என் அம்மா கவனித்தாள்; உடனடியாக மருத்துவரின் ஆதரவை வேண்டினாள், “யோசித்து பாருங்கள் தோழரே”, அவள் சொன்னாள், “அவனுக்கு எழுத்தாளனாக வேண்டுமாம்”. மருத்துவரின் முகத்தின் அவர் கண்கள் பிரகாசித்தன. “எத்தனை அற்புதமானது தோழி!”, அவர் சொன்னார், “அது இறைவனின் வரப்பிரசாதம் அல்லவா”. பிறகு என்னிடம் திரும்பினார், ‘கவிதையா?“
“ நாவல்கள் மற்றும் கதைகள்”, நான் பதற்றத்துடன் சொன்னேன். அவர் உற்சாகமுற்றார், “டோனா பார்பரா படித்திருக்கிறாயா?”. ”நிச்சயமாய்”, நான் பதிலளித்தேன், “அதோடு ரோமுலா கேலிகோஸ் எழுதிய எல்லாவற்றையும்”. ஒரு திடீர் உத்வேகத்தால் புத்தூக்கம் பெற்றது போல் அவர் மராகெய்போவில் உரையாற்றின போது அவரை சந்தித்துள்ளதாக சொன்னார்; அவர் தனது நூல்களுக்கு தகுதியாக தோற்றம் கொண்டவராக தெரிந்தார். நிஜம் என்னவென்றால் மிஸ்ஸிஸிப்பி தொடர் நாவல்களுக்கான என் 104 டிகிரி ஜுரத்தோடு எங்கள் உள்ளூர் நாவலின் மையதையல்களை பார்க்க ஆரம்பித்திருந்தேன்.
என் பால்யகால பயங்கரமாக விளங்கின அந்த மனிதருடன் இத்தனை எளிய நட்பார்ந்த உரையாடல் நிகழ்வது எனக்கு ஒரு அற்புதமாக பட்டது. அவரது உற்சாக போக்கோடு செல்ல நானும் தலைப்பட்டேன். “லா ஜிராபா அல்லது தெரி ஜிராப்” -- எல் ஹெரால்டாவில் எனது தினசரி விமர்சன பத்தி – பற்றி சொன்னேன்; பிரமாதமான எதிர்பார்ப்புகளுடன் ஒரு பத்திரிகையை மிக விரைவில் நான் பிரசுரிக்க தலைப்படும் தகவலையும் சொன்னேன். மேலும் அதிக உறுதி பெற்று, அந்த திட்டம் பற்றி அவரிடம் கூறி, அதற்கு பரிந்துரைக்கப்பட்ட பெயரைக்க் கூட சொன்னேன்: குரோனிக்கா.
தரைமுதல் கால் வரை ஆராய்ந்து பார்த்தார். ” நீ எப்படி எழுதுவாய் என்று எனக்கு தெரியாது”, அவர் சொன்னார், “ஆனால் இப்போதே ஒரு எழுத்தாளர் மாதிரித்தான் பேசுகிறாய்”. அம்மா அவசரமாக உண்மையை விளக்கினாள்: எனக்கு திடமான அடித்தளத்தை தரும் பல்கலைக்கழக கல்வியை நான் தொடர்ந்து படிக்கும் பட்சத்தில், நான் எழுத்தாளன் ஆவதை யாரும் எதிர்க்கவில்லை, மருத்துவர் எல்லாவற்றையும் சுருக்கமாக முடித்து, என் எழுத்தாள தொழில் பற்றி பேசினார். அவரும் எழுத்தாளராக விரும்பினார். ஆனால் அவர் பெற்றோர் என் அம்மா பயன்படுத்தும் அதே வாதங்களைக் கொண்டு அவரை, ராணுவ வீரராக்க முடியாத பட்சத்தில், மருத்துவம் படிக்க கட்டாயப்படுத்தினார். “ஆக, பாருங்கள் தோழி”, அவர் தீர்மானமாக சொன்னார், “ நான் ஒரு மருத்துவன். இங்கே இதோ நான் எத்தனை நோயாளிகள் கடவுள் விருப்பப்படியோ அல்லது என் மருந்துகளின் காரணமாகவோ இறந்து போயினர் என்பது தெரியாமல் இருக்கிறேன்”. அம்மா வாயடைத்து போனாள்.
No comments :
Post a Comment