பெண் உயரதிகாரிகள் பற்றின நீயா நானாவில் சிவகாமி அருமையாக பேசினார். அவர் சொன்னதில் என்னைக் கவர்ந்தவை:
1. பெண்கள் இரட்டை வாழ்க்கை வேண்டி இருக்கிறது. வீட்டில் அடிமை. வேலையிடத்தில் உயரதிகாரி. ஆண்களுக்கு நேர்மாறாக நடக்கிறது. விளைவாக முரண்பாடுகள் தோன்றுகின்றன
2. பெண்கள் ஒரு வேலையை நேரத்துக்கு செய்து முடிப்பதில் மிகையான முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். கீழ்நிலை பணியாளர்கள் செய்யாவிட்டால் திட்டி டென்ஷன் பார்ட்டி என பெயர் வாங்குகிறார்கள்
3. அவர்கள் விமர்சனத்தை தாங்கும் பக்குவம் இல்லாமல் இருக்கிறார்கள். உம்மென்றால் அழுது விடுகிறார்கள். இந்த பயம் தான் அவர்களிடம் கோபத்தை உண்டு பண்ணுகிறது.
4. அதிகாரத்துக்கு அனுசரணையாக இருக்க தலைப்படுகிறார்கள். இதுவும் உயரதிகாரியாக அவர்கள் காட்டும் இறுக்கத்துக்கு காரணம்.
5. இந்தியர்கள் இயல்பில் படிநிலை உணர்வு மிக்கவர்கள். அவர்களால் ஒரு குழுவில் கூட்டாக வேலை செய்வது கடினம். உயரதிகாரியை பெயர் சொல்லி அழைப்பது, அவர் முன் அமர்வது எல்லாம் தவறு என இன்றும் நம்புகிறார்கள்.
பெண்கள் இளவயதில் இருந்தே இப்படி படிநிலைக்கு பழக்கப்படுத்தப்படுவதால் அவர்கள் அலுவலகத்தில் சகஜமாக பழக சிரமப்படுகிகிறார்கள்.
5. இதையெல்லாம் மாற்ற முதலில் நிறுவனங்கள் தொழிலாளர் நலனில் ஆர்வம் காட்டி லாபமே முழுமுதல் நோக்கு எனும் நிலையை மாற்ற வேண்டும்.
சிவகாமிக்கு வாழ்த்துக்கள்! எனக்கு அவர் மீதிருந்த மரியாதை பன்மடங்காகி விட்டது. மேலும் பல பெண்கள் அவரை ஒரு முன்மாதிரியாக கொண்டு உணர்ச்சிவசப்படாமல் தர்க்கரீதியாக அறிவார்த்தமாக யோசிக்க துவங்க வேண்டும்.
No comments :
Post a Comment