Thursday, 5 December 2013

தெய்வம் நின்று கொல்லும் (தொடர்ச்சி)




காட்சி 2
ஆஸ்பத்திரி வார்டு. ஒரு படுக்கையில் 10 வயது சிறுமி. பெயர் கீதா. அவள் நன்றாக தூங்கிக் கொண்டிருக்கிறாள். நதியா அவளருகே போய் சலைனை சோதித்து விட்டு காய்ச்சல் பார்க்க அவளை எழுப்பி வாயில் தெர்மோமீட்டர் வைக்கிறாள்.
சிறுமி தெர்மோமீட்டரை கடிக்கிறாள்.
நதியா: “கடிக்காதே”
சிறுமி அவளை ஒரு நொடி பார்த்து சிரித்து விட்டு மீண்டும் கடிக்க பார்க்கிறது.
நதியா பொறுமையாக “அப்பிடி இல்லம்மா பாரு இப்பிடி ஆண்டி புடிச்சிகிறேன். நீ ஜஸ்ட் சும்மா இருந்த போதும் ஒகெவா”
குழந்தை தலையாட்டி மறுக்கிறது.
நதியா: “சாக்லேட் தரவா, சமர்த்து இல்ல”
கீதா: “ம்ஹும்”
நதியா: “போகோ? இல்ல வேணாம் வெளியே கூட்டி போறேன். ஐஸ்கிரீம், ஸ்வீட் நிறைய வாங்கித் தாரேன். பைக்கில போலாமா?”
கீதா: “ம்ஹும். நான் கடிக்க போறேன்”
நதியா: “அட என்னையே மிரட்டுறீயா? ம்ம் என்னதான் வேணும்?”
கீதா: “ஓடலாம்”

நதியா: “ஓடிப்புடிச்சு விளையாடனுமா? ஒகெ சரி. ஒருநாள் இதுக்காக என்னை வேலையில இருந்து அனுப்ப போறாங்க. கொஞ்ச கழிச்சு விளையாடலாம், சரியா”
கீதா தலையாட்டுகிறது.
மருந்து கொடுத்து தூங்க வைத்து விட்டு திரும்புகிறவள் திரும்ப வந்து கீதாவின் தலையை வருடி கன்னத்தில் முத்துகிறாள்.
நதியா வெளியே வர எதிரே ஜோவினா வருகிறாள்: “என்ன அந்த லூசு பாப்பா என்ன சொல்லுது?”
நதியா: “அப்பிடி சொல்லாதே. அவ எவ்வளவு சமர்த்து. என் வயித்தில பொறந்திருக்க வேண்டிய பொண்ணு”
ஜோவினா: “என்னமோ இந்த ஆஸ்பத்திரியில நீ நார்மலா பேசுறது அந்த குழந்தைகிட்ட மட்டும் தான். உங்க ரெண்டு பேருக்கும் wavelength ஒத்துப் போகுதுன்னு நெனக்கிறேன்”
நதியா: “இந்த மாதிரி குழந்தைங்க வழியா கடவுள் நம்ம கிட்ட பேசுறாரு. They are divine.”
ஜோவினா: “அப்ப எங்க வழியா என்ன பேய் பிசாசு பேசுதா? அய்யோ ஏன் இப்போ பேயை பத்தி சொன்னேன். என்னோட மாதாவே, இனி முழுக்க பயந்துகிட்டு இருப்பேன்.”
நதியா: “இந்த பாரு. சும்மா நீ தான் பேய் பேய்னு புரளி கிளப்புற. நான் பேயை பார்த்ததா சொல்லவே இல்ல. நான் பார்த்தது நிஜமாவே ஒரு ஆள். ஆக்சுவலி இப்பதான் கொஞ்ச கொஞ்மா அந்த தோற்றம் முழுசா நினைவு வருது. உயரமா சிகப்பா ஒரு கண்ணாடி கூட போட்டிருந்ததா பார்த்தேன். அந்த கையில நிறைய முடி இருந்துது. மணிக்கட்டில ஒரு தாயத்து கட்டி இருந்துது. முகத்தை மட்டும் பார்க்க விட்டுட்டேன்”
ஜோவினா: “யாரு நம்ம டாக்டரா? தோ பாரு அவரே வந்துட்டாரு கேட்கலாமா?”
அங்கு அப்போது மனநல மருத்துவர் கணேஷ் வருகிறார். உயரமான சிகப்பான அழகான இளைஞன். ரிம்லெஸ் கண்ணாடி போட்டிருக்கிறார். நீளமான மூக்கு, கூர் நாசி. லேசான சுருள் மயிர். குறும்பான கண்கள். அவனைப் பார்த்ததும் நதியா வெட்கப்படுகிறாள்.
நதியா: “ச்சீ வாயை மூடு அவருக்கு கேட்டுடப் போவுது”
கணேஷ் மேஜை மேல் உள்ள குறிப்புகளை பார்த்து விட்டு நதியாவிடம் கேட்கிறார்: “அந்த பெட் நம்பர் 32க்கு இப்போ எப்பிடி? தூங்கினாரா?”
நதியா: “இல்ல டாக்டர் நைட்டெல்லாம் கைகால் வலின்னு கத்திக்கிட்டு இருந்தாரு. மத்த பேஷண்ட்ஸ தூங்க விடாம ரொம்ப தொந்தரவா போச்சு. அப்புறம் நான் ஆயின்மெண்ட் போட்டு ஐஸ் வச்சேன். அப்புறமும் தூங்கல. அப்புறம் எங்களை எல்லாம் பார்த்து அசிங்கமா கத்த ஆரம்பிச்சாரு. அதான் நான் அவருக்கு செலஸ்டோன் இஞ்சக்‌ஷன் கொடுத்தேன்”
கணேஷ் கொஞ்சம் கவலையோடு: “எனக்கு போன் பண்ணியிருக்கலாமே?”
நதியா: “இல்ல டாக்டர் அவர் ரொம்ப வயலண்டா இருந்தாரு. He was abusing us. அதான் வேற வழியில்லாம…”
ஜோவினா: “இன்னிக்கு காலையில ரொம்ப வயித்த வலைன்னு துடிச்சாரு”
கணேஷ்: “ஸீ அதான். Corticisteroid போட்டா வயித்த வலி போல நிறைய சைட் எபக்ட் இருக்கு. அப்புறம் நதியா ஒரு நர்ஸுக்கு முக்கிய தேவை பொறுமை. உனக்கு அது தான் இல்ல. To be honest I am disappointed”
நதியா: “சாரி டாக்டர்.”
ஜோவினா குழைந்தபடி: “டாக்டர் எங்க நர்ஸ் குவட்டர்ஸுக்கு நீங்க வந்ததுண்டா?”
கணேஷ் அதிர்ச்சி ஆகிறார்: “ஏன்? நான் ஏன் வரணும்?”
ஜோவினா: “எங்களை எல்லாம் பார்க்க வரலாமே? உங்களுக்கு பெரிய fan followingஏ அங்க இருக்கு.” அப்புறம் அவர் பக்கமாய் சாய்ந்து “புதுசா ஜாயின் பண்ணியிருக்கிற அந்த டிரயினி நர்ஸ் சுகுணா டாக்டர் அப்பிடி டாக்டர் இப்பிடின்னு சதா உங்க புராணம் தான்; என் பக்கத்து பெட் வேறயா கணேஷ் நாமவளி சொல்லி தூங்க விட மாட்டேங்குறா”
நதியா: “அவளுக்கும் ஒரு செலஸ்டோன் குடுத்திரலாம்”
கணேஷ் சின்ன வெட்கத்துடன்: “தட் மதுரை கெர்ல் ரைட். ரொம்ப இன்னெசண்ட் டைப்.”
ஜோவினா: “அதான் டாக்டர். நீங்க வந்து பார்த்தா தெரியும். டாக்டர் உங்களை மாதிரியே ஒருத்தர் நேத்து எங்க குவாட்டர்ஸில நைட்டு ரெண்டு மணிக்கு வந்து வீணா கையை பிடிச்சு இழுத்து அதைப் பார்த்து இவ கத்தி நாங்க எல்லாம் பேயை பார்த்து கத்தி ஓடி ஒரே கலவரமா போச்சு. ”
கணேஷின் முகம் அதிர்ச்சியில் சிவந்து கன்றுகிறது. நெற்றியில் வியர்வை, கண்களில் பதற்றம்: “வாட்?”
நதியா பல்லை கடித்தபடி: “ஜோவி வாயை மூடு”
ஜோவினா சட்டென்று அவர் மணிக்கட்டை பற்றி அதில் உள்ள தாயத்தை காட்டி: “டாக்டர் இதே மாதிரி ஒரு தாயத்து, ஏய் நதி இதே தாயத்தான் பாரேன்.”
நதியா: “நீ இப்போ நிறுத்த போறியா இல்லியா?” என்று கத்தி விட்டு அங்கிருந்து வெளியேறுகிறாள்.
ஜோவினா: “சாரி டாக்டர் ஜஸ்டு ஒரு பிராக்டிகல் ஜோக். நீங்க blush பண்றது பார்க்க க்யூட்டா இருக்குது”
கணேஷ் சிரித்த படி: “தட்ஸ் ஓகெ”
ஜோவினா: “டாக்டர் ஒரு சந்தேகம். பெட் 32 பேஷண்டுக்கு பிரச்சனை தலையில தானே. அவருக்கு severe depression தானே. அப்புறம் ஏன் அவருக்கு உடம்பு வலிக்கணும்”
கணேஷ்: “psychosomatic symptomனு சொல்வோம். மனசு வலி உடம்பு வலியா வெளியே தெரியும். அதனால தான் நதியா அந்த டிரக் குடுத்திருக்க கூடாது. அது நெஜமாவே muscle spasmக்கு ஆனது. சரி வர வர அவ ஏன் இப்பிடி கோபப்படுறா? ரொம்ப டெம்பரமெண்டலா மாறிகிட்டு வரா”
ஜோவினா: “இல்லாத பேயெல்லாம் பார்த்ததா சொல்றா, அவளுக்கு ஏதாவது டிப்ரஷனா டாக்டர்?”
கணேஷ்: “எனக்கும் அது தான் சந்தேகம். நேத்து குவாட்டர்ஸில நைட்டு பார்த்ததா சொன்ன ஆள்கூட அவளோட பிரமையா தான் இருக்கும். Hallucinations. I am worried.”
Share This

No comments :

Post a Comment

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates