பூனைக்கான ஆழம்
கீழிருந்து பார்த்தால்
தெரிவதில்லை
பூனைக்கான உயரம்
மேலிருந்து பார்த்தால்
தெரிவதில்லை
விளிம்பில் அமர்ந்திருக்கும் பூனை
கீழே தாவுவதோ
மேலே எம்புவதோ
பூனையின் விளிம்பு
எங்கிருந்து பார்த்தாலும்
தெரிவதில்லை
பூனை நன்கு தெரிந்த
ஒரு சொல்லின் மீது அமர்ந்திருக்கிறது
நன்கு தெரிந்ததனாலே
யாரும் யாரிடமும் சொல்வதில்லை
அது அமர்ந்திருக்கவில்லை
விளிம்பின்
ஆழ உயரங்களை
அதன் இரு பக்கங்களை
தீர்மானிக்கிறது
அது வானத்தில் பறப்பதாய் தெரியும்
ஒரு கோணம் கூட உண்டு
பூனை அமர்ந்திருப்பது இல்லை
அதை யாரும் பார்ப்பது இல்லை
வித்தியாசமான கோணத்தில் எழுதப்பட்ட கவிதை.
ReplyDeleteபூனை இல்லை ஆனால் உண்டு ..
ReplyDeleteintriguing ,very intriguing
நன்றி சித்ரா மற்றும் பத்மா
ReplyDeleteநல்லா புரிஞ்சிடுச்சுங்க... :)
ReplyDelete