”ஹலோ சார் நாங்க ….”
“ஆங் எதுன்னாலும் ஜனவரியில ஒரு காப்பி ஷாப்புல பேசிக்கலாம்”
“உங்க மளிகை பாக்கி 350 தர வேண்டியிருக்குன்னு சொல்ல கூப்பிட்டேன்”
“ஓ அப்டியா என் அக்கவுண்ட் நம்பர் தரேன். அதுல அந்த முன்னூத்தம்பதை போட்டுடு”
“நீங்க் தர வேண்டிய காசுங்க. நான் எதுக்கு உங்களுக்கு…?”
“எதுன்னாலும் ஈவனிங் சலூன் ஷாப்புல மீட் பண்ணி பேசிக்கலாம்”
“எனக்கு புல் வழுக்கைங்க. நான் சலூன் வந்து என்ன பண்ண?”
“அதுக்கென்ன? ஷேவ் பண்ணிக்கிட்டே பேசலாம். எங்கிட்ட இலவசமா பேச முடியாது. நான் ரொம்ப ஸ்டிரிக்ட். இன்னொரு கால் வெயிட்டிங்ல இருக்கு. பேசிட்டு வந்திடறேன். ஹலோ”
“சார் நான் டீ ஷாப்ல இருந்து பேசறேன்”
“காப்பி ஷாப் தான் கேள்விப்பட்டிருக்கேன். அதென்ன டீ ஷாப்?”
“உங்களுக்காக ஒருத்தர் இங்கே ரொம்ப நேரமா டீ வாங்கி வச்சு வெயிட் பண்ணிக்கிட்டு இருக்காரு. ஒவ்வொரு டீயா இருபது டீ சாப்டு லூஸ் மோஷன் ஆகி மயங்கி விழுந்திட்டாரு. சீக்கிரம் வாங்க கடைய மூடப் போறேன்”
“இன்னொரு கால் வெயிட்டிங்ல இருக்கு. அப்புறமா கூப்பிடறேன். ஹலோ”
“சார் நான் உங்களோட பரம ரசிகை”
“ஓ அப்டியா உன் குரல் ஸ்வீட்டா இருக்கு. நாம் பேசலாமே, வீட்டுக்கு நேரா நம்ம வந்திடுறியா?”
“இல்ல சார் நான் மதுரையில இருக்கேன்”
“ஓ சரி அப்டீன்னா உடனே சாட்டுக்கு வந்திரு”
இதுக்கு நேராகவே சொல்லிருக்கலாம்.
ReplyDelete