Saturday, 22 February 2014

சில நம்பிக்கை நட்சத்திரங்கள்

இடது பக்கம் கீழே சாம்சன், வலது பக்கம் மேலே குல்தீப் யாதவ், கீழே கானி



இன்று 19 வயதுக்கு கீழானவர்களுக்கான உலக்க் கோப்பை காலிறுதியில் இந்தியா இங்கிலாந்திடம் தோற்று விட்டது. ஆனால் இது போன்ற தொடர்களில் வெற்றி தோல்வி ஒரு சாதனையொ இழப்போ அல்ல. வீர்ர்கள் அடையாளம் காணப் படுகிறார்கள். ரஞ்சி கோப்பையை விட நெருக்கடி மிகுந்த சூழலில், நல்ல தரமான அணிகளுக்கு எதிரே அவர்கள் எப்படி ஆடுகிறார்கள் என பார்க்க ஒரு சந்தர்ப்பம். அந்த அடிப்படையில் இந்த இந்திய அணியின் கணிசமான வீர்ர்கள் கவர்ந்தார்கள்.

சஞ்சு சேம்சனை ஐ.பி.எல்லில் பார்த்திருப்போம். அவர் அதே திறமையுடன், ஆக்ரோஷத்துடன் இத்தொடரில் ஆடினார். அணித்தலைவர் விஜய் ஸோல் மகாராஷ்டிராவுக்காக ரஞ்சியில் ஆடுகிறார். நிறைய ஓட்டங்களை குவிக்கிறார். அவரை கவனித்த்தில் வலுவான தடுப்பாட்டமும், நிறைய பொறுமையும் கொண்டவராக தெரிகிறார். ஒற்றை ஓட்டங்கள் எடுக்கிற விதம் கவர்கிறது. ஹூதா எனும் ஆல்ரவுண்டரும் நல்ல வீர்ர் தான். ஜடேஜா போன்று எனலாம். அவரது அணி உணர்வு அபாரமானது. இன்றைய ஆட்ட்த்தில் அவர் தன் ஜோடி வீர்ரான ஸோலுக்காக இரட்டை ஓட்டங்கள் ஓடிய விதம் வியக்க வைத்த்து. சர்பாஸ்கான் எனும் மும்பை மட்டையாளர் தான் நட்சத்திரம். அவருக்கு சிறப்பான எதிர்காலம் உண்டு என பார்க்கிற யாரும் சொல்லி விடலாம். நிதானமாக அதே வேளை ஆக்ரோஷமாக அவர் ஆடுவது பார்க்க தோனி நினைவு வருகிறார். தோனியைப் போல் வலுவாக தன் மணிக்கட்டை பயன்படுத்தி புல்லட் போல் விரையும் ஷாட்கள் அடிக்கிறார்.
மட்டையாட்ட்த்தை விட இன்னும் குறிப்பிட வேண்டியது பந்து வீச்சு தான். மோனு குமார் மற்றும் மிலிந்த் எனும் இரு வேகவீச்சாளர்களும் 135 கி.மீ மேல் சராசரியாக வீசுகிறார்கள். இது இந்தியாவில் ஒரு விதிவிலக்கு. ரஞ்சி தொடரில் 125 கி.மி தான் சராசரி வேகம். இவர்களுக்கு உடனடியாக உள்ளூர் அணிகளில் வாய்ப்பளித்து வேகமாய் வீசுவதை ஊக்குவிக்க வேண்டும். பொதுவாக உள்ளூர் பயிற்சியாளர்கள் குறைவான வேகத்தில் கட்டுப்பாடாய் வீசும் வீச்சாளர்களையே விரும்புகிறார்கள். அவர்களிடம் இவர்கள் மாட்டாமல் இருக்க வேண்டும். மோனு குமார் குள்ளமானவர். ஆனால் 140 கி.மீ தொடும் வேகத்தில் கூர்மையாக வீசுகிறார். நாம் அவரை பாதுகாத்தால் இன்னும் ஒரு வருட்த்தில் மற்றொரு உமேஷ் யாதவ் கிடைப்பார்.
கானி எனும் ஆப் சுழலர் பந்தை நன்றாக திருப்புகிறார்; வேகத்தை தொடர்ந்து மாற்றுகிறார். ரமேஷ் பொவார் வகையிலான ஒரு சம்பிரதாய சுழலர். குல்தீப் யாதவ் எனும் சைனாமேன் வீச்சாளரைப் பற்றி ஏற்கனவே இத்தளத்தில் எழுதி இருக்கிறேன். சைனாமேன் என்றால் இட்து கையால் கால் சுழல் பந்து வீசுபவரக்ள். உலகில் சைனாமேன்கள் மிக மிக குறைவு. இதனாலே சைனாமேனை ஆடுவது சிரமம். இந்த ஐ.பி.எல்லில் கொல்கத்தா அணியில் குல்தீப் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த ஆட்ட்த்தில் யாதவ் கிட்ட்த்தட்ட இந்தியாவை வெற்றியின் விளிம்பு வரை கொண்டு வந்தார். அவரது கூக்ளியை ஊகிப்பது அவ்வளவு சிரம்மாக இருக்கிறது. இங்கிலாந்து வீர்ர்கள் தத்தளித்தார்கள். ஆனால் அணித்தலைவர் ஸோல் தோனியைப் போல் எதிர்மறையாய் களம் அமைத்த்தால் இந்தியாவால் வெல்ல முடியாமல் போனது. இதில் ஒரு பாடம் உள்ளது. எதிர்காலத்தில் எந்த நிலையிலும் ஸோலை அணித்தலைவராக நியமிக்க கூடாது. அவர் நல்ல மட்டையாளர் தான். ஆனால் அணித்தலைவராக அவர் ஆட்டம் துவங்கும் முன்னரே தோல்வி பற்றி பயப்பட ஆரம்பிக்கிறார். குளிக்க தயங்குகிற நாய்க்குட்டி போலத் தான் அணியை வழிநடத்துகிறார்.

Share This

1 comment :

  1. அருமை...அருமை ...
    19 வயதுக்கு கீழானவர்களுக்கான உலக்க் கோப்பையில் என்னை கவர்ந்த இந்திய ஆட்டக்காரர்கள் சைனாமேன் & ரி(ர)ஸ்ட்டி மேன் :)

    ReplyDelete

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates