Thursday, 23 February 2012

நீட்சேவும் செந்திலும்



நீட்சேயின் “அவ்வாறு சொன்னான் ஜாருதுஷ்டிரன் கதையில் ஜாருதுஷ்டிரன் பல வருடங்கள் மலையில் துறவியாய் வாழ்ந்த பின் மனிதர்களை சந்திக்க ஒருநாள் இறங்கி வருவான். அப்போது ஒரு வயதான துறவி அவனை தடுப்பார். “வேண்டாம். மிருகங்கள் மத்தியில் மேலும் பாதுகாப்பாய் இருப்பாய். ஆனால் இந்த மனிதர்கள் மோசமானவர்கள். அவர்களிலும் மேலானவர்களை அவர்களுக்கு பிடிக்காது. உன்னை கொன்று போட்டு விடுவார்கள் என்பார். அதற்கு ஜாருதுஷ்டிரன் “ஏன் அப்படி சொல்கிறீர்கள். நான் பெற்ற ஞானத்தை மனிதர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாமா? என்பான். அதற்கு முதியவர் “மனிதர்களுக்கு உன்னதமானவர்களை தாங்க முடியாது. அவர்களுக்கு தேவை பொழுதுபோக்குக்கு ஏற்ற கோமாளிகள் தாம் என்று பக்குவமாய் சொல்லிப் பார்ப்பார். பிறகு ஜாருதுஷ்டிரன் கேட்காமல் மனிதர்களிடத்து சென்று உதாசீனப்படுத்தப்பட்டு வருந்துவான். இருநூறு வருடங்களுக்கு பின்னரும் இந்த உண்மையை நாம் உணர்ந்து கொண்டே வருகிறோம்.
ஒரு மனிதன் முன்னேறாமால் சீரழிந்தால் அவனை அன்புகாட்டி விசனிப்பார்கள். அதே மனிதர் உயர்ந்து வந்தால் கரித்துக் கொட்டுவார்கள். மனிதர்களுக்கு தம்மிடையே ஒருவன் வளர்வது தமது தாழ்வை சுட்டிக் உணர்த்தி உறுத்தல் தரும். அதனாலே அவர்கள் பிச்சைக்காரர்களையும் குஷ்டரோகிகளையும் அடிமைகளையும் சுற்றி வைத்துக் கொள்ள விரும்புகிறார்கள். படையப்பா படத்தில் பெண் பார்க்க போகும் செந்தில் உணர்வது போல் என்னதான் செய்தாலும் பக்கத்தில் இரும்பு இருப்பதால் வெண்கலம் தங்கமாகி விடப் போவதில்லை.
Share This

3 comments :

  1. 1. இந்த பிளாகை சர்வ சாதாரணமாய் நினைத்து அசால்ட்டாய் மேய்ந்தவர்கள் நீங்கள் விஜய் டிவியில் நடுவராக வந்த பின்னால் மட்டுமே இவர் பெரியவர் போல் இருக்கே என்று நினைத்திருப்பார்கள். ஜெமோ வம்பு நடந்த போது உங்கள் ப்ளாக் என் கண்ணில் பட்ட போது 'யாருடா இவன்' என்று அசால்ட்டான நினைப்பில்தான் அந்த வம்பு கட்டுரையை(பாதி வரை) படித்தேன். அதன் பிறகு கல்லிவர் படம் போட்ட கட்டுரையை பார்த்து படிப்போமே என்று எண்ணி படித்தேன். அதன் பிறகு அவ்வப்போது உங்கள் பிளாகை படிக்க ஆரம்பித்தேன். விஜய் டிவியில் நீங்கள் வருவதற்கு முன்பில் இருந்தே நான் உங்களோடு பேசிக் கொண்டு இருக்கின்றேன்.


    2. காட்சியை வைத்து ஒருவரை எடை போடக் காரணம் புத்தி என்பது இவர்களிட‌ம் இல்லை என்பது மட்டும் தான். புத்திக்கான விளக்கம் இது. எல்லோரும் தெரிந்து கொள்ளவும். மனித‌ மனதில் சுயம்(self) சார்ந்தவைகளை உதறிய‌ நிலையில் உள்ள‌ சிந்தனை போக்கின் திறன் தான் 'புத்தி'.


    3. அடுத்தவன் மேலேறும் போது தம்மை தாழ்வாய் இவர்கள் உணர்கிறார்கள் என்று சொல்வது சரி அல்ல. இவர்கள் நிஜத்தில் யாரோ அந்த உண்மையை உணர்கின்றார்கள். இவர்களைப் பற்றின உண்மை இவர்களின் ஈகோவைச் சுடுகின்றது. ஈகோ இல்லை என்றால் தம்மைப் பற்றி தம் ஈகோ உருவாக்கியிருந்த கற்பனையான இமேஜ் அல்ல தாம் என்று உணர்ந்திருப்பார்கள். தம்மைப் பற்றி தாம் இப்போது உணர்ந்திருக்கும் உண்மையை தம்மைப் பற்றின உண்மையான இமேஜாக ஏற்றுக் கொண்டும் இருப்பார்கள். ஆனால் மாட்டார்கள். உங்களை ஏசுவதின் மூலம் தம்மைத் தாமே ஏமாற்றிக் கொண்டு இருப்பார்கள்.

    ReplyDelete
  2. ஜராதுஷ்ட்ரா புக்கை சில பக்கங்கள் முன்பு படித்தேன். புரியவில்லை. விட்டு விட்டேன்.

    ReplyDelete
  3. என் தவறை சரி செய்து கொள்ள விரும்புகின்றேன்.

    Definition for புத்தி:


    மனிதனின் மனதில் 'இது என்ன?', 'என்ன நடந்திருக்கும்?', 'ஏன்?', 'எப்படி?', 'யார்?', 'நான் என்னைப் பற்றி என்ன நினைத்துக் கொண்டு இருக்கின்றேனோ அதுதான் நானா?', 'என்ன செய்து கொண்டு இருக்கின்றேன்?', 'பின்விழைவு என்ன?', 'இப்படி ஒன்று நடந்தால் அப்போது என்ன செய்வேன்?' என்றெல்லாம் காரண(cause) காரியங்களை(action or effect due to cause) ஆராயும்(analysing) திறன் தான் 'புத்தி'(power of reasoning in human mind).

    ReplyDelete

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates