொன்னார், “இது எங்களைச் சுற்றி இடிந்து விழவில்லை என்றால் அது நாங்கள் பராமரிக்க செய்த செலவினால் தான்.
வாடகையிலிருந்து கழிக்கப்பட்டவை போக நாங்கள் அவர்களிடம் கடன்பட்டுள்ளதாய் கொள்ளும்படி சீர்செய்யும் வேலைகளுக்கான ஒரு பட்டியல் அவர்களிடம் இருந்தது. சிரமமே இல்லாமல் எப்போதும் அழக்கூடிய என் அம்மாவால் வாழ்வின் பொறிகளை சந்திக்கும் பயங்கர தைரியம் காட்டவும் முடியும். அவள் நன்றாக விவாதித்தாள்; நான் குறிக்கிட இல்லை, ஏனெனில் முதல் திடுக்கிடலுக்கு பின் வாங்குபவர்களின் நியாயம் சரி என்று புரிந்தது. தந்தி செய்தியில் விற்பனைக்கான நாள் மற்றும் முறை பற்றி தெளிவா ஏதுமில்லை; இருந்தும் அது ஏற்பாடு செய்யப்பட்டதாய் புரிந்து கொள்ளப் பட்டது. எங்கள் குடும்பத்தின் ஊகிக்கும் பணிக்கு வழக்கமானதே இந்த சூழ்நிலை. தந்திச்செய்தி வந்த அதே கணத்தில் உணவு மேஜையில் இந்த முடிவு எப்படி எடுக்கப்பட்டிருக்கும் என்று என்னால் கற்பனை செய்ய முடிகிறது. என்னையும் சேர்க்காமல், சம உரிமைகளோடு பத்து சகோதரிகள் மற்றும் சகோதரர்கள் இருந்தனர். இறுதியில் அம்மா சில பிசோக்களை அங்கிங்காய் சிரமப்பட்டு சேகரித்து தனது பள்ளிக்கூட பையை கட்டி திரும்ப வருவதற்கான கட்டணம் தவிர வேறேதுமின்றி கிளம்பி விட்டாள்.

ஆரம்பத்தில் இருந்து எல்லாவற்றிலும் என் அம்மாவும் அந்த பெண்ணும் திரும்ப பேசினர்; அரைமணி நேரத்துக்கு எந்த ஒப்பந்தமும் இல்லை என்று நாங்கள் முடிவு செய்து விட்டோம். வீட்டின் மீதான பணய உரிமை ஒன்றும் இந்த மாற்றம் இல்லாத முடிவுகளில் சேரும்; ஒரு உறுதியான விற்பனை பல வருடங்களுக்குப் பின் ஒரு வழியாக நடக்கும் வரை அது சரிசெய்யப் படவில்லை. ஆக அதனால் அப்பெண் அதே கொடிய விவாதத்தை மற்றொரு முறை திரும்ப செய்ய முயன்ற போது அம்மா தனது வசீகரமற்ற முறையில் அதிரடி நடவடிக்கைகளை பயன்படுத்தினாள்.
இந்த வீடு விற்பனைக்கு அல்ல”, அவள் சொன்னாள், நாங்கள் இங்கே பிறந்தோம், இங்கே தான் இறப்போம் என்பதை நினைவு கொள்வோமாக
மதியத்தின் மிச்சத்தை அந்த பேய்வீட்டில் பழைமை ஏக்க நினைவுகளை அசை போட்டு திரும்பச் செல்லும் ரயில் வரும் வரை செலவழித்தோம். அவை எல்லாம் எங்களுடையதே; ஆனால் தெருவை எதிர்நோக்கிய என் தாத்தாவின் அலுவலக அறைகளாக விளங்கின அலுவலக பகுதி மட்டுமே புழக்கத்தில் இருந்தது. மிச்சம் எல்லாம் பல்லிகளின் கருணைக்கு விடப்பட்ட சிதைந்து போகும் சுவர்களும் துருப்பிடித்த தரகக் கூரைகளும் கொண்ட ஒரு ஓடு மட்டுமே. வாசலில் அதிர்ச்சியுற்ற என் அம்மா தனது தீர்மானமான முறையில் கூவினாள்: “இது அந்த வீடு அல்ல”. ஆனால் அது எதுவென்று அவள் சொல்லவில்லை; ஏனெனில் என் பால்யத்தின் போக்கில் அது எந்த அளவுக்கு மாறுபட்ட முறைகளில் விவரிக்கப் பட்டதென்றால் குறைந்த பட்சம் சொல்பவருக்கு ஏற்றபடி வடிவமும் திசையும் மாறுகின்ற. மூன்று வீடுகள் இருந்தன. நிஜமான வீடு என் பாட்டி தன் பழிப்பு பாணியில் சொல்ல நான் கேட்டதுபடி ஒரு செவ்விந்தியக் குடில். இரண்டாவது, என் தாத்தா பாட்டியால் கட்டப்பட்டது; மூங்கில் மற்றும் சேற்றால் கட்டப்பட்டு ஒரு கசப்பு பனைமரக்கூரை கொண்டது; பெரிய நன்கு வெளிச்முள்ள ஓய்வறை, பளீர் வண்ணப்பூக்கள் கொண்ட மொட்டை மாடியைப் போன்ற ஒரு உணவருந்தும் அறை, இரண்டு படுக்கை அறைகள், ஒரு பிரம்மாண்ட செஸ்னட் மரம் கொண்ட முற்றம், நன்கு பராமரிக்கப்பட்ட ஒரு தோட்டம் மற்றும் ஆடுகள் பன்றிகள் மற்றும் கோழிகளோடு அமைதியான தோழமையுடன் வாழ்ந்த ஒரு கால்நடைப்பட்டி ஆகியவற்றையும் அது கொண்டிருந்தது.
Read More

Saturday, 16 October 2010

கதை சொல்ல வாழ்கிறேன் (மார்க்வெஸ்): அத்தியாயம் 23



“எல்லாவற்றிலும் மோசம் என்ன என்றால்”, அவள் சொன்னாள், “ நாங்கள் இவனுக்கு உதவ செய்த தியாகங்களுக்கு எல்லாம் பிறகு இவன் சட்டப்படிப்பை நிறுத்தி விட்டான்”.
ஆனால் ஒருவரை ஆட்கொள்ளும் பணிக்கான அற்புதச் சான்று இது என்று மருத்துவர் கருதினார்: அன்போடு போட்டியிட முடியக் கூடிய ஒரே சக்தி. மற்றும் எல்லாவற்றையும் விட, அனைத்திலும் மிகப்புதிரான, ஒருவர் திரும்ப எதையும் எதிர்பாராமல் தன் முழுவாழ்வையும் அர்ப்பணம் செய்ய வேண்டிய கலைப்பணி அது. “ஒருவர் பிறந்த அந்த கணத்தில் இருந்தே உள்ளுக்குள் சுமக்கும் ஒன்று அது; அதை எதிர்ப்பது ஒருவரது ஆரோக்கியத்துக்கு மிகவும் கெடு”, அவர் சொன்னார். ஒரு திருத்த முடியாத பிரீமேசனது மந்திரப்புன்னகையுடன் இறுதி ஒப்பனை பூச்சுகள் செய்தார், “ஒரு பாதிரியின் பணி இது போலத்தான் இருக்க வேண்டும்”. என்னால் ஒருபோதும் தெளிவுபடுத்த முடிந்திராத ஒன்றை அவர் விளக்கிய பாணி கண்டு அசந்து போனேன். அம்மாவும் இப்படி உணர்ந்திருக்க வேண்டும்; னெனில் அவர் என்னை மெதுவான மௌனத்துடன் நோக்கினாள்; தன் விதியிடம் சரணனைந்தாள்.
உன் அப்பாவிடம் இதை எல்லாம் சொல்ல சிறந்த வழி என்ன?”,அவள் என்னைக் கேட்டாள்.
“இப்போது நாம் கேட்டபடியே தான்”, நான் சொன்னேன்.
“இல்லை இது எந்த பயனும் தராது”, அவள் சொன்னாள். மேலும் யோசித்த பிறகு முடிவாய் சொன்னாள்: “ஆனால் நீ கவலைப்படாதே, அவரிடம் சொல்வதற்கு ஒரு நல்ல வழியை கண்டுபிடிக்கிறேன்
அவள் அப்படி செய்தாளா என்று எனக்குத் தெரியாது, ஆனால் அதுவே அவ்விவாதத்தின் முடிவாய் அமைந்தது. இரண்டு கண்ணாடித் துளிகள் போல் இரு மணிச்சத்தங்களால் கடிகாரம் மணி சொன்னது; அம்மா அதிர்ந்தாள்: “கடவுளே”, அவள் சொன்னாள், “எதற்கு வந்தோம் என்பதையே மறந்து விட்டேன்”, அவள் எழுந்து நின்றாள்.
“நாங்கள் போக வேண்டும்”.
தெருவுக்கு குறுக்கே உள்ள வீட்டின் மீதான என் முதல் பார்வைக்கு என் ஞாபகத்துடன் அவ்வளவாய் தொடர்பில்லை; என் நினைவு ஏக்கத்துடன் ஏதுமே இல்லை. ஆண்டுகளாய் ஐயமற்ற நினைவுச் சின்னங்களாய் விளங்கின இரு காவல் வாதாம் மரங்கள் வேரோடு வெட்டப்பட்டிருந்தன. சுட்டெரிக்கும் சூரியனுக்கு கீழ் எஞ்சியதெல்லாம் ஒரு பாதி ஓட்டுக் கூரையுடன் 30 மீட்டர்களுக்கு மேலாக வராந்தா, ஒரு பொம்மை வீட்டை நினைவூட்டியடி, மறுபாதி கரடுமுரடான மரப்பலகைளால் அமைக்கப்படிருந்தது. மூடப்பட்ட கதவில் அம்மா சில பொதுவான தட்டல்கள் தட்டினாள்; பிறகு சில சத்தமான தட்டல்கள்; பிறகு ஜன்னல் வழி கேட்டாள்: “வீட்டில் யாரும் இல்லையா?

Read More

Sunday, 10 October 2010

கதை சொல்ல வாழ்கிறேன் (மார்க்வெஸ்): அத்தியாயம் 22




என் அம்மா கவனித்தாள்; உடனடியாக மருத்துவரின் ஆதரவை வேண்டினாள், “யோசித்து பாருங்கள் தோழரே, அவள் சொன்னாள், “அவனுக்கு எழுத்தாளனாக வேண்டுமாம்”. மருத்துவரின் முகத்தின் அவர் கண்கள் பிரகாசித்தன. “எத்தனை அற்புதமானது தோழி!, அவர் சொன்னார், “அது இறைவனின் வரப்பிரசாதம் அல்லவா”. பிறகு என்னிடம் திரும்பினார், ‘கவிதையா?
“ நாவல்கள் மற்றும் கதைகள்”, நான் பதற்றத்துடன் சொன்னேன். அவர் உற்சாகமுற்றார், “டோனா பார்பரா படித்திருக்கிறாயா?”. நிச்சயமாய், நான் பதிலளித்தேன், “அதோடு ரோமுலா கேலிகோஸ் எழுதிய எல்லாவற்றையும்”. ஒரு திடீர் உத்வேகத்தால் புத்தூக்கம் பெற்றது போல் அவர் மராகெய்போவில் உரையாற்றின போது அவரை சந்தித்துள்ளதாக சொன்னார்; அவர் தனது நூல்களுக்கு தகுதியாக தோற்றம் கொண்டராக தெரிந்தார். நிஜம் என்னவென்றால் மிஸ்ஸிஸிப்பி தொடர் நாவல்களுக்கான என் 104 டிகிரி ஜுரத்தோடு எங்கள் உள்ளூர் நாவலின் மையதையல்களை பார்க்க ஆரம்பித்திருந்தேன்.
என் பால்யகால பயங்கரமாக விளங்கின அந்த மனிதருடன் இத்தனை எளிய நட்பார்ந்த உரையாடல் நிகழ்வது எனக்கு ஒரு அற்புதமாக பட்டது. அவரது உற்சாக போக்கோடு செல்ல நானும் தலைப்பட்டேன். “லா ஜிராபா அல்லது தெரி ஜிராப்” --  எல் ஹெரால்டாவில் எனது தினசரி விமர்சன பத்தி பற்றி சொன்னேன்; பிரமாதமான எதிர்பார்ப்புகளுடன் ஒரு பத்திரிகையை மிக விரைவில் நான் பிரசுரிக்க தலைப்படும் தகவலையும் சொன்னேன். மேலும் அதிக உறுதி பெற்று, அந்த திட்டம் பற்றி அவரிடம் கூறி, அதற்கு பரிந்துரைக்கப்பட்ட பெயரைக்க் கூட சொன்னேன்: குரோனிக்கா.
தரைமுதல் கால் வரை ஆராய்ந்து பார்த்தார். நீ எப்படி எழுதுவாய் என்று எனக்கு தெரியாது”, அவர் சொன்னார், “ஆனால் இப்போதே ஒரு எழுத்தாளர் மாதிரித்தான் பேசுகிறாய். அம்மா அவசரமாக உண்மையை விளக்கினாள்: எனக்கு திடமா டித்தளத்தை தரும் பல்கலைக்கழக கல்வியை நான் தொடர்ந்து படிக்கும் பட்சத்தில், நான் எழுத்தாளன் ஆவதை யாரும் எதிர்க்கவில்லை, மருத்துவர் எல்லாவற்றையும் சுருக்கமாக முடித்து, என் எழுத்தாள தொழில் பற்றி பேசினார். அவரும் எழுத்தாளராக விரும்பினார். ஆனால் அவர் பெற்றோர் என் அம்மா பயன்படுத்தும் அதே வாதங்களைக் கொண்டு அவரை, ராணுவ வீரராக்க முடியாத பட்சத்தில், மருத்துவம் படிக்க கட்டாயப்படுத்தினார். “ஆக, பாருங்கள் தோழி, அவர் தீர்மானமாக சொன்னார், “ நான் ஒரு மருத்துவன். இங்கே இதோ நான் எத்தனை நோயாளிகள் கடவுள் விருப்பப்படியோ அல்லது என் மருந்துகளின் காரணமாகவோ இறந்து போயினர் என்பது தெரியாமல் இருக்கிறேன்”. அம்மா வாயடைத்து போனாள்.
Read More

Friday, 2 July 2010

கதை சொல்ல வாழ்கிறேன் (மார்க்வெஸ்): அத்தியாயம் 21


ஒரே உறுதிப்பாடு அவர்கள் எல்லாவற்றையும் தங்களோடு கொண்டு போயினர் என்பதே: பணம், டிசம்பர், ரொட்டிக் கத்தி, மதியம் மூன்று மணிக்கு முழங்கும் இடி, மல்லிகை வாசம், காதல். மிச்சம் இருந்தது எல்லாம் தூசு படிந்த வாதாம் மரங்கள், அலையதிர்வு கொள்ளும் தெருக்கள் மற்றும் நினைவுகளால் நிலைகுலைந்த, பேச்சில் அமர்த்தலான மக்கள் குடியுருக்கும், துருபிடிக்கும் தகரக்கூரை கொண்ட, மரவீடுகள். தகரக் கூரையில் தெறிக்கும் மழை போன்ற கூர்மையான தடதட ஒசை கேட்டு நான் வியப்புற்ற போது தான் அந்த மதிய வேளையில் டாக்டர் என்னிடம் முதன்முறையாக் கவனம் காட்டினார். “அவை வான்கோழிகள்”, அவர் என்னிடம் சொன்னார்; பிறகு மூடியிருந்த கதவை நோக்கி தன் அயர்வான சுட்டுவிரலால் சுட்டி முடிவாக சொன்னார், “ராத்திரியில் படு மோசம், ஏன் என்றால் தெருக்களில் மேலும் கீழுமாக ஆவிகள் நடமாடுவதை கேட்கலாம்”


அவர் எங்களை மதிய உணவருந்த வேண்டினார்; நாங்கள் அதை ஏற்றுக் கொள்ளாதிருக்க எந்த காரணமும் இல்லை; ஏன் என்றால் வீட்டு விற்பனையில் சம்பிரதாயங்கள் மட்டுமே எஞ்சியிருந்தன. குடியிருப்போர் தாம் வாங்குபவர்கள்; தந்திச்செய்தி வழி விபரங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டாகி விட்டன. எங்களுக்கு நேரம் இருக்குமா? “தேவைக்கு அதிகமாகவே”, அட்ரியானா சொன்னாள், “அதோடு ரயில் வண்டி எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாதே?”

ஆக, நாங்கள் அவர்களுடன் ஒரு உள்ளூர் உணவை பகிர்ந்தோம்; அதன் எளிமைக்கு அவர் உணவு மேஜையில் மட்டுமல்லாது வாழ்வின் எல்லா நடவடிக்கைகளுக்கும் கண்டிப்பாய் பயின்று வந்த மிதத்தன்மையின் திட்டமுறையை தவிர ஏழ்மையுடன் எந்த உறவும் இல்லை. சூப்பை சுவைத்த அந்த கணத்தில் இருந்தே ஒரு முழுமையான தூங்கும் உலகம் என் ஞாபகத்தில் விழித்தெழும் புலனுணர்வு ஏற்பட்டது. ஒவ்வொரு கரண்டி சூப்போடும் பால்யகாலத்தில் எனதாக இருந்து நகரை விட்டு போன பின்னர் நான் தொலைத்து விட்ட சுவைகள் முழுதாக திரும்ப வந்தன; அவை என் இதயத்தை கவ்வின.



மருத்துவருடனான உரையாடலின் ஆரம்பத்தில் இருந்தே அவரை ஜன்னல் வழி கேலி செய்த போதான அதே வயதில் நான் இருப்பதாக தோன்றியது; ஆகையால் அவர் என் அம்மாவிடம் காட்டின அதே தீவிரம் மற்றும் பிரியத்துடன் என்னிடம் பேசும் போது என்னை பயமுறுத்தினார். பாலகனாக இருக்கையில் என் குழப்பத்தை தொடர்ச்சியாக படபடவென கண்சிமிட்டி மறைப்பேன். மருத்துவர் அவ்வாறு பார்க்கும் போது அந்த கட்டுபடுத்த முடியாத தன்னியல்பு செயல்பாடு எதிர்பாராமல் என்னில் திரும்பியது. வெக்கை பொறுக்க முடியாமல் இருந்தது. இந்த நட்புக்கினிய, நினைவேக்கம் கொண்ட முதியவர் என் பால்யகால பீதியாக எப்படி விளங்கினார் என்று என்னையே கேட்டபடி நான் உரையாடலின் ஓரமாகவே சிறிது நேரம் இருந்தேன். பிறகு, ஒரு நீண்ட இடைவேளை மற்றும் முக்கியமற்ற குறிப்புணர்த்தல்களுக்கு பின் என்னை நோக்கினார், “ஆக நீதான் அந்த மாட்சிமை பொருந்திய கெபிட்டோ”, அவர் சொன்னார், “ நீ என்ன படிக்கிறாய்?” ஒரு பேயடித்த நிலையில் என் படிப்பை விவரிப்பதன் மூலம் என் குழப்பத்தை மறைத்தேன். அரசு விடுதிப்பள்ளியில் நல்ல படித்தரங்களுடன் முடித்த மேல்நிலை இளங்கலைப் பட்டம், இரண்டு வருடங்கள் மற்றும் மூன்று மாதங்கள் ஒழுங்கில்லாத சட்டப்படிப்பு மற்றும் செயல்-அறிவு பத்திரிகைப் பணி;
Read More

Tuesday, 8 June 2010

கதை சொல்ல வாழ்கிறேன் (மார்க்வெஸ்): அத்தியாயம் 20


யுவான் வெசெண்டே கோமெஸ்ஸின் காட்டு மிராண்டி சர்வாதிகாரத்தில் இருந்து தப்பிக்க லா குவாஜிராவின் எல்லையை தாண்ட இயன்ற எண்ணற்ற வென்சில்வேனியர்களில் ஒருவராய் அவர் இந்நகரத்துக்கு நூற்றாண்டின் ஆரம்பத்தில் வந்திருந்தார். இரு முரண்சக்திகளால் செலுத்தப்பட்டவர்களில் முதல்வராய் அந்த மருத்துவர் இருந்தார்: சர்வாதிகாரியின் வெஞ்சினம் மற்றும் எங்களது வாழைப்பழ செல்வசெழிப்பு பற்றின மாயத்தோற்றம். வந்ததில் இருந்தே தனது நோய் கண்டறியும் பார்வைப்புலன் மற்றும் – அப்போது பரவலாய் சொல்லப்பட்டது போல் – ஆத்மாவுக்கான நன்னடத்தைகளுக்காக பேர் பெற்றார். எனது தாத்தாபாட்டியினரின் வீட்டுக்கு மிக அடிக்கடி வருகை தருபவர்களில் அவர் ஒருவர்.; புகைவண்டியில் யார் வரபோகிறார்கள் என்று தெரியாது என்பதால் விருந்து மேஜை எப்போதும் தயாராக வைக்கப்பட்டிருக்கும். அவரது மூத்த குழந்தைக்கு என் அம்மா ஞானஸ்தான அம்மா; தாத்தா அதற்கு தற்காப்பு கற்றுத் தந்தார். பின்னர் ஸ்பானிய உள்நாட்டு போரில் நாடு கடத்தப்பட்டவர்களுடன் தொடர்ந்து நான் வளர்ந்தது போலவே, இவர்களின் இடையே நான் வளர்ந்தேன்.


பாலகனாய் இருக்கையில் இந்த மறக்கப்பட்ட குடியொதுக்கப் பட்டவர் என் மீது ஏற்படுத்திய கிலியின் மிச்சம் மீதி அம்மாவும், நானும் அவர் கட்டிலுக்கு அடுத்தபடியாய் அமர்ந்து நகரைத் தாக்கி விட்டிருந்த அந்த துன்பியல் நிகழ்வின் விவரங்களை கேட்கையில் நீர்மூலமானது. அவரது நினைவைத் தூண்டும் ஆற்றலின் தீவிரம் எவ்விதம் என்றால் வெக்கையால் மங்கலாகிப் போன அவ்வறையில் அவரால் விவரிக்கப்பட்ட ஓவ்வொன்றும் காட்சி வடிவம் பெறுவதாய் பட்டது. இன்னல்கள் அனைத்துக்கும் ஊற்றுக்கண், நிச்சயமாய், தொழிலாளர்கள் சட்ட-ஒழுங்கு சக்திகளால் படுகொலை செய்யப்பட்டது தான்; ஆனால் அந்த வரலாற்று உண்மை சார்ந்து சில ஐயங்கள் அப்போதும் நீடித்தன: இறந்தது மூவரா மூவாயிரமா? ஒருவேளை அத்தனை பேர்கள் இருக்க மாட்டார்கள்; ஆனால் ஜனங்கள் தங்கள் துக்கத்திற்கு ஏற்றபடி எண்ணிக்கையை உயர்த்தினர். இப்போது நிறுவனம் ஒரேயடியாக போயாகி விட்டது. “வெள்ளையர்கள் இனி ஒருபோதும் திரும்பி வரமாட்டார்கள்“, அவர் சொல்லி முடித்தார்.
Read More

Sunday, 23 May 2010

கதை சொல்ல வாழ்கிறேன் (மார்க்வெஸ்): அத்தியாயம் 19




என் தனிப்பட்ட மாயாவி அவர்தான். தனியாய் என்றால், அவர் வீட்டை கடக்காதிருக்க ரொம்பவே சுற்றி போவேன். முதியவர்களுடன் என்றால், அவரது மருந்தகத்தை ஒரு திருட்டுப்பார்வை இட துணிவேன். அட்ரியானா அங்கு கவுன்டருக்கு பின்னால் தையற்பொறியில் தன் ஆயுட் தண்டனையை கழிப்பதை காண்பேன்; படுக்கையறை ஜன்னல் வழி அவர் மூர்க்கமான உந்துதல்களோடு தொங்குபடுக்கையில் ஊஞ்சலாடுவதை பார்ப்பேன்; என்னை மயிர்க்கூர்ச்செறிய வைக்க அதுவே போதுமானதாக இருக்கும்.

யுவான் வெசெண்டே கோமெஸ்ஸின் காட்டு மிராண்டி சர்வாதிகாரத்தில் இருந்து தப்பிக்க லா குவாஜிராவின் எல்லையை தாண்ட இயன்ற எண்ணற்ற வென்சில்வேனியர்களில் ஒருவராய் அவர் இந்நகரத்துக்கு நூற்றாண்டின் ஆரம்பத்தில் வந்திருந்தார். இரு முரண்சக்திகளால் செலுத்தப்பட்டவர்களில் முதல்வராய் அந்த மருத்துவர் இருந்தார்: சர்வாதிகாரியின் வெஞ்சினம் மற்றும் எங்களது வாழைப்பழ செல்வசெழிப்பு பற்றின மாயத்தோற்றம். வந்ததில் இருந்தே தனது நோய் கண்டறியும் பார்வைப்புலன் மற்றும் – அப்போது பரவலாய் சொல்லப்பட்டது போல் – ஆத்மாவுக்கான நன்னடத்தைகளுக்காக பேர் பெற்றார். எனது தாத்தாபாட்டியினரின் வீட்டுக்கு மிக அடிக்கடி வருகை தருபவர்களில் அவர் ஒருவர்.; புகைவண்டியில் யார் வரபோகிறார்கள் என்று தெரியாது என்பதால் விருந்து மேஜை எப்போதும் தயாராக வைக்கப்பட்டிருக்கும். அவரது மூத்த குழந்தைக்கு என் அம்மா ஞானஸ்தான அம்மா; தாத்தா அதற்கு தற்காப்பு கற்றுத் தந்தார். பின்னர் ஸ்பானிய உள்நாட்டு போரில் நாடு கடத்தப்பட்டவர்களுடன் தொடர்ந்து நான் வளர்ந்தது போலவே, இவர்களின் இடையே நான் வளர்ந்தேன்.
பாலகனாய் இருக்கையில் இந்த மறக்கப்பட்ட குடியொதுக்கப் பட்டவர் என் மீது ஏற்படுத்திய கிலியின் மிச்சம் மீதி அம்மாவும், நானும் அவர் கட்டிலுக்கு அடுத்தபடியாய் அமர்ந்து நகரைத் தாக்கி விட்டிருந்த அந்த துன்பியல் நிகழ்வின் விவரங்களை கேட்கையில் நீர்மூலமானது. அவரது நினைவைத் தூண்டும் ஆற்றலின் தீவிரம் எவ்விதம் என்றால் வெக்கையால் மங்கலாகிப் போன அவ்வறையில் அவரால் விவரிக்கப்பட்ட ஓவ்வொன்றும் காட்சி வடிவம் பெறுவதாய் பட்டது. இன்னல்கள் அனைத்துக்கும் ஊற்றுக்கண், நிச்சயமாய், தொழிலாளர்கள் சட்ட-ஒழுங்கு சக்திகளால் படுகொலை செய்யப்பட்டது தான்; ஆனால் அந்த வரலாற்று உண்மை சார்ந்து சில ஐயங்கள் அப்போதும் நீடித்தன: இறந்தது மூவரா மூவாயிரமா? ஒருவேளை அத்தனை பேர்கள் இருக்க மாட்டார்கள்; ஆனால் ஜனங்கள் தங்கள் துக்கத்திற்கு ஏற்றபடி எண்ணிக்கையை உயர்த்தினர். இப்போது நிறுவனம் ஒரேயடியாக போயாகி விட்டது. “வெள்ளையர்கள் இனி ஒருபோதும் திரும்பி வரமாட்டார்கள்“, அவர் சொல்லி முடித்தார்.

ஒரே உறுதிப்பாடு அவர்கள் எல்லாவற்றையும் தங்களோடு கொண்டு போயினர் என்பதே: பணம், டிசம்பர், ரொட்டிக் கத்தி, மதியம் மூன்று மணிக்கு முழங்கும் இடி, மல்லிகை வாசம், காதல். மிச்சம் இருந்தது எல்லாம் தூசு படிந்த வாதாம் மரங்கள், அலையதிர்வு கொள்ளும் தெருக்கள் மற்றும் நினைவுகளால் நிலைகுலைந்த, பேச்சில் அமர்த்தலான மக்கள் குடியுருக்கும், துருபிடிக்கும் தகரக்கூரை கொண்ட, மரவீடுகள். தகரக் கூரையில் தெறிக்கும் மழை போன்ற கூர்மையான தடதட ஒசை கேட்டு நான் வியப்புற்ற போது தான் அந்த மதிய வேளையில் டாக்டர் என்னிடம் முதன்முறையாக் கவனம் காட்டினார். “அவை வான்கோழிகள்”, அவர் என்னிடம் சொன்னார்; பிறகு மூடியிருந்த கதவை நோக்கி தன் அயர்வான சுட்டுவிரலால் சுட்டி முடிவாக சொன்னார், “ராத்திரியில் படு மோசம், ஏன் என்றால் தெருக்களில் மேலும் கீழுமாக ஆவிகள் நடமாடுவதை கேட்கலாம்”
அவர் எங்களை மதிய உணவருந்த வேண்டினார்; நாங்கள் அதை ஏற்றுக் கொள்ளாதிருக்க எந்த காரணமும் இல்லை; ஏன் என்றால் வீட்டு விற்பனையில் சம்பிரதாயங்கள் மட்டுமே எஞ்சியிருந்தன. குடியிருப்போர் தாம் வாங்குபவர்கள்; தந்திச்செய்தி வழி விபரங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டாகி விட்டன. எங்களுக்கு நேரம் இருக்குமா? “தேவைக்கு அதிகமாகவே”, அட்ரியானா சொன்னாள், “அதோடு ரயில் வண்டி எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாதே?”
ஆக, நாங்கள் அவர்களுடன் ஒரு உள்ளூர் உணவை பகிர்ந்தோம்; அதன் எளிமைக்கு அவர் உணவு மேஜையில் மட்டுமல்லாது வாழ்வின் எல்லா நடவடிக்கைகளுக்கும் கண்டிப்பாய் பயின்று வந்த மிதத்தன்மையின் திட்டமுறையை தவிர ஏழ்மையுடன் எந்த உறவும் இல்லை. சூப்பை சுவைத்த அந்த கணத்தில் இருந்தே ஒரு முழுமையான தூங்கும் உலகம் என் ஞாபகத்தில் விழித்தெழும் புலனுணர்வு ஏற்பட்டது. ஒவ்வொரு கரண்டி சூப்போடும் பால்யகாலத்தில் எனதாக இருந்து நகரை விட்டு போன பின்னர் நான் தொலைத்து விட்ட சுவைகள் முழுதாக திரும்ப வந்தன; அவை என் இதயத்தை கவ்வின.
Read More

Thursday, 6 May 2010

கதை சொல்ல வாழ்கிறேன் (மார்க்வெஸ்): அத்தியாயம் 18



வாழைப்பழ நிறுவனத்தின் நாட்களில் இந்த மருந்துக்கடை கொடி கட்டி பறந்தது. ஆனால் காலியான இழுப்பறை பெட்டிகளில் உள்ள பழைய புட்டிகள் மற்றும் ஜாடிகளில் இப்போது மீதமிருப்பவை எல்லாம் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்ட பீங்கான் ஜாடிகளே.
தையற்பொறி, மருந்தக தராசு, கைக்கோல், ஊசற் கண்டு அசைவதை நிறுத்தாத கடிகாரம், ஹிப்போகிரடசின் சபதம் புடைப்பகழ்வு செய்யப்பட்ட பலகை, பழுதான சாய்ந்தாடும் நாற்காலிகள், சிறுவனாயிருக்கையில் நான் கண்ட இந்த பொருட்கள் எல்லாம் அப்படியே இருந்தன; அதே இடத்தில் இருந்தன. ஆனால் அவை காலத்தின் துருவால் உருமாறி இருந்தன.
அட்ரியானாவே ஒரு பலிதான். முன்பு அணிந்திருந்ததை போல அவள் பெரிய வெப்பமண்டல் பூக்கள் கொண்ட ஆடை அணிந்திருந்தாலும், முதிர்ச்சி பருவம் வரை அவளை பிரபலப்படுத்திய அதிரடித்தன்மை மற்றும் குறும்பை சிறிது கூட இப்போது கண்டு பிடிக்க முடியாது. இப்போது குறைவின்றி அவளிடம் இருக்கும் ஒரே விசயம் பூனைகளை உன்மத்தம் கொள்ளச் செய்த சடாவல்லி வாசம் தான். என் மிச்சமுள்ள வாழ்வெல்லாம் அதை ஒருவித கலவரத்துடன் நான் நினைவு கூர்ந்தேன். அட்ரியானாவுக்கும் அம்மாவுக்கும் கண்ணீர் ஏதும் மிச்சம் இல்லாத நிலையில் எங்களை கடையின் பின்பகுதியில் இருந்து பிரித்த மெல்லிய மரத்தட்டிக்கு பின் இருந்து நாங்கள் கனமான ஒரு குறுகிய இருமலை கேட்டோம். “டாக்டர்”, அவள் சொன்னாள், “யார் வந்துள்ளார்கள் என்று சொல்லுங்கள் பார்ப்போம்”
ஒருதிடமான மனிதனின் கடூரக்குரல் மறுபக்கத்தில் இருந்து ஆர்வமற்று கேட்டது: “யார்?” அட்ரியானா பதில் உரைக்கவில்லை; ஆனால் எங்களை பின்னறைக்கு செல்லச் சொல்லி சமிக்ஞை செய்தாள். ஒரு குழந்தைப் பருவ பெரும்பீதி அவ்விடத்திலேயே என்னை செயலிழக்க செய்தது; வாய் இளநீல உமிழ்நீரால் நிரம்பியது; ஒரு காலத்தில் அந்த மருந்தகத்தின் ஆய்வுக்கூடமாக விளங்கி பின்னர் தேவைக்கு உகந்த உபகரணங்களுடன் அவசரநிலை படுக்கை அறையாக மாற்றப்பட்டிருந்த அந்த நெரிசலான இடத்துக்குள் அம்மாவுடன் நுழைந்தேன். அங்கே முதியவர்கள் மற்றும் நிலம்-, நீர்-வாழ் மிருகங்களுக்கு எல்லாம் முத்தவரான டாக்டர் அல்பிரீடோ பர்போசோ தன் புராணிக பிரபல்யம் பெற்ற, கழுவாய் மேற்கொள்வோர் அணியும் விளிம்பு அமைவற்ற தளராடையை ஒத்த பருத்தி பைஜாமா அணிந்து தனது சாஸ்வத தொங்கு சணல் படுக்கையில் மல்லாந்து கிடந்தார். அவர் கூரையை முறைத்தபடி கிடந்தார்; ஆனால் நாங்கள் உள்ளே நுழைவதை கேட்டதும் தலையை திருப்பி என் அம்மாவை இறுதியில் அடையாளம் காணும்வரை தன் துலக்கமான கண்களை எங்களை நோக்கி நிலைக்க வைத்தார். “லூயிசா சாண்டியாகா!”, அவர் கூவினார். அவர் ஒரு பழைய மரசாமான் போல தன் படிந்துள்ள அசதியுடன் தொங்குபடுக்கை மீது எழுந்து அமர்ந்தார்; மனிதப் பண்புகளை முழுமையாக அடைந்தார்; அத்தோடு தன் படுசூடான கைகளால் வேகமாக அழுத்தி எங்களுக்கு முகமன் சொன்னார். என் ஆச்சரியத்தை உணர்ந்து சொன்னார், “ஒரு வருடமாக எனக்கு காய்ச்சல்”. தொங்கு படுக்கையிலிருந்து நீங்கி படுக்கையில் அம்ர்ந்து ஒரே மூச்சில் எங்களிடம் சொன்னார், “இந்த நகரம் எதை எல்லாம் கண்டிருக்கிறது என்று உங்களால் கற்பனையே செய்ய முடியாது”. ஒரு முழுவாழ்வையே சுருக்கி விட்ட அந்த ஒற்றை வாக்கியம் அவர் எப்போதும் எவ்வாறு இருந்திருப்பார் என்பதை எனக்கு காட்ட போதுமானதாக இருந்தது: ஒரு சோகமான, தனிமை வயப்பட்ட மனிதன். அவர் உயரமாக ஒல்லியாக, அழகான உலோக வண்ணத்தில், அலட்சியமாய் திருத்தப்பட்ட கேசம் மற்றும் என் பால்யகால படுபயங்கர கிலிகளுள் ஒன்றான தீவிர மஞ்சள் கண்களுடன் இருந்தார். மதிய வேளையில் பள்ளி விட்டு திரும்புகையில் அச்சத்தின் லகரியால் கவரப்பட்டு ஜன்னல் ஏறி அவரது படுக்கையறைக்குள் பார்ப்போம். வெக்கையை தணிக்க தொங்குபடுக்கையை மூர்க்கத்துடன் முன் எம்ப செய்தபடி அவர் அங்கு ஆடிக் கொண்டிருப்பார். எங்கள் விளையாட்டு இதுவாக இருந்தது: நாங்கள் அங்கிருப்பதை அவர் அறிந்து திரும்பி முன்-எச்சரிக்கை இன்றி தன் எரியும் கண்களால் எங்களை பார்க்கும் வரை அவரை முறைப்போம். எனக்கு ஐந்தோ ஆறோ வயதிருக்கும் போது ஒரு நாள் காலை என் வகுப்பு தோழர்களுடன் சேர்ந்து அவரது மரத்து பிரம்மாண்ட மாங்கனியை பறிக்க அவர் வீட்டு புழக்கடை வழியே நுழைந்த போதுதான் அவரை முதன்முறை கண்டேன். பிறகு தோட்டத்தின் ஒரு மூலையில் நின்றிருந்த மர வெளிவீட்டின் கதவு திறந்தது; தன் லினன் உள்கால்சட்டையை இறுக்கி மாட்டியபடி அவர் வெளியே வந்தார். வெளிறி, எலும்புகள் புடைக்க, என்னை விடாது எப்போதும் பார்த்த நரகத்து நாயின் மஞ்சள் விழிகளுடன், மருத்துவமனை இரவுச்சட்டையில் நரகத்தில் இருந்து தோன்றிய ஒரு பிசாசு போல் அவர் எனக்கு தெரிந்தார். வேலியின் ஓட்டைகள் வழி பிறர் தப்பித்து போயினர்; ஆனால் அவரது அசைவற்ற விழிகளால் நான் உறைந்து போயிருந்தேன். அப்போதுதான் மரத்தில் இருந்து நான் பறித்திருந்த மாம்பழங்களை வெறித்துப் பார்த்தார்; தன் கரங்களை என்னை நோக்கி நீட்டினார், “அவற்றை என்னிடம் கொடு”, அவர் ஆணையிட்டார். அத்தோடு என்னை மேலும் கீழுமாக தீவிர வெறுப்புடன் பார்த்து இதையும் சேர்த்துக் கொண்டார், “இழிவான் புழக்கடை திருடா!”
நான் மாங்கனிகளை அவர் கால்கள் கீழே வீசி விட்டு பீதியில் தப்பித்தேன்.
Read More

Monday, 26 April 2010

கதை சொல்ல வாழ்கிறேன் (மார்க்வெஸ்): அத்தியாயம் 17



எங்கள் நோக்கம் நேரே வீட்டுக்கு போவதே. ஆனால் நாங்கள் ஒரு வட்டாரப் பிரிவு அளவே தொலைவுள்ள நிலையில், அம்மா சொல்லாமல் கொள்ளாமல் நின்ற பின், ஒரு முனையில் திரும்பி சென்றாள். “இந்த வழியே போனால் தான் நல்லது”, அவள் சொன்னாள். நான் ஏனென்று அறிய விரும்பியதற்கு அவள் பதில் சொன்னாள், “ஏனென்றால் எனக்கு பயமாக இருக்கு”

என்னுடைய குமட்டல் உணர்வுக்கு நான் இவ்வாறே காரணம் கண்டறிந்தேன். அது அச்சம், ஆனால் என்னுடைய வாதைகளை நேர்கொள்ள மட்டுமல்ல, எல்லாவற்றின் மீதான அச்சமுமே. ஆக நாங்கள் இணைத்தெரு ஒன்றில் நடந்து போனோம்; எங்கள் வீட்டை கடப்பதை தவிர்ப்பதே அந்த சுற்றி செல்வதன் ஒரே நோக்கம். “யாரிடமாவது முதலில் பேசும் வரை அதை நோக்கும் தைரியம் எனக்கு கிடைத்த்ருக்காது”, அம்மா பிற்பாடு என்னிடம் சொல்வாள். அவள் செய்தது அதைத்தான் என்னை ஏறத்தாழ இழுத்துக் கொண்டு டாக்டர் அல்பிரீடோ பர்பாசாவின் மருந்து கடைக்குள் முன்னறிவிப்பின்றி நுழைந்தாள்; எங்கள் வீட்டில் இருந்து ஒரு நூறு அடிகள் தொலைவில் குறையாத ஒரு மூலை வீடு.
மருந்துக்கடைக்காரரின் மனைவியான அட்ரியானா பெர்டுகோ கைகளால் இயக்கப்படும் தனது பழங்கால வீட்டுத் தையற்பொறியில் வேலை செய்வதில் ஆழ்ந்து போயிருந்ததால் அம்மா அவளுக்கு முன் நிற்பதை அறியவில்லை; அம்மா ஏறத்தாழ கிசிகிசுப்பது போல அழைத்தாள், “தோழி”. அட்ரியானா தூரப் பார்வையாளர்களுக்கான தடிமனான கண்ணாடிக்கு பின்னால் மங்கலாய் தெரிந்த கண்களை உயர்த்தி பார்த்தாள்; பிறகு கண்ணாடியை கழற்றினாள்; ஒரு நொடி தயங்கினாள்; பிறகு கைகள் அகல விரிய விம்மலுடன் துள்ளி எழுந்தாள். “தோழி”
அம்மா ஏற்கனவே கவுன்டருக்கு பின்னால் நின்றிருந்தாள்; பேச்சு ஏதுமின்றி அவர்கள் அரவணைத்து அழுதனர். மௌனக் கண்ணீருடனான இந்த நீண்ட அணைப்பு என் சொந்த வாழ்வில் சீர்படுத்தப்பட முடியாதபடி நிகழும் ஏதோ ஒன்று என்கிற உறுதிப்பாட்டால் உலுக்கப்பட்டு, நான் கவுன்டருக்கு மறுபுறம் நின்று என்ன செய்வதென்று அறியாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.
Read More

Saturday, 3 April 2010

கதை சொல்ல வாழ்கிறேன் (மார்க்வெஸ்): அத்தியாயம் 16



இது ஒரு திங்கட் கிழமை அன்று நடந்தது. அடுத்து வந்த வாரத்தில் செவ்வாய் கிழமையின் போது, மதிய தூக்க வேளையில், நான் என் நண்பர்களிலேயே மூத்தவரான லூயி கார்மெலோ கொரியாவுடன் பம்பரம் விட்டு கொண்டிருந்த போது பொழுதாகும் முன்னரே தூங்குபவர்கள் எழுந்து ஜன்னலில் இருந்து எட்டிப் பார்ப்பது கண்டு நாங்கள் வியந்தோம்.
அப்போது, ஆளரவமற்ற தெருவில் ஒரு பெண் கராறான் இரங்கல் உடையில், செய்தித்தாளில் பொதிந்த வாடிய பூங்கொத்தை தாங்கிய 12 வயது பெண்ணுடன் வருவதை பார்த்தோம். சுட்டெரிக்கும் சூரியனிடம் இருந்து தங்களை கறுப்பு குடை கொண்டு பாதுகாத்தனர்; அவர்கள் கடந்து செல்வதை வேடிக்கை பார்க்கும் மக்களின் மரியாதை கெட்டத்தனத்தை அவர்கள் பொருட்படுத்தவில்லை.
கடந்து போவதை ஜன்னல் வழி ஒரு முழுத்தெருவினால் வேடிக்கை பார்க்கப்படும் ஒற்றைக்கனவைப் போல் இக்காட்சி என்னை பல ஆண்டுகள் தொடர்ந்தது; என் கதை ஒன்றில் எழுதி நான் அதை ஆவியோட்டி சமாளிக்கும் வரை. ஆனால் அந்த பெண் மற்றும் சிறுமியின் கொந்தளிப்பு நிலையை அல்லது குலையாத தன்மானத்தை அந்நாளில் அம்மாவுடன் வீட்டை விற்க சென்று அதே ஆளரவமற்ற தெருவில் அதே பயங்கர வேளையில் நடப்பது எண்ணி அதிர்ச்சி அடையும் வரை நான் உணர்ந்திருக்கவில்லை என்பதே உண்மை. “ நானே அத்திருடன் என்று உணர்கிறேன்”, நான் சொன்னேன். அம்மா என்னை புரிந்து கொள்ளவில்லை. சொல்வதானால், மரியா கன்சிகுராவின் வீட்டை நாங்கள் கடக்கும் போது, தோட்டாத் துளை மூடப்பட்ட தடயம் அப்போது கூட தெரிந்த கதவை அவள் கடைக்கண்ணால் கூட பார்க்கவில்லை. பல ஆண்டுகளுக்குப் பின் அவளுடனான அப்பயணத்தை நினைவு கொள்ளும் போது அவள் அந்த துயர நிகழ்வை நினைத்துப் பார்த்தாள். ஆனால் அதை மறக்க தன் ஆன்மாவையே விட்டுக் கொடுத்திருப்பாள் என்பதை உறுதி செய்தாள். பெல்ஜியக்காரன் என்று மேலும் நன்றாக அறியப்பட்ட டான் எமிலியோ வாழ்ந்த வீட்டை நாங்கள் கடக்கையில் இது மேலும் வெளிப்படையாகியது; டான் எமிலியோ முதல் உலகப் போரில் நார்மண்டி கண்ணி வெடிப்பகுதியில் இரண்டு கால்களின் பயன்பாட்டையும் இழந்தவர்; மேலும் ஒரு பெந்தேகோஸ்து ஞாயிற்றுக்கிழமை அன்று தங்க சயனைடின் நறுமண புகைகொண்டு ஞாபகத்தின் சித்திரவதைகளில் இருந்து தப்பினார். எனக்கு ஆறு வயதுக்கு மேல் இருந்திருக்காது; ஆனால் ஏதோ அச்செய்தி ஏற்படுத்திய தடுமாற்றம் நேற்று காலை ஏழு மணிக்கு நிகழ்ந்தது போல் நினைவுள்ளது. அச்செய்தி எந்தளவுக்கு நினைவில் பதிந்திருந்தது என்றால், வீட்டை விற்க அம்மாவுடன் நகரத்துக்கு திரும்பிய போது 20 வருடங்களுக்கு பின் அம்மா தன் மவுனத்தை கடைசியாக கலைத்தாள். “பாவம் அந்த பெல்ஜியக்காரன்”, பெருமூச்சுடன் சொன்னாள், “ நீ சொன்னது போலவே அவர் பிறகு செஸ் ஆடவே இல்லை”
Read More

Tuesday, 16 March 2010

கதை சொல்ல வாழ்கிறேன் (மார்க்வெஸ்): அத்தியாயம் 15



ரயில் தண்டவாளங்களின் மறுபுறம் வாழைப்பழ நிறுவனத்தின் தனிப்பட்ட சொர்க்கபூமி, மின்கம்பி வேலி நீக்கப்பட்டு, பனைமரங்கள் ஏதுமின்றி, போப்பிச்செடிகள் மத்தியில் பாழடைந்த வீடுகள் மற்றும் தீயில் அழிந்த மருத்துவமனையின் கற்கூளத்துடன் புதர்காடாக இருந்தது. ஒரு கதவோ, சுவற்றில் சிறுவிரிசலோ அல்லது மானிட அடையாளமோ என்னில் ஆழ்மன நினைவெழுச்சியை ஏற்படுத்தவில்லை.

வளைவில் சென்று நாங்கள் திரும்பிய போது என் செருப்பின் வலைப்பின்னல் வழி தூசு மீது காலடிகள் எரிந்தன. கைவிடப்பட்ட உணர்வு தாங்கவொண்ணாததாக இருந்தது. நான் சிறுவனாயிருக்கையில், வீட்டை உடைத்து புக முயன்று மரியா கன்சியுகாராவின் ஒரு குண்டில் பலியான திருடனின் அம்மா மற்றும் சகோதரியை ஒரு வாரத்திற்கு பின் கண்ணுற்றது போலவே என்னையும் அம்மாவையும் இப்போது பார்த்தேன்.
அதிகாலை 3 மணிக்கு தெருவை நோக்கியிருக்கும் வீட்டுக்கதவை வெளியிலிருந்து யாரோ தள்ளி உடைக்க முயலும் ஓசை கேட்டு அவள் விழித்து விட்டிருந்தாள். விளக்கை ஏற்றாமலே எழுந்தவள் தட்டித் தடவி ஆயுதப் பெட்டியிலிருந்து ஆயிரம் நாட்கள் போருக்கு பின் யாரும் சுட்டிராத அரதப்பழசான கைத்துப்பாக்கியை எடுத்து, இருட்டில் கதவிருந்த இடத்தை மட்டுமல்ல பூட்டியிருந்த சரியான உயரத்தையும் கணித்தாள். பிறகு ஆயுதத்தை இருகைகளாலும் ஏந்தி குறிபார்த்தாள், கண்களை மூடினாள். அதற்கு முன் அவள் எந்த துப்பாக்கியையும் சுட்டதில்லை; ஆனால் குண்டு கதவைத் துளைத்து சென்று இலக்கை தாக்கியது.
நான் கண்ட முதல் உயிரற்ற மனிதன் அவன்தான். காலை ஏழு மணிக்கு பள்ளிகூடம் போகும் வழியில் நடைபாதையில் காய்ந்த குருதி வட்டத்தில் உடல் அப்போதும் கிடந்தது; ஈயக்குண்டு மூக்கை சிதறடித்து காது வழி வெளிப்பாய்ந்து முகத்தை சிதைத்திருந்தது. வண்ணக் கோடுகளிட்ட மீனவரின் டீஷர்ட்டும், பெல்டுக்கு பதில் கயிறால் கட்டப்பட்ட சாதாரண நீள்கால்சராயும் அணிந்திருந்தான்; அவன் வெற்றுக்கால்களுடன் கிடந்தான். அவனருகே தரையில் அவன் பூட்டை நிமிண்ட பயன்படுத்திய வீட்டில் செய்யப்பட்ட கருவியை கண்டனர்.



திருடனை கொன்றதற்கு இரங்கல் தெரிவிக்க நகரபிரமுகர்கள் வந்தனர். நான் அவ்விரவு பாப்பலேலோவுடன் சென்றிருந்தேன். மணிலாவிலிருந்து வரவழைக்கப்பட்ட மூங்கிலால் பின்னப்பட்ட மயில்போல் தோற்றமளிக்கும் கைப்பிடி நாற்காலியில் அவள் அமர்ந்திருந்தாள்; ஆயிரம் தடவை அவளது கதையை திரும்ப திரும்ப கேட்ட நண்பர்களின் தீவிர ஆர்வத்தால் சூழப்பட்டு, அவள் தனது குலை நடுக்கத்தால் மட்டுமே சுட்டாள் என்பதை அனைவரும் ஏற்றுக் கொண்டனர். அப்போதுதான், சுட்ட பின் அவள் ஏதேனும் கேட்க நேர்ந்ததா என்று என் தாத்தா கேட்டார்; அவள் சொன்னாள்: முதலில் மாபெரும் நிசப்தம் நிலவியது, பிறகு பூட்டுத்திறப்பு கருவி சிமிண்டு தரையில் விழும் உலோக ஒலி, கடைசியாக ஒரு அமுங்கலான வேதனைக் குரல், “அம்மா, என்னை காப்பாற்று”. மரியா கன்சுகிராவின் பிரக்ஞையில் இந்த நெஞ்சை உருக்கும் கதறல் என் தாத்தா அக்கேள்வியை கேட்கும் வரை எழவில்லையோ என்று தோன்றியது. அப்போதுதான் அவள் கண்ணீர் சிதற கதறியது.
Read More

Sunday, 7 March 2010

கதை சொல்ல வாழ்கிறேன் (மார்க்வெஸ்): அத்தியாயம் 14



பவனி வீதியில் நீளிருக்கைகள், வெயிலில் துருபிடித்த வாதாம் மரங்கள், நான் வாசிக்கப் படித்த இயற்பாங்கு பள்ளிக்கூடத்து முற்றம். பிப்ரவரி மாத பிரகாசமான ஞாயிற்றுக்கிழமையின் போதான நகரின் மொத்த பிம்பமும் ஜன்னல்வழி ஒரு கணம் ஜொலித்தது.


"ரயில் நிலையம்!" அம்மா வியந்துரைத்தாள், "யாரும் ரயிலுக்காக காத்திருக்காத போது உலகம் எப்படி மாறி விடுகிறது"

இயக்குப்பொறி அப்போது விசிலடிப்பதை நிறுத்தி, வேகம் குறைத்து, நீண்ட ஒப்பாரியுடன் வந்து நின்றது. என்னை முதலில் வியப்பிலாழ்த்தியது அமைதிதான். உலகின் பிற அமைதிகள் இடையே நான் கண்களை மூடிக் கொண்டு அடையாளம் காணும்படியான லௌகீக அமைதி. வெப்பத்தின் எதிரலை பாய்வு மிகத் தீவிரமாய் இருந்தபடியால் மேடுபள்ளமான கண்ணாடி வழி அனைத்தையும் பார்ப்பதாய் தோன்றியது. அங்கு கண்ணுக்கெட்டியவரை மனித உயிருக்கான அடையாளமே இல்லை; சன்னமாய் தூவபட்ட எரியும் தூசால் மூடப்படாத எதுவுமே இல்லை. காலித்தெருக்களில் அமைந்த அந்த பிண நகரத்தை பார்த்துக் கொண்டு, அம்மா மேலும் சில நிமிடங்கள் இருக்கையிலே இருந்தாள். இறுதியில் பீதியில் கூவினாள்: "கடவுளே".

அதுதான் இறங்கும் முன் அவள் சொன்ன ஒரே விஷயம். ரயில் அங்கு நின்ற போது நாங்கள் ஒரேயடியாய் தனிமைப்பட இல்லை என்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது. ஆனால் ரயில் இதயத்தை பிளக்கும்படியான விசில் சத்தத்துடன் திடீரென கிளம்பிய போது அம்மாவுடன் நானும் அந்த நரக வெயிலில் கைவிடப்பட்டேன்; அந்த நகரத்தின் ஆகமொத்த துக்கமும் எங்கள் மேல் கவிந்தது. ஆனால் நாங்கள் ஒருவருக்கொருவர் ஒன்றுமே பேசிக் கொள்ளவில்லை. தகரக்கூரையும், நீடிக்கப்பட்ட மொட்டைமாடியும் கொண்ட அந்த பழைய மர ரயில் நிலையம் கவ்பாய் திரைப்படங்களில் நாங்கள் அறிந்தவற்றின் வெப்பமண்டல திரிபுவடிவாக தோன்றியது. புற்பதர்களின் அழுத்தத்தில் வெடிக்க ஆரம்பித்திருந்த தரை ஓடுகள் கொண்ட அந்த கைவிடப்பட்ட நிலையத்தை கடந்து போனோம்; வாதாம் மரங்களின் நிழலின் பாதுகாப்பை நாடியபோது மதியத்தூக்கத்தின் மந்தத்துக்குள் மூழ்கினோம். நான் சிறுவனாயிருக்கையில் இருந்தே, என்ன செய்வதென்றே அறியாமல் எதிர்செயலூக்கம் அற்ற, அந்த மதிய குட்டித்தூக்கங்கள் மீது அருவருப்பு கொண்டிருந்தேன். ”சத்தம் போடாதே தூங்குகிறோம்”, தூங்குபவர்கள் விழிக்காமலே முணுமுணுப்பார்கள். கடைகள், அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகள் 12 மணிக்கு மூடப்பட்டு, மீண்டும் மூன்று மணிக்கு சற்று முந்தி தான் திறக்கும். வீடுகளின் உட்புறங்கள் சோம்பலின் முழுமறதி நிலையில் மிதந்தன. வெக்கை பொறுக்க முடியாமல் சில வீடுகளில் மக்கள் முற்றத்தில் ஊஞ்சற்படுக்கை தொங்க விட்டு தூங்குவர், அல்லது வாதாம் மரங்களின் நிழலில் நடுத்தெருவில் நாற்காலிகள் இட்டு உட்கார்ந்து தூங்குவர். நிலையத்திற்கு எதிரிலுள்ள மதுக்கூடம் மற்றும் மேஜைக்கோலாட்ட அறை கொண்ட விடுதியும், தேவாலயத்திற்கு பின்னுள்ள தந்தி அலுவகமும் மட்டுமே திறந்திருந்தன. அனைத்தும் என் நினைவிலிருந்து அச்சடித்து எடுத்தது போல், ஆனால் மேலும் சின்னதாய், ஏழ்மையானதாய், மரணச்சூறாவளியில் நிலமட்டமாயிருந்தன: அழுகும் வீடுகள், துரும்பால் துளையிடப்பட்ட தகரக்கூரைகள், நொறுங்கும் கிரானைட் பெஞ்சுகள் மற்றும் துயரார்ந்த வாதாம் மரங்கள் கொண்ட ஆற்றின் அணைகரை ஆகிய அனைத்துமே கண்ணுக்கு புலனாகாத, தோலை வறளச் செய்து சூரணமாக்கி, எரியும் தூசால் உருமாறி இருந்தன.
Read More

Saturday, 27 February 2010

கதை சொல்ல வாழ்கிறேன் (மார்க்வெஸ்): அத்தியாயம் 13






















நகரமேயற்ற நிலையமொன்றில் ரயில் நின்றது. சற்று நேரம் கழித்து மகோண்டா என்று வாயில் கதவில் பெயர் பொறிக்கப்பட்ட, அவ்வழியே உள்ள ஒரே வாழைப்பழத் தோட்டத்தை அது கடந்து போனது. தாத்தாவுடன் சென்ற முதற்பயணங்களின் போதே இப்பெயர் என் கவனத்தை ஈர்த்திருந்தது.
இதன் கவித்துவ ஆழ்கிளர்ச்சியை வயது முதிர்ந்த பின்னரே கண்டறிந்தேன். அப்பெயரை யாரும் சொல்லிக் கேட்டதில்லை. யாரிடமும் அதன் பொருளை நானாகவும் கேட்டதில்லை. அது செயிபாவை போல் தோற்றமளிக்கும்மொரு வெப்பமண்டல மரம். அதன் நுண்துகள்களுடைய கனங்குறைந்த கட்டை வள்ளம், சமையற்கருவிகள் செதுக்க பயன்படும் என்று கலைக்களஞ்சியம் ஒன்றில் படித்த போது, ஏற்கனவே எனது மூன்று புத்தகங்களில் ஒரு கற்பனை நகரின் பெயராக அதை பயன்படுத்தியிருந்தேன். பிரிட்டானிக்கா கலைக்களஞ்சியத்தில் பின்னர் தான்கனியாவிலுள்ள நாடோடி மக்களின் பெயர் அதுவென்று கண்டுபிடித்தேன். இப்பெயரின் முலம் அதுதான் என்று கண்டுபிடித்தேன். அதை ஒருபோதும் உறுதி செய்யவில்லை. அம்மரத்தை ஒருபோதும் பார்க்கவில்லை; நான் அதைப்பற்றி பல நேரங்களில் வாழைத்தோட்ட பகுதியில் விசாரித்த போதும் யாருக்கும் அதைப் பற்றி தெரிந்திருக்கவில்லை. ஒருவேளை அது இல்லாமலே இருந்திருக்கலாம்.

பதினோரு மணிக்கு ரயில் மகோண்டாவை கடந்து போகும்; பிறகு பத்து நிமிடங்கள் அரகடகாவில் நிற்கும். அம்மாவோடு நான் வீட்டை விற்க சென்ற நாளில் ரயில் ஒன்றரை மணி நேரம் தாமதம் ஆனது. அது வேகம் கொள்ள ஆரம்பித்த போது நான் கழிப்பறையில் இருந்தேன்; உடைந்த ஜன்னல் வழி வறண்ட சுட்டுப்பொசுக்கும் காற்று வீசியது. அதோடு பழைய தொடர்வண்டிகளின் கூச்சலும். இயக்குப்பொறியின் பீதியான விசிலும் கலந்து வந்தது. இதயம் தடதடவென நெஞ்சில் அடித்தது. சில்லிடச் செய்யும் குமட்டல் வயிற்றை உறைய வைத்தது. நில நடுக்கத்தின் போது தோன்றும் பீதியில் நான் வெளியே ஓடினேன். அம்மா பெரும் நிதானத்துடன் இருக்கையில் அமர்ந்து தான் கடந்து போகும் இடங்களை, அவை மீட்டெடுக்க முடியாத வாழ்க்கைத் தெறிப்புகள் என்பது போல, பாராயணம் செய்து கொண்டிருந்தாள்.

"அதோ அந்த நிலத்தைத் தான் தங்கம் கிடைக்கும் என்று கதை கட்டி என் அப்பாவுக்கு விற்றார்கள்"



அட்வெண்டிஸ்டுகளின் வீடு, கூடவே பூந்தோட்டம் மற்றும் ஆங்கிலத்தில் "சூரியன் அனைவருக்காகவும் காய்கிறான்” என்னும் கதவில் தொங்கும் பெயர்ப்பலகை சகிதம் ஒரு எரிகல்லைப் போல் கடந்தது.

" நீ ஆங்கிலத்தில் கற்ற முதல் விசயம் அதுதான் " அம்மா சொன்னாள்.

"முதல் விசயமல்ல" நான் சொன்னேன் "ஒரே ஒரு விசயம்".



சிமிணு பாலம் கடந்து போனது. ஆங்கிலேயர்கள் ஆற்றை தோட்டத்தை நோக்கி திருப்பி விட்ட நாட்களில் இருந்தே சேறு கலந்த நீர் கொண்ட பாசன வடிகாலும் கடந்தது.

"விபச்சாரிகள் வாழும் இடம்; இங்கே தான் மெழுகுவர்த்திக்கு பதில் பண நோட்டுகளை எரித்து ஆண்கள் ராவெல்லாம் கும்பியாம் ஆடி இரவைக் கழிப்பார்கள்", அவள் சொன்னாள்.
Read More

Monday, 15 February 2010

கதை சொல்ல வாழ்கிறேன் (மார்க்வெஸ்): அத்தியாயம் 12



என் குழந்தைப் பருவத்திலும் கூட சிறு நகரங்களை ஒன்றை மற்றவற்றிலிருந்து வேறுபடுத்துவது எளிதாக இருந்ததில்லை. இருபது வருடங்களுக்குப் பிறகு சௌந்தரிய அமைதி ததும்பும் பெயர்களை --- துகாரின்கா, குவாமச்சிட்டேசு, நிர்லாண்டியா, குவாகாமயால் -- ஏந்திய பலகைகள் ரயில்நிலைய வராந்தாக்களில் வீழ்ந்து கிடக்க, அவை நினைவிலுள்ளதைக் காட்டிலும் அதிகமாய் தனிமைப்பட்டு விட, இது, மேலும் சிரமமாகி விட்டது.
ஏறத்தாழ காலை 11:30 மணிக்கு ரயில் செவில்லகாவில் தண்ணீர் பிடிக்கவும், இயக்குப்பொறி மாற்றவும் 15 நிமிடங்கள் முடிவற்று நின்றது. அப்போதுதான் வெக்கை அதிகமாகியது. வண்டி நகர ஆரம்பித்த போது, புதிய இயக்குப்பொறி தொடர்ச்சியாய் வெடித்துக் கக்கிய கரிப்புகை, கதவற்ற ஜன்னல்கள் வழி புகுந்து எங்களை கரும்பனியில் மூடியது. பாதிரியாரும், பெண்ணும் ஏதோ தெருவில் எங்களுக்குத் தெரியாமல் ஏற்கனவே இறங்கி விட்டிருந்தனர். எனக்கும் அம்மாவுக்கும் நாங்கள் ஒரு பேய் ரயிலில் பயணிப்பதான உணர்வை இது தீவிரப்படுத்தியது. எனக்கெதிரே அமர்ந்து, ஜன்னலுக்கு வெளியே நோக்கியவாறு அவள் இரண்டு மூன்று தடவை குட்டித்தூக்கம் போட்டாள். ஆனால் நன்கு விழிப்பு தட்டியபின், மீண்டும் அந்தப் பயங்கர கேள்வியை கேட்டாள், "சரி நான் உன் அப்பாவுக்கு என்ன சொல்ல?"

என் முடிவை தகர்ப்பதற்கு வாகான இடத்தை கண்டுபிடிப்பதற்கான தேடலை அவள் ஒருபோதும் கைவிட மாட்டாள் என்று தோன்றியது. இதற்கு முன் அவள் முன்வைத்த சில சமரசங்களை எடுத்த எடுப்பிலே நிராகரித்து விட்டிருந்தேன். அவளது பின்வாங்கல்கள் ரொம்ப நேரம் நீடிக்காது என்று எனக்கு தெரிந்தது. இருந்தும் இந்த புதுத்தாக்குதல் எனக்கு அதிர்ச்சி தந்தது. இதற்கு முன்னால் இல்லாத அதிக நிதானத்துடன், மற்றொரு நீண்ட பயனற்ற மோதலுக்கான தயார் நிலையில் பதிலுரைத்தேன்.

"என் வாழ்க்கையில் நான் ஆசைப்படுவதெல்லாம் எழுத்தாளனாக வேண்டும் என்பதே. அதுதான் நடக்கப் போகிறது என்று அவருக்கு சொல்லுங்கள்"

"அவர் உன் விருப்பத்திற்கு எதிரானவரல்ல", அவள் சொன்னாள், "நீ எதிலாவது பட்டம் வாங்கும் வரை"

என்னைப் பார்க்காமலே பேசினாள், ஜன்னலுக்கு வெளியே நிகழும் வாழ்க்கையில் இருப்பதை விட மிகக்குறைவான ஆர்வமே எங்கள் உரையாடலில் அவள் கொண்டிருப்பது போன்ற பாசாங்குடன்.

" நான் ஒத்துக்கொள்ள மாட்டேன் என்று மிக நன்றாய் தெரிந்திருந்தும் ஏன் இவ்வளவு வற்புறுத்துகிறாய் தெரியவில்லை", நான் அவளிடம் சொன்னேன்.

ஆர்வம் தூண்டப்பட்டது போல், அவள் என் கண்களை நோக்கி கேட்டாள், "எனக்கு தெரியும் என்று ஏன் நம்புகிறாய்"

"ஏனென்றால் நாம் ரெண்டு பேரும் ஒரே மாதிரி அல்லவா"
Read More

Sunday, 24 January 2010

கதை சொல்ல வாழ்கிறேன் (மார்க்வெஸ்): அத்தியாயம் 11


அம்மா தான் இத்தகைய வாதைகளில் இருந்து விடுபட்டவள் என்று நினைத்தாள்; ஏனெனில் அவளது பெற்றோர்களின் மரணத்திற்குப் பின் அரகடாகா உடனான எல்லா தொடர்புகளையும் துண்டித்திருந்தாள். அவளது கனவுகள் அவளை ஏமாற்றின.
குறைந்தது காலை சிற்றுண்டியின் போது யாரும் ஆர்வம் உடையோர் இருந்தால் அவள் சொல்வதெல்லாம் வாழைத்தோட்ட பிராந்தியம் தொடர்பான பழங்கால ஏக்க நினைவுகளுக்கு தொடர்புள்ள விசயங்களாகவே எப்போதும் இருக்கும். நிறுவனம் திரும்ப வந்த பின் மும்மடங்காக விலையை உயர்த்தலாம் என்ற நம்பிக்கையில் மிகச்சிரமமான வேளைகளில் எல்லாம் வீட்டை விற்காமல் தாக்குப்பிடித்து வந்திருந்தாள். கடைசியில் எதார்த்தத்தின் தாங்கவொண்ணா நெருக்கடி அவளை தோற்கடித்து விட்டது. ஆனால் ரயிலில் பாதிரியார் அந்நிறுவனம் திரும்பி வருவதாக சொல்லக் கேட்ட போது அவள் துயரமிக்க சைகை ஒன்றை செய்துவிட்டு என் காதில் கிசுகிசுத்தாள், “என்னவொரு வெட்கக்கேடு, நம்மால் இன்னும் சற்று பொறுத்து, அதிக விலைக்கு வீட்டை விற்க முடியாதே”

பாதிரியார் பேசிக் கொண்டிருக்கையில் சதுக்கம் முழுக்க நிரம்பி நின்ற கூட்டம் மற்றும் சுட்டெரிக்கும் வெயிலில் உற்சாகமாக கச்சேரி வாசிக்கும் இசைக்குழுவினர் தென்பட்ட நகரம் ஒன்றைக் கடந்தோம். இந்த அனைத்து நகரங்களும் எனக்கு ஒன்று போலவே தோன்றின.
பாப்பலேலோ என்னை டோன் ஆண்டோனியோ போகோண்டேவின் புத்தம் புதிய ஒலிம்பிய சினிமாவுக்கு அழைத்துச் சென்ற போதெல்லாம் அங்கு காட்டப்படும் கவ்பாய் திரைப்படங்களில் வரும் ரயில்நிலையங்கள் எங்களது நிலையங்கள் போலே உள்ளதை கவனித்திருக்கிறேன். பின்னர் பாக்னரை படிக்கையில் அவரது நாவல்களில் வரும் சிறு நகரங்களும் எங்களுடையது போல் தோன்றியது. அதில் வியப்படைய ஒன்றுமில்லை; ஏனெனில் ஒருங்கிணைக்கப்பட்ட வாழைப்பழ நிறுவனத்தின் மீட்பாளர் பாணி தூண்டுதலால், ஒரு தற்காலிக முகாமின் மோஸ்தரில், கட்டியெழுப்பப் பட்டவையே அவை. சதுக்கத்திலுள்ள தேவாலயம் மற்றும் அடிப்படை வண்ணங்கள் மட்டும் தீட்டப்பட்ட தேவதைக்கதை வீடுகளையும் சேர்த்து எல்லாவற்றையும் நினைத்துப் பார்த்தேன். வைகறையில் பாடும் கறுப்பின தொழிலாளர்களின் குழுக்கள், தோட்டங்களில் நிலக்கூலிகள் ஆர அமர்ந்து சரக்கு ரயில்கள் போவதை வேடிக்கை பார்த்தபடி இருக்கும் குடிசைகள் மற்றும் சனி இரவு கலாட்டாக்களில் வெட்டப்பட்ட தலைகள் காலையில் கிடக்கும் பள்ளங்களும் நினைவுக்கு வந்தன.



ரயில் தண்டவாளங்களின் மறுபுறம், குளிர், கோடை விடிகாலைகளில் கருகின தூக்கணாங்குருவிகளால் கறுப்பாய் தோற்றமளிக்கும் மின்சார கம்பி வேலியால் சூழப்பட்ட கோழிப்பண்ணை போன்ற அரகடகாவிலும், செவில்லகாவிலுமுள்ள ஆங்கிலேயர்களின் தனிப்பட்ட நகரங்களை ஞாபகம் கொண்டேன். மயில்களும், கௌதாரிகளும் கொண்ட அவர்களது நிச்சலமான புல்வெளிகள், சிவப்புக் கூரை, ஜன்னல்களில் கம்பிக்கிராதிகள், பனைமரங்கள், தூசு மண்டிய ரோஜாப்புதர்களிடையே பால்கனியில் உணவருந்த சிறுமேஜைகள், மடிப்பு நாற்காலிகள் உடைய குடியிருப்புகளையும் நினைவு கூர்ந்தேன். சில நேரங்களில் கம்பி வேலியினூடே மென்துகில் உடுத்து, அகன்ற பட்டுவலை தொப்பிகள் அணிந்த அழகான சோம்பலுற்ற பெண்கள் தங்கக் கத்திரிக்கோலால் தங்கள் தோட்டங்களில் பூக்கள் வெட்டுவதை காணலாம்.
Read More

Sunday, 10 January 2010

கதை சொல்ல வாழ்கிறேன் (மார்க்வெஸ்): அத்தியாயம் 10



ஒருவேளை அந்த மொத்த ரயிலிலும் நாங்கள் மட்டுமே பயணிகளாய் இருந்திருப்போம்; அதுவரையிலும் எதுவுமே எனக்கு நிஜமான சுவாரஸ்யம் ஏற்படுத்தவில்லை. "ஆகஸ்டில் வெளிச்சத்தின்" மந்தத்துக்குள், இடைவிடாது புகைத்தபடி, ஆனால் அடிக்கடி வேகமாக பார்வையை வீசி நாங்கள் கடந்து செல்லும் இடங்களை அடையாளம் கண்டவாறு, ஆழ்ந்தேன்.

நீண்ட சீட்டி ஒலியுடன் ரயில் உப்பு சதுப்பு நிலங்களை கடந்து. எலும்புகளை உதற வைக்கும் சிவப்புப்பாறை இடைவழி நிலத்தின் மீது முழுவேகத்தில் சென்றது; அங்கு தொடர்வண்டிகளின் செவிடாக்கும் சத்தம் தாங்கவொண்ணா விதமாக இருந்தது; ஆனால் கிட்டத்தட்ட 15 நிமிடங்களுக்கு பின், வண்டி வேகம் குறைந்து தோட்டங்களின் நிழல்மண்டிய குளிர்மைக்குள் விவேகமான மௌனத்துடன் நுழைந்தது; காற்று மண்டலம் மேலும் அடர்த்தியானது; பின்னெப்போதும் கடற்காற்றை உணர முடியவில்லை. வாழைத் தோட்ட பிரதேசத்தின் ஆசிரம எல்லையின் மாயமண்டலத்துள் நுழைந்து விட்டோம் என்பதை அறிய நான் என் வாசிப்பை தடை செய்ய வேண்டி இருக்கவில்லை.
உலகம் மாற்றம் கொண்டது. சரிச்சீரமைவுடைய முடிவடையாத வாழைத் தோட்ட பாதைகள் இருபுறங்களிலாய் விரிந்து சென்றன; அவ்வழியே வாழைத் தண்டுகள் ஏற்றப்பட்ட காளை வண்டிகள் நகர்ந்து கொண்டிருந்தன. பயிரிடப்படாத இடங்களில் திடீரெனத் தோன்றின செங்கல் முகாம்கள், ஜன்னலின் கரடுமுரடான திரைச்சீலைகள் கொண்ட, கூரையிலிருந்து மின்விசிறிகள் தொங்கும் அலுவலகங்கள் மற்றும் போப்பி வயலில் ஏகாந்தமாய் நிற்கும் மருத்துவமனை ஒன்றும் இருந்தன. ஒவ்வொரு ஆற்றிற்கும் அதற்கென ஒரு கிராமமும், ஒரு இரும்பு பாலமும் இருந்தன; அப்பாலத்தில் சிதறடிக்கும் விசில் சத்தததுடன் ரயில் கடக்கையில் ஐஸ் போன்று சில்லிட்ட நீரில் குளிக்கும் இளம்பெண்கள் ஷாட்மீன் போல் மின்னலென மறையும் மார்புகளால் பயணிகளை நிலைகுலைய செய்தபடி தாவினர்.



ரியோபிரியோ நகரத்தில் அந்நாட்டிலேயே பெரிதான, சுவையில் சிறந்ததான பேரிக்காய்கள் திணித்த மூட்டைகளை சுமந்து கொண்டு பல அரசுவாக் குடும்பங்கள் ரயிலில் ஏறினர். உட்கார இடம் தேடி தொடர்வண்டிக்குள் மேலும் கீழுமாய் தயக்கத்துடன் அலைந்தனர்; ஆனால் ரயில் மீண்டும் நகர ஆரம்பித்த போது சிறுகுழந்தையை வைத்திருந்த வெள்ளைகாரியும் ஒரு பாதிரியாருமே மிச்சமிருந்தார்கள். அந்த குழந்தை மீதமுள்ள பயணத்தில் எப்போதும் அழகையை நிறுத்தவில்லை. பாதிரியார் ஒரு ஆய்வு பயணிக்கான பூட்ஸ், தலைக்கவசம் மற்றும் சொரசொரப்பான துணியால் செய்யப்பட்ட, கப்பற்பாய் போன்று சதுர வடிவிலான, அங்கங்கே ஒட்டுப்போட்ட நீண்ட இறுக்கமான அங்கி ஒன்றை அணிந்திருந்தார்; குழந்தை அழும் நேரத்தில் அவரும் பெசினார், எப்போதும் எதோ தேவாலய உரைமேடையில் பேசுவது போல். வாழைப்பழ நிறுவனம் திரும்பி வருவதற்கான சாத்தியப்பாடே அவரது உரையின் மையப்பொருளாக இருந்தது. அது போன பின் வேறெதையும் பற்றி அந்த பிரதேசத்தில் பேசப்படவில்லை. எல்லோரும் அது திரும்ப வரவேண்டும் என்றும், வேண்டாம் என்றும் கருத்துரீதியாக முரண்பாட்டாலும், அதன் மறுவருகை நிச்சயம் என்றே கருதினர். பாதிரியார் அதன் மீள்வருகைக்கு எதிராக இருந்தார். மேலும் அவர் தன் நிலைப்பாட்டை மிகவும் தனிப்பட்ட ஒரு விவாதத்தில் வெளிப்படுத்தியதை அப்பெண்கள் படுமுட்டாள்தனம் எனக்கருதினர். “அந்நிறுவனம் போகும் இடம் எல்லாம் நசிவை விட்டுச் செல்கிறது”. அவர் சொன்ன ஒரே சுவாரஸ்யமான விசயம் அதுதான்; ஆனால் அவரால் அதை விளக்க முடியவில்லை; இறுதியில் சிறுகுழந்தையுடன் வந்திருந்த பெண் கடவுள் அவருடன் கருத்தொற்றுமை கொள்ள மாட்டார் என்று சொல்லி அவரை குழப்பினாள். நினைவு ஏக்கம், எப்போதும் போல், கெட்ட நினைவுகளை வழித்து துடைத்து நீக்கி, நல்லவற்றை பெரிதாக்கி காட்டி விட்டது. அதன் தாக்குதலில் இருந்து யாரும் தப்பிக்க இல்லை. ஆண்கள் தங்கள் வீட்டு வாசற்படியில் அம்ர்ந்திருந்ததை ரயில் ஜன்னல் வழியே பார்க்க முடிந்தது; அவர்கள் எதற்காக் காத்திருந்தனர் என்று அறிந்து கொள்ள அவர்கள் முகத்தை நோக்கினாலே போதும். கற்கள் பாவிய கடற்கரையில் துணி துவைத்துக் கொண்டு இருந்த பெண்கள் ரயில் கடப்பதை அதே எதிர்பார்ப்புடனே பார்த்தனர். பிரீப்கெசுடன் வந்தடையும் ஒவ்வொரு அந்நியனும் ஒருங்கிணைந்த பழ நிறுவனத்திலிருந்து இறந்த காலத்தை மறுபடியும் ஸ்தாபிக்க வருவதாகவே அவர்கள் நினைத்தனர். ஒவ்வொரு சந்திப்பின் போதும், ஒவ்வொரு பயணத்தின் போதும், உடனேயோ பிறகோ இந்த மறைநிலை மெய்வாக்கியம் வெளிப்படும்: ”நிறுவனம் திரும்ப வரப் போவதாக் சொல்கிறார்கள்”. யார் சொன்னதென்றோ எப்போது அல்லது ஏன் என்றோ யாருக்கும் தெரியாது; ஆனால் யாரும் அது பொய்யென்று சந்தேகிக்க இல்லை.
Read More

Monday, 28 December 2009

கதை சொல்ல வாழ்கிறேன் (மார்க்வெஸ்): அத்தியாயம் 9


நான் அவள் சுட்டு விரலின் திசையை தொடர்ந்து போய் அந்த நிலையத்தைக் கண்டேன்: உரிந்து விழும் மரம், சாய்-தகரக் கூரை, நீண்ட மொட்டை மாடி மற்றும் முன்னால் இருநூறு மக்களுக்கு மேல் நிற்கமுடியாத சிறு வறண்ட சதுக்கமும் கொண்ட ஒரு கட்டிடம். இங்குதான், அம்மா அன்று சொன்னாள், 1928-இல் ராணுவம் கணக்கில் அடங்கா எண்ணிக்கையில் வாழைத்தோட்ட தொழிலாளர்களை கொன்று குவித்தது. எனக்கு நினைவு தோன்றிய நாளில் இருந்து தாத்தாவால் ஓராயிரம் முறை சொல்லப்பட்டும், திரும்ப சொல்லப்பட்டும் அந்நிகழ்வை நானே வாழ்ந்து அனுபவித்தது போல் அறிந்து வைத்திருந்தேன்.

படைவீரன் பணிநிறுத்தம் செய்யும் தொழிலாளிகளை சட்டவிரோதிகள் என்று அறிவிக்கும் சட்டம் ஒன்றை வாசிக்கிறான்; அதிகாரி சதுக்கத்தை காலி செய்ய ஐந்து நிமிடங்கள் அவகாசம் அளித்த பிறகு மூவாயிரம் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் காட்டுத்தனமாய் எரியும் சூரியன் கீழ் அசைவற்று நிற்கின்றனர்; சுடும் உத்தரவு; சடசடவென வெண்ணிற வெங்கனல் வெடிப்புகளில் தோட்டாக்கள் துப்பும் எந்திரத்துப்பாக்கிகள்; பீதியின் பொறியில் மாட்டிக் கொண்டு தெறிக்கும் குண்டுகளின் பசியடங்காத கத்திரிக்கோல்களால் கச்சிதமாக, சிறிதுசிறிதாக நறுக்கி இடப்படும் கூட்டம்.

காலை ஒன்பது மணிக்கு சியனாகோ வந்தடையும் ரயில்வண்டி கப்பல்களில் இருந்து பயணிகளையும், சியராவில் இருந்து வந்தவர்களையும் ஏற்றிக் கொண்டு கால்மணி நேரத்தில் வாழைப்பழ பிராந்தியத்தின் உட்பகுதிகளுக்குள் பயணம் தொடரும். நானும் அம்மாவும் நிலையத்தை எட்டு மணி தாண்டியபின் வந்தடைந்தோம்; ஆனால் ரயில் வர தாமதமாகியது. அப்போது பயணிகள் நாங்கள் மட்டுமே. காலியான தொடர்வண்டிக்குள் நுழைந்ததுமே அவள் இதை உணர்ந்தாள்; விழா உணர்வு கூடிய நகைச்சுவையுடன் கூவினாள், "என்ன வசதி ! மொத்த ரயிலும் நமக்கு மட்டும் தான்"

அது அவளது ஏமாற்றத்தை மறைப்பதற்கான போலி பெருவகை தான் என நினைக்கிறேன்; ஏனெனில் தொடர்வண்டிகளின் நிலைமையில் இருந்து காலத்தின் கோலங்களை கண்கூடாக கண்டேன். அவை இரண்டாம் வகுப்பு தொடர்வண்டிகள்; ஆனால் அங்கு மூங்கில் இருக்கைகள் அல்லது உயர்த்தவும் தாழ்த்தவும் முடியக்கூடிய கண்ணாடி ஜன்னல் கதவுகளுக்கு பதில் ஏழைகளின் அலங்கரிக்கப்படாத வெதுவெதுப்பான பின்புறங்களால் வழவழப்பாக்கப்பட்ட மரபெஞ்சுகளே இருந்தன. அந்த தொடர்வண்டி மட்டுமல்ல மொத்த ரயிலுமே அவற்றின் பழைய நிலைமையுடன் ஒப்பிடுகையில் ஒரு பேய் வடிவாகவே இருந்தது. அந்த ரயில் ஒரு காலத்தில் மூன்று வகுப்புகள் கொண்டிருந்தது. படுஏழைகள் பயணித்த மூன்றாம் வகுப்பு வாழைப்பழங்களை அல்லது கசாப்புக்கான கால்நடைகளை கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட பலகை பெட்டித் தொடர்வண்டிகள் பயணிகளுக்காக வண்ணம் பூசப்படாத பலகை பெஞ்சுகள் அமைக்கப்பட்டு மாற்றப்பட்டன. இரண்டாம் வகுப்பில் வெண்கல அலங்காரம் கொண்ட மூங்கில் இருக்கைகள் இருந்தன. அரசு அதிகாரிகளும், வாழைப்பழ நிறுவனத்தின் மேலாளர்களும் பயணிப்பதற்கான முதல் வகுப்பில் நடைபாதையில் தரைவிரிப்புகள் மற்றும் வெல்வெட்டால் பொதியப்பட்ட அமர்வு நிலையை விருப்பத்துக்கு ஏற்ப மாற்றும் வசதி கொண்ட இருக்கைகள் இருந்தன. நிறுவனத் தலைவர், அவரது குடும்பம் அல்லது முக்கிய விருந்தாளிகள் பயணிக்கும் பட்சத்தில், வண்ணக்கண்ணாடிகள் கொண்ட ஜன்னல்கள், சுவர் மீது ஜிகினா பதித்த அச்சுருவ வேலைப்பாடுகள்,மற்றும் பயணத்தின் போது தேநீர் அருந்த சிறுமேஜைகள் அமைந்த வெளி மொட்டைமாடி உடைய ஆடம்பர தொடர்வண்டி ரயிலின் இறுதிப்பகுதியில் இணைக்கப்படும். இந்த கற்பனைக்கு எட்டாத தனிவண்டியின் உட்பகுதியை கண்டுள்ள ஒரு ஜீவனைக் கூட நான் இதுவரை சந்தித்தது இல்லை. என் தாத்தா இருமுறை மாநகரத் தலைவராக இருந்தவர்;அவர் பணம் பற்றி விளையாட்டுத்தன மனப்பான்மை கொண்டவர். ஆனாலும் பெண் உறவினருடன் பயணித்தால் மட்டுமே அவர் இரண்டாம் வகுப்பில் சென்றார். ஏன் அவர் மூன்றாம் வகுப்பில் பயணிக்கிறார் என்று கேட்டால் "நான்காம் வகுப்பு என்று ஒன்று இல்லாததால்" என்று பதிலளிப்பார். ஆனால் ஒரு காலத்தில் இந்த ரயிலின் சற்றும் மறக்கமுடியாத அம்சம் நேரந்தவறாமையே. நகரங்களின் அனைத்து கடிகாரங்களின் நேரமும் இதன் விசில் சத்தத்துக்கு ஏற்ப அமைக்கப்பட்டது.
அன்று ஏதேதோ காரணங்களால் அது ஒன்றரை மணிநேரம் தாமதமாக புறப்பட்டது. இரங்கல் தொனியில் கிறீச்சிட்டவாறு, மிக மெதுவாக அது நகர ஆரம்பித்த போது அம்மா சிலுவை வரைந்து கொண்டாள்; ஆனால் எதார்த்தத்துக்கு உடனடியாக திரும்பினாள்.
"இந்த ரயிலின் ஸ்பிரிங்களுக்கு எண்னையிட வேண்டியுள்ளது", அவள் சொன்னாள்.

Read More

Tuesday, 22 December 2009

கதை சொல்ல வாழ்கிறேன் (மார்க்வெஸ்): அத்தியாயம் 8



நாங்கள் ரயில்நிலையத்துக்கு ஒற்றைக்குதிரை விக்டோரியா வண்டியில் -- உலகின் ஏனைய பகுதிகளில் அருகி விட்ட புகழ்வாழ்ந்த மரபு ஒன்றின் இறுதிக் கண்ணியாக இருக்கலாம் -- சென்றோம். துறைமுகத்தின் சேற்றுக்குழியிலிருந்து தொடங்கி தொடுவானில் சென்று இணையும், நைட்ரேட்டால் நீறாகும் வறண்ட நிலத்தை பார்த்தவாறே அம்மா சிந்தனை வயப்பட்டிருந்தாள்.
எனக்கு அது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க இடம்: எனக்கு மூன்றோ நான்கோ வயதிருக்கும் போது பாரங்குல்லாவிற்கு என் முதல் பயணத்தை மேற்கொண்டிருக்கையில் தாத்தா என்னை கைப்பிடித்து இந்த எரியும் பாழ்வெளிக்கு குறுக்காக நடந்தபடி, எங்கு செல்கிறோம் என்பதை சொல்லாமல், அப்போதைக்கு ஆபத்து சமிக்ஞை ஏதுமின்றி, ஒரு நுரை கொப்புளிக்கும் பரந்த பச்சை நீர் விரிவின் முன் நின்றோம்; அங்கு பொருங்கூட்டமாய் மூழ்கிய கோழிகள் மிதந்தன.
"இதுதான் சமுத்திரம்", அவர் சொன்னார். ஏமாற்றமடைந்த நான் மறுகரையில் என்ன உள்ளது என்று கேட்டேன்; ஒரு நொடி கூட தயங்காமல் அவர் பதிலளித்தார், "மறுபுறம் கரையே இல்லை"


இன்று பல சமுத்திரங்களை முன்னும் பின்னும் கண்ட பிறகு நான் இப்போதும் அதையே அவரது மிகச்சிறந்த பதில்களில் ஒன்றாக கருதுகிறேன். எப்பிடி இருப்பினும் சமுத்திரம் பற்றின என் முந்தைய படிமங்களில், அழுகித் தொங்கும் மாங்குரூ மரக்கிளைகள் மற்றும் கூரான சங்கு சிதறல்கள் காரணமாக நடப்பதே அசாத்தியமான,. நைட்ரேட் ஓடு போல் படர்ந்த கடற்கரை கொண்ட அந்த படுமோசமான மாபெரும் நீர்நிலையோடு ஒப்பிடும் வண்ணம் எதுவும் இருக்கவில்லை.
சியனாகாவில் உள்ள சமுத்திரம் பற்றி அம்மாவுக்கு அதே எண்ணமே இருந்திருக்க வேண்டும்; ஏனெனில் இடப்பக்கமாக அது தெரிய ஆரம்பித்த உடனே பெருமூச்சு விட்டபடி சொன்னாள், "ரியோஹாச்சாவில் உள்ளது போன்ற சமுத்திரம் வேறெங்கேயும் இல்லை"
அந்த சந்தர்பத்தில் மூழ்கின கோழிகள் பற்றிய என் ஞாபகத்தை அவளிடம் சொன்னேன்; எல்லா வயது முதிர்ந்தோரையும் போல, அதுவொரு குழந்தைப்பருவ பிரமையென அவள் கருதினாள். பிறகு அவள் போகும் வழியே ஒவ்வொரு இடம் பற்றின தன் சிந்தனையோட்டத்தை தொடர்ந்தாள்; அவளது மௌனத்திலுள்ள மாற்றங்கள் மூலம் அவள் என்ன யோசிக்கிறாள் என்று என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.



ரயில் தண்டவாளங்களின் மறுபுறமுள்ள சிவப்பு விளக்கு மாவட்டத்தை கடந்தோம்; அங்கு வன்ணம் பூசப்பட்ட சிறுவீடுகளும், துருவேறிய அவற்றின் கூரைகளும், தாழ்வாரத்தில் இருந்து தொங்கிய வளையங்களில் அமர்ந்து கிராக்கிகளை போர்ச்சுகீஸ் மொழியில் அழைத்துக் கொண்டிருந்த பாரமரிவாரத்திலிருந்து வந்த மூப்பேறிய கிளிகளும் தெரிந்தன. ஊர்திகளை நீரடித்து கழுவும் இடத்தை கடந்தோம்; அதன் பிரம்மாண்ட குவிமாடத்தில் வலசைப்பறவைகளும் , வழிதொலைத்த பறவைகளும் உறக்கம் கொள்ள அடைக்கலம் அடைந்தன. மாநகரத்தினுள் நுழையாமல் அதன் எல்லையை சுற்றி வந்தோம்; ஆனால் அதன் அகன்ற ஏகாந்தமான தெருக்கள், மற்றும் மாலை வேளைகளில் முடிவற்ற பியானான் பயிற்சிகள் நடக்கும், தரைமுதல் கூரைவரை நீண்ட சாளரங்கள் கொண்ட ஒற்றை மாடி வீடுகளின் பழங்கால அலங்கார சிறப்பைக் கண்டோம். எந்த முன்னறிவிப்பும் என்று அம்மா சுட்டிக் காட்டினாள்.
"பார்", அவள் சொன்னாள், "அங்கேதான் உலகம் முடிந்து போனது"
Read More

Thursday, 17 December 2009

கதை சொல்ல வாழ்கிறேன் (மார்க்வெஸ்): அத்தியாயம் 7


இது போன்று மற்றொரு இரவின் போது, நாங்கள் சியனாகா கிராண்டேவைக் கடக்கையில் பாப்பலேலோ என்னை சிற்றறையில் தூங்க வைத்து விட்டு, மதுபான விடுதிக்கு சென்றார். அது என்ன நேரமென்று நினைவில்லை; சிற்றறையில் துரு பிடித்த மின்விசிறியின் பொம்மென்ற இரைச்சல் ஒலி மற்றும் உலோகப் பட்டிகைகள் மோதி கலகலக்கும் ஒலிக்கும் மத்தியில் நான் கும்பல் ஒன்றின் கூச்சல் கூப்பாடுகள் கேட்டு எழுந்தேன். எனக்கு அப்போது வயது ஐந்துக்கு மேல் இருக்காது; ரொம்பவே பயந்து போய் விட்டேன். ஆனால் அக்கூச்சல் விரைவிலே அடங்கிவிட, நான் அதுவொரு கனவு என்று நினைத்தேன். காலையில் மதகுடை கலத்துறையில் நாங்கள் இருந்த போது, தாத்தா தன் நேர் சவரக்கத்தியுடன் நின்று சவரம் செய்து கொண்டிருந்தார், கதவு திறந்திருந்தது; சட்டத்திலிருந்து கண்ணாடி தொங்கிக் கொண்டிருந்தது துல்லியமாக நினைவுள்ளது. அவர் அப்போதும் சட்டை போட்டிருக்கவில்லை. ஆனால் உட்சட்டைக்கு மேல் அகலமான பச்சை நேர்கோடுகள் கொண்ட நிரந்தர தொய்வு வார்களை அணிந்திருந்தார். இப்போதும் கூட என்னால் பார்த்த உடனே அடையாளம் காண இயலும் நபர் ஒருவருடன் அவர் சவரம் செய்தபடி விடாமல் பேசினார். அப்படியே காகத்தின் பக்கவாட்டுத் தோற்றத்தை கொண்டிருந்த அவர் வலக்கையில் மாலுமியின் பச்சை குத்தியிருந்தார்; மேலும் அவர் கழுத்தை சுற்றி பல கெட்டியான தங்க மாலைகளும், இரு மணிக்கட்டுகளிலும் தங்க கையணி மற்றும் வளையல்களும் அணிந்திருந்தார். நான் ஆடைகள் அணிந்து பூட்ஸ் போட்டு படுக்கையில் அமர்ந்திருக்கும் போது, அந்த மனிதர் என் தாத்தாவிடம் சொன்னார், "கொஞ்சமும் சந்தேகமில்லை கர்னல், அவர்கள் விரும்பியதெல்லாம் உங்களை தண்ணீருக்குள் வீசவே"
தாத்தா புன்னகைத்தார்; சவரத்தை நிறுத்தாமலேயே தனக்கே உரித்தான இறுமாப்புடன் பதிலிறுத்தார், "அதுக்கு முயலாதது அவர்களுக்கு நல்லதாகப் போச்சு"


இரவின் ஆரவாரத்தின் பொருள் எனக்கு அப்போது விளங்கியது; தாத்தாவை யாரேனும் சதுப்பில் தூக்கி வீசியிருப்பார்கள் என்று எண்ணிட எனக்கு தூக்கி வாரிப் போட்டது. அம்மாவுடன் வீட்டை விற்க சென்று, சூரியனின் முதல் கதிர்களில் சியாராவின் பனி நீலமாய் ஒளிர்வதை சிந்தித்துக் கொண்டிருந்த அந்த விடிகறையில் இந்த விளக்கப்படாத நினைவெழுப்பல் படலம் என்னை திடுக்கிட வைத்தது; கால்வாய்களில் நேர்ந்த தாமதம் காரணமாய் சதுப்பு நிலத்திலிருந்து கடலை பிரிக்கும் பிரகாசமான மணற்துண்டை காண நேர்ந்தது; அங்கு வெயில் காய்வதற்கு வலைகள் விரிக்கப்பட்டு, மெலிந்து, அழுக்கான சிறார்கள் கந்தல் துணிப்பந்தால் சாக்கர் ஆடும் மீனவ கிராமங்கள் தெரிந்தன. வெடிமருந்து குச்சிகளை சற்று தாமதித்து வீசியதால் கைகள் தூண்டிக்கப்பட்டு தெருக்களில் திரிந்த மீனவர்களின் எண்ணிக்கை திகைக்க வைத்தது. கப்பல் கடந்திடும் போது பயணிகள் சுண்டி விடும் நாணயங்களுக்காக சிறுவர்கள் பாயத் துவங்கினர்.
சியனாகோ நகரத்தில் இருந்து சற்று தொலைவில் கொள்ளை நோய் விளைவிக்கும் சதுப்பு நிலமொன்றில் நங்கூரம் இறக்கிய போது மணி ஏறத்தாழ ஏழு இருக்கும். சுமைதூக்கிகளின் குழுக்கள் முட்டியளவு சேற்றில் மூழ்கி எங்களை தோள்களில் தூக்கியபடி, விவரிப்புக்கு அப்பாற்பட்ட, சேற்றில் போட்டியிடும் வான்கோழி பருந்துகளிடையே நீரை வாரியடித்தபடி, எங்களை செயற்கை துறைமுகத்துக்கு கொண்டு சேர்த்தனர். நாங்கள் துறைமுகத்தில் மேஜைக்கு பின்னே அமர்ந்தபடி சுவைமிக்க சதுப்பு நில மேஜோரா மீன் மற்றும் பொரித்த பச்சை வாழைக்காய் துண்டுகளால் ஆன சிற்றுண்டியை சாவகாசமாக சாப்பிட்டோம்; அப்போது அம்மா தன் தனிப்பட்ட போர்த்தாக்குதலை தொடர்ந்தாள்.


"சரி, கடைசியாக சொல்", அவள் தலை நிமிராமலேயே சொன்னாள், "நான் உன் அப்பாவிடம் என்ன சொல்லட்டும்?"
யோசிக்க சற்று நேரம் எடுத்துக் கொள்ள முயன்றேன்.
"எதை பற்றி?"
"அவருக்கு வேண்டிய ஒரே விஷயத்தை பற்றி", அவள் சற்று எரிச்சலுடன் சொன்னாள், "உன் படிப்பு"
என் அதிர்ஷ்டத்துக்கு பக்கத்தில் உணவருந்தும் அடக்கமற்ற ஒருவர் எங்கள் உரையாடலின் தீவிரத்தன்மையால் தூண்டப்பட்டு என் காரணங்களை அறிய விழைந்தார். அம்மாவின் உடனடி பதில் என்னை அச்சுறுத்துவதோடு அல்லாமல் ஆச்சரியப்படுத்தவும் செய்தது;அவள் தன் தனிப்பட்ட வாழ்க்கையை பொறாமையுடன் பாதுகாத்து வருபவள் என்பதே காரணம்.
"அவனுக்கு எழுத்தாளன் ஆக வேண்டுமாம்", அவள் சொன்னாள்.
"ஒரு நல்ல எழுத்தாளனால் நன்றாக சம்பாதிக்க முடியும்", அந்த நபர் முழுத்தீவிரத்துடன் படிலளித்தார், "எல்லாவற்றையும் விட முக்கியமாக, இவன் அரசில் அந்த பணி செய்யும் பட்சத்தில்"
அவளது புத்தி சாதுர்யத்தாலோ அல்லது இந்த எதிர்பாராது இடை-புகுந்தவர் வழங்கின தர்க்கங்களை கண்டு அஞ்சியோ அம்மா விவாதப் பொருளை மாற்றினாள்;ஆனால் அதன் விளைவாக இருவரும் என் தலைமுறையின் எதிர்பாராத தன்மை குறித்து தங்களுக்குள் இரக்கப்பட்டு, தங்களது கடந்தகால ஏக்கநினைவுகளை பகிர்ந்து கொண்டனர். முடிவில் இருவரும் பரிச்சயமானவர்களின் பெயர்களைத் தொடர்ந்து சென்று, தாம் இருவரும் கோட்ஸ் மற்றும் இகுவாரன் உறவுவழிகளில் இரட்டிப்பு சொந்தம் கொண்டவர்கள் என்பதை கண்டுபிடித்தனர். அந்நாட்களில் நாங்கள் கரீபியன் கடற்கரை ஓரமாய் சந்தித்த இரண்டு மூன்று நபர்களிடம் இவ்வாறு நிகழ்ந்தது, அம்மா இதை ஒரு அற்புத நிகழ்வாய் எப்போதும் கொண்டாடினாள்.

Read More

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates