ஜுரத்தில் இருக்கும் நாய்
அப்பால்
பாலத்தில் செல்லும் ரயிலின்
அலறலுக்கு
மெல்ல
எழுந்து படுக்கிறது
ஓசை அடங்கியதும்
மூச்சு சீராகிறது
பக்கத்து பால்கனியில்
விளையாடும் குழந்தைகளை நோக்கி
இருமுறை குரைத்து விட்டு வருகிறது
தன் எஜமானனுக்காக
ஆனாலும்
அவரிடம் வாலாட்டி கொஞ்சி விட்டு
திரும்புகிறது
கடிகாரம் பார்க்க தெரியாவிட்டாலும்
அதனதன் நேரத்திற்கு முன்பே
அங்கு சென்று
ஜன்னலையும் கதவையும் உணவுத்தட்டையும் நீர்க்குவளையையும் படுக்கையையும் விளையாட்டு பொருட்களையும்
கவனிக்கிறது
புதிய வாசனைகள் வராத
காற்று அடைபட்டுப் போன
மனிதர்களின் எதிரொலிகள் மட்டும் கேட்கிற
திரும்பத் திரும்ப அதே வேளைகளில்
அழைப்பு மணிகள் அடிக்கிற
அடைபட்டுப் போன
வீட்டில்
ஒரு புதிய திறப்பை
மோப்பம் பிடித்து கண்டுபிடிக்க
சின்ன சிறகடிப்புகளை தேடி பாய்ந்து செல்ல
வெளியேறாத பொழுதுகளில்
தன் கழுத்துக் கயிறை தானே தூக்கி நடக்க
அது தவறுவதில்லை
கதவு ஏன் மூடப்படவில்லை
அல்லது
கதவை யார் மூடவில்லை
என்று அது
கேட்பதில்லை
வாசலில் சென்று படுத்த பின்
ஏன் இக்கதவு
இன்னும் மூடவில்லை
என்று அசட்டையாய் யோசிக்கிறது
அவ்வெண்ணத்தை ஸ்தாபிக்க
ரெண்டு குரை குரைக்கிறது
ஜுரத்தில் இருக்கும் நாய்
தான் விடுப்பில் இருக்கும் போது
வீடு
எப்படி இருக்கிறது
என்று அரைக்கண்ணை திறந்து
கவனிக்கிறது
நாய்களின் நன்றி விசுவாசத்தை அழகிய கவிதையாகத்
ReplyDeleteதந்த உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றியும் வாழ்த்துக்களும்....
நாயின் குணத்தை நயமாக சொன்ன விதம் அற்புதம் வாழ்த்துக்கள்..
ReplyDeleteதன் எஜமான் மீதும் அந்த வீட்டின் மீதும் நாய்கள் வைத்திருக்கும் விசுவாசத்தை படம்பிடித்துள்ளீர்கள் வாழ்த்துகள்.மீதும் நாய்கள் வைத்திருக்கும் விசுவாசத்தை படம்பிடித்துள்ளீர்கள் வாழ்த்துகள்.
ReplyDelete