சளி தொண்டை வலி நிவாரணத்துக்காக டாக்டர் அறைக்குள் நுழைந்த போது அவர் மடித்து வைத்த நாளிதழ் பக்கங்களை ஓரமாய் திறந்து அவசரமாக நுணுகி பார்த்துக் கொண்டிருந்தார். என் சளி தொந்தரவுகளை திரும்பத் திரும்ப சொன்னதை பொறுமையாக கேட்டவர் இரட்டிப்பு வேகத்தில் மருந்து பரிந்துரையை எழுதினார். “ஒரு வருடமாய் சளியே இல்லை டாக்டர், ஆனால் இந்த ஒரு மாதமாக திரும்பத் திரும்ப ஜலதோசம் பிடித்துக் கொள்கிறது”.
“இல்லை அப்படி வராமல் இருந்தால் தான் நீங்கள் கவலைப் பட வேண்டும். ஒரு வருடம் சளி, ஜுரமே வராமல் இருந்தால் தான் ஏதோ பிரச்சனை என்று அர்த்தம்”, என்றார் டாக்டர்.
ஜுரம் வந்தது போல் ஒரு ஜில்லிடல் உடலில் பரவியது. தொடர்ந்தார், “இதோ பாருங்க, சளி வந்தா உங்கள் தடுப்பு சக்தி புதுப்பிக்கப்பட்டு வலுப்படும். உங்கள் உடல்நலம் அப்போது தான் மேம்படும்”. அவர் பார்வை பத்திரிகை பக்கம் சென்றது. “ஒரு நாட்டுல எந்த பிரச்சனையும் இல்லேண்ணு வச்சுக்குங்க அது நாட்டோட வளர்ச்சிக்கு கேடு. அதே மாதிரி ...”
வீட்டுக்கு வரும் வரை தலைவலி பிடித்துக் கொண்டது. ஒரு பரிணாமக் கோட்பாட்டாளர் எழுதியது நினைவு வந்தது. ஒரு தீவு. இயற்கை வளங்கள் அதிகப்படியாக உள்ள பிரதேசம். அங்கு வாழும் பழங்குடிகளுக்கு சவாலாக புலி, சிங்கம் போன்ற வேட்டை மிருகங்களுக்கும் இல்லை. ரொம்ப ரம்மியமான அமைதியான தீவு. பல தலைமுறைகளாக அந்த மனிதக் குழு அங்கு பிற மனிதக் குழுக்களின் தொடர்பின்றி சௌகர்யமாக வாழ்ந்து வருகிறது. பல நூற்றாண்டுகளுக்கு பிறகு அறிவியலாளர்கள் இந்த தனிமைத் திவு மனிதர்களை கண்டடைகிறார்கள். பக்கத்து வனங்களின் பழங்குடிகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் குள்ளர்களாக இருந்தார்கள் இவர்கள். தலைமுறை தலைமுறையாக சவாலற்ற வாழ்வு அவர்களை குறுக்கி விட்டது. பிரச்சனைகளற்ற சூழல் அவர்களை குள்ளர்களாக்கி விட்டது. கண்ணீரற்ற வாழ்க்கை கசப்பானது.
கண்ணீரற்ற வாழ்க்கை கசப்பானது
ReplyDeleteஉண்மை!
அட.. இது புதுசாயிருக்கே..!
ReplyDeleteஆழ்ந்த கருத்து...
ReplyDeleteமிகவும் உண்மை.
ReplyDeleteஇங்கிலிஷில் இதை தான் கம்போர்ட் ஜோன் என்பார்கள்
பகிர்வுக்கு நன்றி
-ஸ்ரீராம்
- http://sriramsrinivasan.net
அருண் பிரசாத், மதுமிதா, ராசராச்சோழன் மற்றும் ஸ்ரீராம், உங்கள் கருத்துக்களுக்கு நன்றி!
ReplyDeletevery good thoughts... nice
ReplyDeleteநன்றி ரியாஸ்
ReplyDelete