பன்னிரெண்டு வருடங்களுக்கு முன் ஒருநாள் அவசரமாக நண்பர் முஸ்தபாவின் புத்தகக்கடை அரட்டையில் இருந்து அவசரமாக துண்டித்து “படிக்கணும்” என்று கிளம்ப முற்பட்ட போது கவிஞர் நட.சிவகுமார் “என்ன படிக்கணும்?” என்றார். இளங்கலை பாடத்திட்டத்தில் உள்ள ஒரு நூலின் பெயரை சொன்னேன். அவர் “டேய் நாங்கெல்லாம் பாடபொஸ்தகம் படிச்சதே இல்ல. உன்னால் எப்படி பாடத்துல உள்ளத படிக்க முடியுது?” என்று வினவினார். நான் அவரிடம் படித்து உயர்ந்த மதிப்பெண் பெற்று நல்ல வேலை பெற வேண்டிய கனவை சொன்னேன். அவர் நக்கலாக சிரித்து விட்டு திரும்பிக் கொண்டார். பிறகு பன்னிரெண்டு வருடங்களுக்குப் பிறகு நான் என் மாணவர்களிடம் முதல் மதிப்பெண் பெறுவதனால் எந்த பயனுமில்லை என்ற உண்மையை விளக்கி வருகிறேன். முதல் ரேங்க் வாங்கினவர்கள் எல்லாரும் உயர்பதவி பெறுவதில்லை. பணம், அதிகாரம், அந்தஸ்துக்கும் மதிப்பெண்ணுக்கும் சம்மந்தமில்லை. பொதுவாக ஆசிரியர்கள் மாணவர்களை உசுப்பேற்றுவதற்காக படித்தால் முன்னேறலாம் என பொய் சொல்லுகிறார்கள். கல்லூரிக்கு வெளியே செய்யும் வேலைகள், அது அரசுத் தேர்வுகளோ தனியார் நுழைவுத்தேர்வுகளோ, தாம் முக்கியம். இவை எதுவும் இல்லாமல் கூட மிக நன்றாக வாழலாம். பள்ளியில் இருந்து கல்லூரி வரை ஒழுங்காய் தேர்வாகி சான்றிதழோடு வெளியேறினால் போதும்.
No comments :
Post a Comment