காலணி பளபளப்பு
தேய்க்க மறந்த சுருக்கங்கள்
சில பல வைட்டமின் நரைமயிர்கள்
தயாரித்த வார்த்தைகளை நினைவூட்டியபடி
வேலைக்காய்
வாசலில்
சில நொடிகள் விறைத்து நின்று
அசைக்கப்பட்டு
நகர்த்தப்பட்டு
கவனித்து
கவனிக்கப்பட்டு
பேசி
கேட்டு
'வேண்டுமென்றால் கூப்பிடுவோம்' என
வெளித் தள்ளப்பட்டு
மற்றொரு
மேன்சன்
அரைகுறைக் காலை
குளியலறை
இருள்
சிதறும் நீர்
சுவர்ச் சிலந்தி
த
ள்
ளி
ப்
போ
ய்
அமர்ந்தது
எந்த நொடியில் -- தெரியவில்லை
அருமை...
ReplyDeleteகவிதையில்
ReplyDeleteஒரு வலியை உணர்கிறேன்.
நன்றி நளினி சங்கர் மற்றும் மது்மிதா
ReplyDelete