வெளியேற விரும்பும் நீலப்பறவை ஒன்று
என் இதயத்துள் உள்ளது
ஆனால் நான் ரொம்பவே
கண்டிப்பாய் இருக்கிறேன் அதனிடம்,
சொல்வேன், அங்கேயே இரு, யாரையும்
உன்னைப் பார்க்க நான்
விடப் போவதில்லை
என் இதயத்துள் உள்ளது
ஆனால் நான் ரொம்பவே
கண்டிப்பாய் இருக்கிறேன் அதனிடம்,
சொல்வேன், அங்கேயே இரு, யாரையும்
உன்னைப் பார்க்க நான்
விடப் போவதில்லை
வெளியேற விரும்பும் நீலப்பறவை ஒன்று
என் இதயத்துள் உள்ளது
ஆனால் நான் அதன் மேல் விஸ்கி ஊற்றுகிறேன்,
சிகரெட் புகை இழுக்கிறேன்
விபச்சாரிகளும், பார் பணியாளர்களும்
மளிகைக்கடை குமாஸ்தாக்களும்
அது அங்கிருப்பதை
ஒருபோதும்
அறிவதில்லை.
என் இதயத்துள் உள்ளது
ஆனால் நான் அதன் மேல் விஸ்கி ஊற்றுகிறேன்,
சிகரெட் புகை இழுக்கிறேன்
விபச்சாரிகளும், பார் பணியாளர்களும்
மளிகைக்கடை குமாஸ்தாக்களும்
அது அங்கிருப்பதை
ஒருபோதும்
அறிவதில்லை.
வெளியேற விரும்பும் நீலப்பறவை ஒன்று
என் இதயத்துள் உள்ளது
ஆனால் நான் ரொம்பவே கண்டிப்பாய்
இருக்கிறேன் அதனிடம்,
சொல்வேன்,
அங்கேயே இரு, உனக்கு என்னை
நாசமாக்க வேண்டுமா?
என் பணிகளைப் பாழ்படுத்த விருப்பமா?
ஐரோப்பாவில் என்
புத்தக விற்பனையைக் குட்டிச்சுவராக்கப் போகிறாயா?
வெளியேற விரும்பும் நீலப்பறவை ஒன்று
என் இதயத்துள் உள்ளது
ஆனால் நான் அதைவிட சூழ்ச்சியாளன்,
எல்லாரும் தூங்கிவிட்ட இரவில்
சிலவேளைகளில் மட்டுமே வெளியே விடுவேன்.
சொல்வேன், நான் எங்கேயும் போய் விடவில்லை,
அதனால் கவலையுறாதே.
என் இதயத்துள் உள்ளது
ஆனால் நான் ரொம்பவே கண்டிப்பாய்
இருக்கிறேன் அதனிடம்,
சொல்வேன்,
அங்கேயே இரு, உனக்கு என்னை
நாசமாக்க வேண்டுமா?
என் பணிகளைப் பாழ்படுத்த விருப்பமா?
ஐரோப்பாவில் என்
புத்தக விற்பனையைக் குட்டிச்சுவராக்கப் போகிறாயா?
வெளியேற விரும்பும் நீலப்பறவை ஒன்று
என் இதயத்துள் உள்ளது
ஆனால் நான் அதைவிட சூழ்ச்சியாளன்,
எல்லாரும் தூங்கிவிட்ட இரவில்
சிலவேளைகளில் மட்டுமே வெளியே விடுவேன்.
சொல்வேன், நான் எங்கேயும் போய் விடவில்லை,
அதனால் கவலையுறாதே.
பிறகு நான் அதைத் திரும்ப வைப்பேன்,
ஆனால் அது கொஞ்சம் அங்கு
பாடத் தான் செய்கிறது,
நான்
அதை சாகவெல்லாம் விடவில்லை;
நாங்கள் அப்படியே
எங்கள் ரகசிய ஒப்பந்தத்துடன்
இணைந்து தூங்குகிறோம்;
ஆனால் அது கொஞ்சம் அங்கு
பாடத் தான் செய்கிறது,
நான்
அதை சாகவெல்லாம் விடவில்லை;
நாங்கள் அப்படியே
எங்கள் ரகசிய ஒப்பந்தத்துடன்
இணைந்து தூங்குகிறோம்;
ஒரு மனிதனை அழ வைக்கப் போதுமளவு
அது இனிது தான்
ஆனால் நான்
அழ மாட்டேன்,
நீங்கள்?
அது இனிது தான்
ஆனால் நான்
அழ மாட்டேன்,
நீங்கள்?
No comments :
Post a Comment