Saturday, 26 June 2010
வீட்டுக்குள் வரப் பிடிக்காத பூனை
கிளர்த்திய தூசுகளாய்
எங்கும் அலைந்து திரியும் பூனை
சில நேரங்களில் கேட்டும் கேட்காத மாதிரி பார்த்து
பல நேரங்களில் பார்த்தபடி உதாசீனித்து
என் கவனம் கிடைக்காத வேளைகளில்
வேண்டுதல், கெஞ்சல், தேம்பல், கோபம், சுயவிவாதம், நியாய விசாரணை என
ஒவ்வொரு தொனியிலாய் முடிவற்ற அழைப்புகள் செய்து
யாருக்கும் புரியாத செல்ல விசாரிப்புகளுக்கு மட்டும்
அரைத்தூக்கத்தில் ங்...ம் என முனகி
சில வரிகளில் அடங்கும் பூனை வாழ்வு
தூக்கம், உணவு தவிர்த்த
தேவை:
விளையாட்டுக்கள்
தொந்தரவற்ற இடங்கள்
அடையாத தொலைவுகளை நோட்டமிட உயரங்கள்
வேறு புகார்கள் இல்லை
லோசன் ஊற்றி துடைத்து
நுண்ணியிர்கள் வெளியேற்றி சுத்தம் செய்த நாளொன்றில்
வீட்டுக்குள் வரமறுத்தது
பூனை
Share This
Subscribe to:
Post Comments
(
Atom
)
பிடித்த விலங்கு பூனையா ...கவிதை நன்று...
ReplyDeleteரொம்ப நல்லா இருக்குங்க...
ReplyDeleteஹா ஹா அருமை!
ReplyDeleteநன்றி ராசராசசோழன், கமலேஷ் மற்றும் வழிப்போக்கன்
ReplyDeleteஇந்த கவிதையின் உளவியல் இன்னும் பல கவிதைகளை எழுதச்சொல்கின்றது.
ReplyDeleteரொம்ப பிடிச்சிருக்கு...
நன்றி நளினி சங்கர்
ReplyDelete