2001-ஆம் ஆண்டு புற்று நோயால் காலமான ஆங்கிலக்கவிஞர் இயன் ஹாமில்டனுக்கு பத்திரிகை ஆசிரியர், விமர்சகர், கவிஞர், பதிப்பாளர், வாழ்க்கை வரலாற்றாளர் என்று பல்வேறு பரிமாணங்கள் உண்டு. Times Literary Supplement-இன் கவிதை மற்றும் புனைவிலக்கிய ஆசிரியராக குறிப்பிடத்தக்க பணி ஆற்றினார். இவர் நடத்திய New Review எனும் இதழ் ஆங்கிலக் கவிதை உலகில் பெரும் அலைகளை தோற்றுவித்தது. ஹாமில்டனின் 4 முக்கிய கவிதைகளை இங்கு தமிழாக்கம் செய்துள்ளேன்.
வீடு
பருவ நிலை மாறுவதாயில்லை.
எங்கள் தலைகளுக்கு மேல்
ஒன்றின் மேல் மற்றொன்றாய் வீடுகள் சாய்ந்து,
கீழே சரிவாய் கொட்டும் கரும் ஆலங்கட்டி மழையைத் தாங்கும்.
பிரகாசமாய் ஒரு ஜன்னல்.
"அங்கேதான் நான் வாழ்கிறேன்"
அப்பாவின் உறக்கமற்ற கண்
எங்களை நோக்கி எரிந்து கொண்டிருக்கிறது.
உன் முடியில் சிக்கிய பனி என் நாவில் உருகுகிறது.
பிரிவு
உன் அப்பா இப்போது
வடக்கே எங்கோ
வாகனமோட்டி செல்கிறார்.
அவர் கிளம்புவதற்கு முன்
உன் முன்னூறு புத்தகங்களை சேர்ந்து பங்கிட்டீர்.
நீ படித்து கழித்தவற்றை
அவர் எடுத்துக் கொண்டார்
- படிக்க இயலாதவை
என்று நீ ரகசியமாய் முடிவு செய்தவற்றை.
புதிதாய் சேர்க்கப்பட்டவர்கள்
புல்வெளியைத் தாண்டி வெறித்தவாறு சொல்கிறாய்
'எதுவும் அசையவில்லை. எங்கு பார்த்தாலும் காயும் வெயில், காற்றேயில்லை'
ஓடையில் வரிசையாய் பறவைகள், எங்கள் ஜன்னலிலிருந்து தெரியும்
ஐந்து தோட்டங்கள் கடந்து
நிழலுக்காய் சாய்ப்பு நோக்கி
ஒன்றின் பின் ஒன்றாய் வானம் பார்த்தவாறு
போகும் பூனைகள்.
'அவைகளுக்குத் தெரியும்', என்று கத்துகிறாய்.
ஜன்னல் படிக்கட்டையில் குவியும் இறந்த ஈக்கள்.
மவுனம் இருள நடுங்குகிறாய்,
உன்னுள் அது துல்லிய இரவாகும் வரை,
பிறகு நீ கதறுகிறாய்.
பின்வாங்குதல்
உன் காயமான கண்ணின் ஓரத்தை ஆக்கிரமிக்கும்
ரத்த சிவப்பின் ஒரு நுண்ணிய துடிப்பு.
நம் அவலத்துடன் துல்லிய ஒத்திசைவு கொண்டு
அது அடித்திட கேட்கிறாய்.
எந்த ஆறுதலும் இல்லை
இனிமேல் உனக்கு என்னால்
No comments :
Post a Comment