- அல்குல்கள் கடவுள்கள் அல்ல. அவை படைக்கப்பட்டவை.
- கடவுளைப் போலல்லாது அவை நித்தியமானவை அல்ல.
- கண்ணியமாய், கம்பீரமாய், புத்திசாலித்தனமாய் உள்ள அவற்றை நாம் எப்படியும் கவனத்தில் கொள்ளத் தான் வேண்டும்.
- எல்லா ஆன்மீக தோற்றங்களையும் போல அல்குல்களும் ஒரு நாளில் எப்போது வேண்டுமெனிலும் மனிதக் கண்ணால் காணக் கூடியவை அல்ல.
- அல்குல்கள் கண்ணுக்கு புலப்படுபவை, புலப்படாதவை, புனிதமானவை, பங்கமானவை என இரண்டையும் பிரநுத்துவப்படுத்துகின்றன.
- அவை ஒரே நேரத்தில் எங்கும் தோன்றுவதில்லை, எங்கும் தோன்றுகின்றன. அந்தரங்கமானவையாகவும் பொதுவானவையாகவும், மனிதனாகவும் இறையாகவும் உள்ளன.
- ஆதாம் மற்று ஏவாளின் மாந்திரிகக் கதையில் ஆண்டவர் தெய்வீக அல்குலின் நுழைவாயிலில் வாளேந்திய தேவன் ஒருவனை நிறுத்தி திரும்பி வருகிற பத்தாம்பசலிகளை தடுக்கும்படி செய்தார்.
- தரிசனங்கள் அவற்றை “ஒரு மேகத்தால் மூடப்பட்டு தலைக்கு மேல் வானவில்லுடன் உள்ளதாய்” விவரிக்கின்றன.
- பல சமயங்களில் ஒரு அல்குல் ஒரு நிஜப்பெண்ணின் உருவை எடுப்பதுண்டு; அப்போது அதற்கு சிலவேளை மனித ஆன்மா உள்ளதாகவும் தவறாக நினைக்கப்பட்டுள்ளது.
- ஒருவர் அந்நியர்களை வரவேற்க மறக்கக் கூடாது, ஏனெனில் ஒரு அல்குலை அவர் அறியாமலே உபசரிக்க நேரிடலாம்.
- எப்போது நினைவில் கொள்ளுங்கள்: ஒருவர் ஒருக்காலும் அல்குல்களை வணங்குதல் கூடாது. அல்லது பிற பொன்னிற பசுக்கன்றுகளையும்.
- அல்லது ஒருவர் தனது ஆன்மாவை வழிநடத்தும் வண்ணம் ஒரு அல்குலை பூமிக்கு அனுப்பும் படி வேண்டுதலோ கூடாது.
- ஒரு அல்குல் தன்னிச்சைப்படி வரவேண்டும். ஏனெனில் ஒரு அல்குலின் மார்க்கம் அதுவே, ஆதி அந்தத்தினுடையதும் அதுவே.
Tuesday, 19 November 2013
ஒரு மலைப்பிரசங்கத்துக்கான குறிப்புகள் -- நின் ஆண்டிரூவ்ஸ்
Share This
Labels:
கவிதை
,
மொழியாக்கம்
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment