தமிழில் முதியவர்கள் மட்டும் எழுதும் பத்திரிகைகள் இருக்கின்றன. அதில் ஒருவர் தோன்றி “பாருங்க பாரதியார் ஜாதிவெறியர்” என்று கண்டுபிடிப்பார்.
இன்னொருவர் புதுமைப்பித்தன் என்றொரு இளைஞர் நன்றாக எழுதி வருகிறார் என்று சொல்வார். இன்னொருவர் “ஆ.மாதவையாவின் நாவலில் சமகால வாழ்வு” என்றொரு கட்டுரை எழுதுவார். வரலாறு தோன்றியதற்கு முந்தின காலகட்டத்தில் ஆரம்பிக்கும் சில வாழ்க்கைக்கதை தொடர்களும் இருக்கும். அஜீரணம் ஏற்படக்கூடாது என்பதற்காக பிரதி எப்படி பிரதியை முழுங்குகிறது என்றொருவர் நூல் சுற்றுவார். அந்த சிடுக்கை அவிழ்த்து முடிக்கும் போது ஏப்பம் வந்து விடும். அப்புறம் காணாமல் போன பாய் முடையும் கலைஞர்கள், பவர்ஸ்டாரின் படக்காட்சிகளில் ஒடுக்கப்பட்ட மக்களின் குரல் போன்ற போராளி எழுத்துக்களும் இருக்கும். இத்தகைய பத்திரிகைகள் நம் சமூகத்தில் முதியவர்கள் எப்படி கூட்டுக்குடும்பங்களின் அழிவின் காரணமாக கைவிடப்பட்டு தனிமைப்படுத்தப்படுகிறார்கள் என்பதற்கான தகுந்த உதாரணமாக விளங்குகின்றன. என்னவொரு கொடுமை பாருங்கள்!
Subscribe to:
Post Comments
(
Atom
)
என்ன செய்வது...?
ReplyDeleteமன்னிக்கவும், எங்களை மாதிரிப் பாமரர்களுக்குப் புரியற மாதிரி எந்தப் பத்திரிகைன்னு நேரடியா சொல்றதில என்ன தயக்கம்? நெட்டில் யார் வேண்டுமானாலும் யாரையும் கழுவிக் கழுவி ஊற்றப் பரிபூரண சுதந்திரம் இருக்கிறதே? (இது அங்கதமா, வம்பா, எந்த லேபலில் போடப் போகிறீர்கள் என்றும் சொல்லி விடவும்.
ReplyDeleteபூர்ணம் நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள் :)
ReplyDelete