வா.மணிகண்டனுக்கு சுஜாதா விருது கிடைத்துள்ளது. என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
அவர் சரளமாக சுவாரஸ்யமாக எழுதக் கூடியவர். சில வேளை இணையத்தில் அவர் வேண்டுமென்றே பரபரப்பான மேட்டரை எழுதுவார். சிலவேளை இலக்கில்லாமல் ஓட்டுவார். ஆனால் நம்மோடு நேரடியாக பேசும் தொனியில் சலிக்காமல் எழுதுவார். முக்கியமாக அவர் பொய் சொல்வதாக படாது.
வா.மணிகண்டன் ஒரு முடுக்கிவிடப்பட்ட எந்திரத்தை போன்றவர். பட்படென்று நிறைய எழுதி விடுவார். அந்த எனர்ஜி முக்கியம். எழுத சுணக்கமே இல்லை. இப்படியானவர்கள் தமிழில் அரிது. அதனால் தான் பத்திரிகைகள் அவரை சரியாக பயன்படுத்தவில்லை என்கிற ஆதங்கம் எனக்கு உண்டு. மேலும் நிறைய உழைத்து தகவல் சேர்த்து எழுதக் கூடியவர். கல்கியில் வந்த தொடரை குறிப்பிடலாம். உயிர்மையில் வேலை செய்த ஒரு மாதத்தில் நான் அவரை உயிரோசைக்கு எழுத வைக்க முயன்றேன். நான் ஒரு பத்திரிகை ஆசிரியன் என்றால் அவரை நிறைய பயன்படுத்திக் கொள்வேன். உந்தித் தள்ளி எழுத வைக்க வேண்டியதில்லை. அவராகவே எழுதிக் கொடுப்பார்.
வா.மணிகண்டன் கட்டுரையாளர் என்பதை விட மேலான கவிஞர் என்பேன். அவரது மரணவீடு குறித்த கவிதை ஒன்று நினைவில் உள்ளது. நல்ல கவிதை. ஒரு கவிஞராகவும் அவர் மீது எனக்கு எதிர்பார்ப்புகள் உண்டு.
நிசப்தம் இணையதளத்துக்கு கிடைத்த அங்கீகாரம் குறித்த எனக்கு மகிழ்ச்சி!
வா.மணிகண்டன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
ReplyDelete//முக்கியமாக அவர் பொய் சொல்வதாக படாது//
ReplyDeleteநெசமாவா?