Sunday, 14 November 2010

கிரிக்கெட் லைவ்: இணையமா டீ.வியா?



டி.வியில் ஒருநாள் முழுக்க கிரிக்கெட் மாட்ச் பார்க்கையில் நம் மீது திணிக்கப்படுகின்ற விளம்பரங்கள் எத்தனை? ஒரு ஓவருக்கு 2-இல் இருந்து 3 விளம்பரங்கள் என்ற கணக்கில் 90 ஓவருக்கு கிட்டத்தட்ட 270.
இதோடு லைவாக ஆட்டம் நடக்கும் போது பாதி திரைக்கு வேறு விளம்பரம் காட்டுகிறார்கள். விளம்பரங்களின் போது வர்ணனை கூட பாதியில் தடைபடுகிறது. கிரிக்கெட் பார்ப்பதன் பெரிய ஆயாசமே விளம்பர மழைதான். அதுவும் ஒருசில விளம்பரங்களை திரும்பத் திரும்ப பார்க்கையில் பார்வையாளர்கள் காட்சிபூர்வ வன்புணர்ச்சிக்கு உள்ளாகிறார்கள். அடுத்து இப்படி மாட்ச் பார்ப்பதற்கே செட் ஆப் பாக்ஸ் வேண்டும். அல்லது ஏர்டெல்,பிக் டிவி, சன் என்று டிடிஎச் கனெக்சன் பெற வேண்டும். இந்த தொடர்பும் வானம் மந்தாரமானாலே கிழவிக்கு கண்சொருகினாற் போல ஆகி விடும். அதாவது ஒருவாரம் மழை என்றால் நீங்கள் கட்டின காசு வீண்; காட்சிகள் வராது. இப்படி அவஸ்தைப் படுவதற்கு இணையத்தில் கிரிக்கெட் பார்ப்பதே மேல் என்று நினைக்கிறேன். தற்போது நடந்து வரும் நியுசிலாந்து டெஸ்டு தொடர் bcci.tv இணைய தளத்தில் streaming videoவாக வருகிறது. நேரடி ஒளிபரப்பு போன்றே தொடர்ச்சியாகவும் வருகிறது. முக்கியமாய் விளம்பரத் தொல்லை இல்லை. அவ்வப் போது வேலை இருந்தால் சிறிதாக்கி விட்டு திரும்ப வந்து ரிவைண்டு செய்து பார்க்காது விட்ட சமீப ஓவர்களையும் பார்க்கலாம். இணையத்தில் பார்ப்பது கிட்டத்தட்ட மைதானத்தில் நேரடியாக பார்ப்பது போன்றே உள்ளது. ஓவர்களுக்கு இடையில் களத்தடுப்பாளர்கள் இடம் மாறுவது, மட்டையாளர்கள் தமக்குள் பேசிக் கொள்வது, பொதுவான சோம்பல் அலுப்பு எல்லாவற்றையும் கவனிக்கலாம். ஒரே குறை காட்சித் தரம் மட்டும் தான். அதையும் மேம்படுத்தினால் டி.டி.எச் தொடர்பையே துண்டித்து விடலாம்.

Share This

1 comment :

  1. இருந்தாலும் நீங்க இப்படியா உண்மைய சொல்றது.

    ReplyDelete

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates