குமரி மாவட்ட கிறுத்துவர்கள் பொதுவாக திரையரங்குக்கு குடும்பமாக போக மாட்டார்கள். வாலிபர்கள் ஒளிந்து பதுங்கி ஏ படம் பார்ப்பது போல் சினிமாவுக்கு போவார்கள். வீட்டில் டி.வியில் அல்லது திருட்டு டி.வி.டியில் படம் பார்ப்பார்கள்.
திருநெல்வேலி கிறித்துவர்கள் இன்னும் கட்டுப்பெட்டியாம். என்னுடைய நண்பர் அப்படி ஒரு ஆச்சார கிறித்துவப் பெண்ணை காதலித்து மணந்தார். அப்பெண் தன் வாழ்நாளில் படமே பார்த்தது இல்லை. அவரை முதன்முதலாக நண்பர் திரையரங்குக்கு அழைத்துப் போனார். எல்லாம் நன்றாக போய்க் கொண்டிருந்தது. திடீரென்று மனைவி ஜெர்க்காகி கணவனிடம் “எனக்கு படமே புரியவில்லை” என புகார் செய்தார். அவர் விசாரிக்க மனைவி பிளேஷ் பேக் காட்சியை குறிப்பிட்டு “ஏன் திடீரென்று படம் பின்னால் போகிறது, எனக்கு குழப்பமாய் இருக்கிறது” என்றார். நண்பர் எவ்வளவு விளக்கியும் அவருக்கு பிளேஷ் பேக் என்கிற உத்தி புரியவில்லை. அத்தோடு அவர்கள் சேர்ந்து படம் பார்க்க போவதும் நின்று போனது.
இதில் எனக்கு ரெண்டு விசித்திரங்கள் பட்டன. ஒன்று தமிழகம் சினிமாவை வழிபடும் மாநிலம் எனப்படுகிறது. ஆனால் இங்கு பெரிதும் கொண்டாடப்படுகிற சமகால படங்களைக் கூட அறியாமல் பலர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களின் வாழ்வில் சினிமாவின் பாதிப்பே இல்லை. ஒரு கறுப்புவெள்ளை புகைப்படம் போல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். கடும் ஆச்சாரங்களை மேற்கொள்ளுகிற பிராமணர்கள் கூட இப்படி இல்லை. இஸ்லாமியர்களைப் பற்றி தெரியாது. ஆனால் மேற்கில் கிறித்துவ நாடுகளில் கூட இல்லாத ஒரு ஒழுக்கம் இங்கு ஆங்கிலப் பெயர் வைத்திருக்கும், நவீனப்பட்டதாய் நாம் நம்பிக் கொண்டிருக்கும் கிறித்துவர்களிடம் உள்ளது.
அடுத்தது பிளேஷ் பேக். பிளேஷ்பேக் புரியாத ஒருவருக்கு எந்த கதையையும் வாசிக்க கேட்க அறிய முடியாது. நம் சிந்தனைகளை கோர்ப்பது, நினைவை மீட்பது, சம்பவங்களை கதைப்பது என அனைத்திலும் பிளேஷ் பேக் உள்ளது. அதை புரிய முடியாத ஒருவர் எப்படி ஒரு மொழியில் உரையாடுகிறார் என்பதே புரியாத பெரும் விசித்திரம்.
அவர்களுக்கு இந்த விஷயம் எல்லாம் புரிந்துவிட்டால் கிறிஸ்துவத்தை விட்டு வெளியே வந்துவிடுவார்கள். என்னுடன் பணியாற்றும் எல்லா ஐரோப்பிய நண்பர்களுக்கும் கிறித்துவத்தின் மீது துளி நம்பிக்கையும் இல்லை.
ReplyDeleteகிருஸ்துவத்தையும் சினிமாவையும் யார் இணைத்தார் என்பது தெரியவில்லை.
ReplyDeleteஇது இன்றும் ஒரு குழப்பமான கருத்தாகவே இருக்கிறது.
இதற்கே ஒரு தனி ஆராய்ச்சி தேவைபடுகிறது.
இந்த பகுதியில் கல்விக்கு தேவைக்கு அதிகமாக முக்கியத்துவம் இருப்பதால் புத்தகங்களை போல சினிமாவும் சிறு வயதிலிருந்தே சமூகத்தால் தவிர்க்க படுவதாக எனக்கு தோன்றுகிறது.