Sunday, 16 February 2014

என்.டி ராஜ்குமாரும் தேவதேவனும்






“செத்துப் போனவர்களோடு” நானிருந்து என ஆரம்பிக்கும் கவிதை ஒரு தலித் அரசியல் பேசும் படைப்பு என்றாலும் இன்னொரு புறம் தேவதேவனை நினைவுபடுத்துகிறது. குறிப்பாக இறுதியில் சட்டென தோன்றி விரியும் மயிலின் குறியீடு.
”செத்துப் போனவர்களோடு நானிருந்து
பித்து நிலையில் பேசிக் கொண்டிருக்க
எனது அகப்பேயை பிடித்தடைக்க வந்த
வேலவனோ
கும்பத்துக்குள் அடைத்து வைத்திருந்த
முருகனை திறந்து விட்டான்
மாந்திரிக இலைவிரிப்பில் அவன்
செந்திணையை உருட்டி வைக்க
வேட்டை நாய்களென
கூட்டமாய் வந்த எனது பிசாசை
பிடித்தடைத்த சாகசக்கதைகளை
சுவாரச்சியமாய் பேசிக் கொண்டே
முருகன்
மயிலை
விட்டுச் சென்று விட்டான்
அவள்
எனக்கு:
தோகை விரித்து ஆடிக் கொண்டிருக்கிறாள்”
முருகனை இங்கு வைதிகத்துக்கு மாற்றான ஒரு நாட்டார் தெய்வமாக காட்டுகிறார் என்பது புரிந்திருக்கும். தெய்வங்களை அபகரிப்பதற்கான இந்த சமூக போராட்டங்களுக்கு இடையே “மயில்” எனும் தரிசனம் கவிஞருக்குள் ஒரு பெரும் விரிவாக வளர்ந்து கொண்டே போகிறது. 
கலாச்சார கள்வர்களால் தொன்மங்களை அபகரிக்க முடியும். ஆனால் நினைவுகளை, கற்பனையை, இயற்கையை, அதன் பகுதியாய் தன்னை மாற்றிக் கொள்ளும் ஒரு மனிதனுக்குள் ஒரு ஆதிதெய்வம் புகுந்து ஏற்படுத்தும் அக எழுச்சியை அவனிடம் இருந்து பிரிக்க முடியாதே! ஒரு அரசியல் கவிதையை ஒரு ஞானியின் சொற்கள் வடிக்கும் போது தான் இப்படியான கவிதை தோன்ற முடியும்.

என்.டியின் “கருடிக்கொடி” பற்றி எழுதிக் கொண்டிருக்கும் விமர்சனக் கட்டுரையில் இருந்து ..
Share This

No comments :

Post a Comment

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates