Tuesday, 3 December 2013

பிறந்த நாள் உறுதிமொழிகள்




இந்த பிறந்தநாளுக்கான சில உறுதிமொழிகள்
அடுத்த வருடத்தில்

  • இன்னும் நிறைய நண்பர்களை அடைய வேண்டும்
  • நண்பர்கள் அல்லாதாவர்களிடமும் நிறைய பேசி அவர்களை அறிய வேண்டும்
  • எழுத வேண்டியதை எழுத வேண்டும்; பேச வேண்டியதை மட்டுமே பேச வேண்டும்
  • எந்த முடிவையும் ஆசை காரணமாக எடுக்கக் கூடாது – நிறைய ஆராய்ந்து கலந்தாலோசித்து சிறு ஐயம் இருந்தாலும் முடிவை கைவிட வேண்டும்
  • மிக முக்கியமானவர்களை மட்டுமே வெறுக்க வேண்டும். கணிசமானோர் நம் வெறுப்புக்கு தகுதி இல்லாதவர்கள்’
  • உணர்ச்சி உப்பைப் போல – ரொம்ப கொஞ்சமாய் இருந்தாலே சுவைக்கும்.
  • வேலை, பணம், அதிகாரம் சம்மந்தப்பட்ட எதிலும் உணர்ச்சிவசப்படக் கூடாது – திட்டமிட்டு அடைய வேண்டும். இயலாவிட்டால் மீண்டும் திட்டமிட்டுவது பற்றி திட்டமிட வேண்டும்.
  • லைட்டான விஷயங்களை படிப்பதை குறைத்து, தீவிரமான எழுத்துக்களை அதிகம் படிக்க வேண்டும்
  • எழுத்து திட்டங்கள் குறித்து தினமும் பகற்கனவு காண வேண்டும்
  • தினமும் ரெண்டு பக்கமாவது எழுத வேண்டும்
  • எழுதுவதற்காக ஏதாவது ஒரு பெரிய திட்டம் வைத்துக் கொள்ள வேண்டும் – அது வெற்றி பெறாவிட்டால் இன்னொரு திட்டம் உடனே வகுக்க வேண்டும்
  • முனைவர் பட்ட ஆய்வு வேலையில் பாதியாவது அடுத்த பிறந்த நாளுக்குள் முடிக்க வேண்டும்
  • கராத்தேவை முடிந்தால் மீண்டும் பயில துவங்க வேண்டும்
  • உடல் எடையை 70க்குள் வைத்துக் கொள்ள வேண்டும்
  • நாயை தினமும் வெளியே அழைத்து செல்ல வேண்டும்
  • நிறைய புதிய கவிதைகளை படித்து மொழியாக்க வேண்டும்
  • படிக்கும் புது சொற்களுக்கான ஒரு பட்டியலை உருவாக்க வேண்டும்
  • எழுத்தாளன் என்கிற பிரக்ஞை கூடாது – நான் உரையாடல்களை உருவாக்குபவன் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும்
Share This

4 comments :

  1. //நாயை தினமும் வெளியே அழைத்து செல்ல வேண்டும்//

    அபிலாஷ்,


    தயவு செய்து நீங்களே காலையிலும் + மாலையிலும் (அல்லது இரவிலும்) ஒரு முறை நடை பயிற்ச்சிக்கென உங்கள் வீட்டு செல்லக்குட்டியை அழைத்து செல்லுங்கள்.


    அதைவிட பெரிய விஷயம் எதுவுமே கிடையாது.

    ReplyDelete
  2. அனைத்தும் நல்லபடியாக நடக்கட்டும்...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. தங்களின் பிறந்த நாள் வாழ்த்துக்கள். தங்களின் குறிக்கோள் தமக்கு மட்டுமின்றி பலருக்கும் பயன்பட வல்லதாய் இருக்கின்றது. சிலவற்றை யாமும் சுவீகரித்துக் கொண்டு முயலப் போகின்றோம். நன்றிகள்.

    ---  

    ReplyDelete

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates