Sunday, 12 July 2009
நவீன ஹைக்கூ கவிதைகள்
ஜெம்ஸ் வில்லியம் ஹேக்கட்
மடாலய நாய்
அன்னியரை வரவேற்கும்
மௌனமாய் வாலாட்டி
The monastery dog
bids the stranger welcome
with wagging silence.
எல்லையற்ற பரப்பு சீக்கிரமே சலிக்க
காட்டுப் பூக்கள் மற்றும் அவற்றின் அதிசயங்களிடம்
மண்டியிடுகிறேன்
Soon bored with vastness
I kneel to the wild flowers
and all their wonders.
அதிசயங்கள் மண்டி மறைத்த
இந்த தடத்தின் முடிவில்
வாழ்கிறான் ஒரு பழங்கால நண்பன்
At the end of this trail
now overgrown with wonders,
lives an ancient friend.
பேட்ரிசியா டொனகன்
மழைத்துளிகள் மறைய
கேட்கிறேன்
துறவி மர மணியில் தட்டுதல்
As rain drops diminish
I hear the tapping
of the monk's wooden bell.
ஸ்டான்போர்டு பாரஸ்டர்
தியான மண்டபம் ...
எறும்பு கொண்டோடும்
என் மன ஒருமையை
meditation hall . . .
an ant carries away
my concentration
புத்தரின் விரல் சுவடு
மணலில் ...
ஜென் தோட்டம்
buddha's fingerprint
in the sand . . .
Zen garden
நாய்ப் பீ
அல்லது நான்
ஈக்கு பொருட்டு இல்லை
dog shit
or me
the fly doesn't care
துறவியின் கிண்ணம் --
ஒரு அரிசி மணி
ஒரு எறும்பு
monk's bowl -
one grain of rice
one ant
புத்தர்
அமர்ந்தார்
ரொம்பவே
buddha
sat
a lot
கோடை மதியம்
ஒரு எறும்பு முயல்கிறது
என்னைத் தின்ன
summer afternoon
the ant tries
to eat me
பாரஸ்டர்
கோடை முடிவு ...
சூரியகாந்தி மறையும்
விதை விதையாய்
end of summer . . .
the sunflower disappears
seed by seed
கோடை பிற்பகல் ...
மழையின் முதற் துளிகள்
வெறுங்காலில்
summer afternoon . . .
the first drops of rain
on my bare feet
கையெட்டும் வேளை
மின்மினி
அணையும்
just within my reach
the lightning bug
turns off
மேலும் நீளும் நாட்கள்
பெயரற்ற பூச்சி
என் சைக்கிளில்
longer days
a nameless bug
on my bicycle
சுத்தி சுத்தி
படிக்கிறேன்
ஒருவழி தெருப் பெயர்கள்
around and around
learning the names
of one way streets
சிற்றுண்டி வேளை
தலைப்புச் செய்தியில்
பூனை வால்
time for breakfast
my cat's tail
in the headlines
மற்றொரு வசந்தம்
பெயரற்ற முளை
இன்னும் பெயரற்று
another spring
the nameless shoot
still nameless
தேள் வெளிப்படும்
மிளகாய் குவியலிலிருந்து
பாலை அஸ்தமனம்
a scorpion emerges
from a pile of chilies
desert sunset
கோயில் முற்றம்
கல் புத்தர்களின்
ஓசை
temple yard
the sound of
stone buddhas
கடற் சீற்றம்
மணல் புத்தர்
மில்லியன் அலைகளாய் சிதற
high tide
the sand buddha
scattered into a million waves
டேவ் ரசோ
கிளையில் மாட்டி,
புது இலைகளுடன் ஊசலாடும்:
துண்டான செத்த உறுப்பு
Caught on a branch,
sways with the new leaves:
dead snapped limb
வெயிலில் ஆவியாகும் மழை
நீர்த்தேக்கத் தொட்டிச் சுவர்களில் ...
உன் சிரிப்பு மிதந்தெழும்
sun steams the rain
from the reservoir walls . . .
your laugh drifting by
கோடை முடிவு --
சிள்வண்டு இரைச்சல்
கரும்பூனை வாயில் மாட்டி
summer's end-
cicada buzz caught
in the black cat's mouth
ரெபக்கா பால் ரஸ்டு
ஒரு மேப்பிள் இலைச் சருகு
உள்முற்றத்தின் குறுக்காய் சரசரக்கும்
மழை வாசம்
a dry maple leaf
rattles across the patio
smell of rain
இலையுதிர் பருவத்து முதல்நாள்
அமர்த்தின மெழுகுவர்த்தி இறுதிப் புகை
திருகிச் சுருளும் பேதலித்து
first day of fall
the snuffed candle's last wisp
spirals crazily
உறைந்த குளம்
இறுதி பனிச்சறுக்காளன் சுழலுகிறான்
நிலவைச் சுற்றி
frozen pond
a lone skater spins
around the moon
நினா விக்கர்
வசந்தத்தில் காலடி வைக்கும் தேவாலயம் ...
குழந்தை தன் பணப்பை நிரப்பும்
சிள்வண்டு ஓடுகளால்
church steps in spring . . .
the child fills her purse
with cicada shells
ஹீதர்
மாலை நிச்சலனம்
முள்ளம்பன்றிக் குட்டியை உள்ளங்கைகளுள்
பொத்துகிறான்
evening stillness
he cups a baby hedgehog
in his hands
கல் நீரூற்று
துரும்புக் கறைகள்
காலி கிண்ணம்
stone fountain
rust stains
the empty bowl
இழந்துவிட்ட குழந்தை
ஒரு காய்ந்த டூத்பிரஷ்
அலமாரியில்
lost child
a dry toothbrush
in the rack
வெர்ஜில் ஹட்டன்
புலம் பெயரும் தூக்கணாங்குருவிகள்;
மழை இலைகளின்
மிருதுவான வீழல்.
Migrating swallows;
the gentle fall
of rain and leaves
இலையுதிர் பருவ புயல்
உயரும் ஓலம் --
இலைகளின் சலசலப்பு.
Autumn wind
louder and louder-
the rattle of leaves
விரிந்த புல்வெளி;
ஒரு தேவாலயம் மற்றும் அதன் கல்லறைத் தோட்டம்
தன்னந்தனியாய்.
Open prairie;
a church and its graveyard
all alone
ஜெம்ஸ் வில்லியம் ஹெக்கெட்
ஆற்றுக்குள் ஆழமாய்
பெரிய மீன் அசைவின்றி கிடக்கும்
உள்நீரோட்டத்தை பார்த்தபடி.
Deep within the stream
the huge fish lies motionless
facing the current.
கசப்பான காலை
கிளிகள் கூட்டமாய் அமர்ந்தபடி
கழுத்தின்றி.
A bitter morning:
sparrows sitting together
without any necks.
இந்த அலைக் குட்டையில்,
சிதைந்த நண்டிலிருந்து ஊர்ந்து வெளியேறும் --
பல பொடிசுகள்.
In this tide pool,
crawling out of a crushed crab -
several little ones.
என் எலி வேட்டையாளி பூனை,
ஈக்களிடம் இரக்கமின்றி இருந்தாலும், வெறுமனே அமர்ந்து
கண்ணடிக்கிறது ஈயிடம்.
My mouser cat, though
merciless with flies, just sits
and blinks at the bee.
கனமான இரவுப் பனி
ரொம்பவே மௌனப்படுத்தி விட்டது நகரத்தை,
சிறு விளக்கும் தோழனாய் தெரிகிறது
A heavy night fog
has so silenced the city,
each light seems a friend.
நாய்க்கு சீவி விடுகிறேன் ...
அவன் அவஸ்தைக்கு ஆஜர்
ஜன்னல் திண்டு முழுக்க பூனைகள்
Combing out my dog...
attending his ordeal,
a whole sill of cats!
இப்போது இந்த வீட்டுக்குள்
ஒரு புது வெறுமை ... உற்றுக் கேட்பேன்
ஈர விழிகளுடன்
Now within the house,
a new emptiness... I listen
with tearful eyes.
செம்பறவை விழுங்கி விடாது
அலகின் புழுவை அது
முழுசாய் நிச்சலனமாகும் வரை
Redbird won't swallow
the bee in his beak until
it is wholly still.
ஜாக் பெரி
தச்சன் சுத்தியலில் உயரும்
கற்தூள்
பட்டாம்பூச்சி
stone dust
rising from the mason's hammer
butterfly
மாத்யூ கொரியாலோ
சந்திரோதயம்
வாத்துத் தடங்கள்
பனியில்
lunar eclipse
footprints of geese
in the snow
குர்டிஸ் டன்லிப்
கிறித்துமஸ் மாலை --
என் குழந்தைகள் குறட்டை விடுவதாய்
பாசாங்கு செய்யும்
Christmas Eve-
my children pretend
to snore
நள்ளிரவு --
ஜன்னல் மின்விசிறி துண்டாக்கும்
ரயில் விசிலை
midnight-
the window fan dices
a train whistle
லெனார்டு டி மூர்
இன்றைய காலைப் பனிக்கு
வாசல் திறக்கிறேன்
அதன் மவுனம்
I open the door
to this morning's snow
its silence
ஜன்னல் கம்பிகளுக்கு உள்ளும் புறமுமாய்
ஹம்மிங்பறவையின் நிழல்
மிமோசா வாசம்
a hummingbird shadow
in and out of window bars
mimosa fragrance
மூதாட்டி
நட்சத்திரங்களுள் நோக்குகிறாள்
ஆகாயம் பனிமூட்டம்
the old woman
looking into the stars
sky all snowy
மலைத் தடத்துள்
தூர தூரமாய்
இலையுதிர் பருவ அந்தி ஆழமுறும்
farther and farther
into the mountain trail
autumn dusk deepens
டேவ் ரசோ
சந்திப்பு பூரா,
உன் சாந்த முகம் ஜன்னல் பக்கமாய்.
பளிச்சென, இருளும் மரங்கள்
All through the meeting,
your calm face by the window.
Bright, darkening trees
பிந்தி விட்டது, அலுவலகம்
ஏறத்தாழ காலி. உன் வெற்றுக் பாதங்கள்
குசுகுசுக்கும் என் கதவருகே
It's late, the office
almost empty. Your bare feet
whisper by my door
டேவ் ரசோ
கிளையில் மாட்டி,
புது இலைகளுடன் ஊசலாடும்:
துண்டான செத்த உறுப்பு
Caught on a branch,
sways with the new leaves:
dead snapped limb
வெயிலில் ஆவியாகும் மழை
நீர்த்தேக்கத் தொட்டிச் சுவர்களில் ...
உன் சிரிப்பு மிதந்தெழும்
sun steams the rain
from the reservoir walls . . .
your laugh drifting by
கோடை முடிவு --
சிள்வண்டு இரைச்சல்
கரும்பூனை வாயில் மாட்டி
summer's end-
cicada buzz caught
in the black cat's mouth
ரெபக்கா பால் ரஸ்டு
ஒரு மேப்பிள் இலைச் சருகு
உள்முற்றத்தின் குறுக்காய் சரசரக்கும்
மழை வாசம்
a dry maple leaf
rattles across the patio
smell of rain
இலையுதிர் பருவத்து முதல்நாள்
அமர்த்தின மெழுகுவர்த்தி இறுதிப் புகை
திருகிச் சுருளும் பேதலித்து
first day of fall
the snuffed candle's last wisp
spirals crazily
உறைந்த குளம்
இறுதி பனிச்சறுக்காளன் சுழலுகிறான்
நிலவைச் சுற்றி
frozen pond
a lone skater spins
around the moon
நினா விக்கர்
வசந்தத்தில் காலடி வைக்கும் தேவாலயம் ...
குழந்தை தன் பணப்பை நிரப்பும்
சிள்வண்டு ஓடுகளால்
church steps in spring . . .
the child fills her purse
with cicada shells
ஹீதர்
மாலை நிச்சலனம்
முள்ளம்பன்றிக் குட்டியை உள்ளங்கைகளுள்
பொத்துகிறான்
evening stillness
he cups a baby hedgehog
in his hands
கல் நீரூற்று
துரும்புக் கறைகள்
காலி கிண்ணம்
stone fountain
rust stains
the empty bowl
இழந்துவிட்ட குழந்தை
ஒரு காய்ந்த டூத்பிரஷ்
அலமாரியில்
lost child
a dry toothbrush
in the rack
மார்கரட் சூலா
காகித லாந்தருள் அகப்பட்ட
விட்டிலின் ஓசை
கோடை மழை
sound of a moth
trapped in a paper lantern
summer rain
தேனீர் அறைக்குள் நுழைகிறார்கள்
தேனீர் ஆசானும்
ஒரு மின்மினியும்
entering the tea room
the tea master
and a firefly
கோடை முடிவு
என் கத்திரிக்கோல் துரு
மரிகோல்டு பூக்களாய் மணக்கிறது
end of summer
the rust on my scissors
smells of marigolds
மீன் குளம்
நிழல்களால் நிரம்புவதை கூர்ந்து பார்க்கிறேன்
தூரத்து ரயில்
watching the fish pond
fill up with shadows
a distant train
குளிர் காற்று என் கேசத்தைக் கலைக்கும்
மேலும் பெரணி இலைகளையும்
வழுக்கை புத்தர்
cold wind stirs my hair
and the fern fronds
the bald Buddha
பெருக்கினாள், பெருக்கினாள், பெருக்கி ---
முதியவளின் துடைப்பம்
காற்றுக்கு ஈடல்ல
sweeping, sweeping, sweep-
the old woman's broom
no match for the wind
ரோட்டெல்லா
வேலையில் எனக்கு இறுதி நாள் ---
ஏற்கனவே யாரோ எடுத்துச் சென்று விட்டனர்
என் மேஜையிலிருந்து தாள்தைப்புமுட் கருவியை
My last day at work---
Already someone has taken
The stapler from my desk.
ஜெரால்டு விசனர்
பிளம் பூக்கள்
திடீர்ப் புயலில் வெடித்து
குட்டையில் முகங்கள்
plum blossoms
burst in a sudden storm
faces in a pool
ஜோன் பிராண்டி மற்றும் ஸ்டீவ் சான்பீல்டு
கடிதப் பரிமாற்றம்
இவ்வருடத்தை வரவேற்க
வேறு சிறந்த வழியில்லை
An exchange of letters
no better way
to welcome the year
ஜிம் ஹாரிசன் மற்றும் டெட் கூசர்
ஒவ்வொரு கடிகார டிக்டிக்கும் விழுகிறது
ஒரு மழைத்துளி போல,
சரியாய் தரையின் ஊடே
ஒன்றுமே நடக்காதது போல்
Each clock tick falls
like a raindrop,
right through the floor
as if it were nothing.
ஒவ்வொரு முறையும் நான் வெளியே செல்லும் போது உலகம்
புதுசாக. இது நடந்து வந்துள்ளது
வாழ்வெல்லாம்.
Each time I go outside the world
is different. This has happened
all my life.
பாரஸ்டர்
கடவுளற்ற மாதம்
சேமிக்கிறேன்
ஒரு பூசணி விதை
godless month -
i save
a pumpkin seed
கோவில் தோட்டம் --
எறும்பு ஏறி இறங்கும்
அண்டத்தில்
temple garden -
ants climb up and down
the cosmos
காளான் தோட்டம் ...
துறவி தூங்குகிறார்
வைநார் தொப்பி அருகே
mushroom field . . .
the monk sleeps beneath
his straw hat
ஜென் தியான அறை
விழிப்புறுகிறேன்
ஒரு கோப்பை காப்பியோடு
Zen retreat -
i awaken
with a cup of coffee
ஜனவரி சூரியன் --
பனி முதலில் உருகும்
புத்தரின் தொப்பை மேல்
January sun -
the snow melts first
on Buddha's belly
ஒரு கூடுதல் சுருள்
புத்தரின் தலையில்
நத்தை
one extra curl
on Buddha's head
snail
மழைக் காலம் --
துறவியின்
குடையளவு
rainy season -
the size
of the monk's umbrella
காக ஹைக்கூ ...
என் பேனா
கரு மை நிறைந்தது
crow haiku . . .
my pen
filled with black ink
காலை பெருமழை ...
ஆலய மணி ஓசை மட்டும்
நனையாது
morning downpour . . .
only the sound
of the temple bell stays dry
நிலா பார்க்கும் விருந்து
நிலா
தாமதமாய்
moon viewing party -
the moon
arrives late
கேசன்
திறந்த ஜன்னல்
குயிலின் பாடல் மறையும்
தூரத்தில்
Open window
a cuckoo's song disappears
in the distance
ஜோன் மார்டோன்
தொட்டாற்சிணுங்கிகள்
மேலும் மேலும்
தும்பிகள்
Touch-me-nots
more & more
dragonflies
எப்பா ஸ்டோரி
புதைசேற்று விளிம்பு --
எழும் வாத்துக்களின் கடுங்காற்று
எங்கள் கூந்தலில்
Edge of the marsh --
the wind from rising geese
in our hair
போல் மினா
திங்கள் காலை
போக்குவரத்து நெரிசல் --
மெல்ல நிதானமாய் மழை
Monday morning
traffic jam --
slow steady rain
கிரிஸ்டன் டெமிங் மேரிலாண்ட்
பூக்கள் ...
சிசுவின் வெற்றுக் கால்கள்
பெடல் மிதிக்கும் காற்றில்
blossoms . . .
the baby's bare feet
pedal the air
துரோ ஜெய்யோ
வசந்த மழை --
அவள் இடது மார்பின் பால்
எதிர்பாரா இனிப்பு
spring rain-
milk in her left breast
unexpectedly sweet
மார்க்கஸ் லார்சன்
வசந்த கால மாலை
குழந்தைகளின் சத்தியம்
சளி பிடிக்காதென்று
spring evening
the children's promise
not to get cold
எஸ். நான்சி யங்
இலையுதிர் பருவ புயல்
அவன் கம்பளிச் சட்டைப் பையில்
கழன்ற பொத்தான்
autumn wind
in his sweater pocket
the missing button
ஜோன் குலொண்ட்ஸ்
மங்கின வெளிச்சம்
இரவுச் செவிலி
மழையை வர்ணிக்கிறாள்
dim light
the night nurse
describes the rain
ரோபர்டு மெய்னோன்
சுற்றி எங்கும்
வெளிச்சம் விழுகிறது
மின்மினிகளின் வயலில்
all around
light falling in a field
of fireflies
எம். ஸ்டான்போர்டு போரஸ்டர்
கோடை மாலை
எனக்கு நானே வீசுகிறேன்
காகித நிலவால்
summer evening
fanning myself
with a paper moon
டோம் கிளவுசென்
பாதுகாப்பற்று
குளிர் மழையில்
அவர்களது பனிக்கோட்டை
undefended:
in the cold rain
their snow fort
கெரோல் வெய்ன்ரைட்
மோனத்தில்
நதி
சொட்டும் அவள் துடுப்பிலிருந்து
in the stillness
the river
drips from her paddle
எட்வர்டு ரெய்லி
துறந்த வீடு:
பறவைக் கூடு தபால் பெட்டியில்
கைவிடப்பட்டு
abandoned farmhouse:
bird nest in the mail box
also deserted
துறந்த வீடு:
நான் இருளுக்கு பயந்த
அமைதியான படுக்கையறை
abandoned farmhouse:
the quiet bedroom where I
feared the dark
டோம் டிக்கோ
புழக்கடையில் வீசப்பட்ட
பழைய குடங்கள் மற்றும் தட்டுகளுள் --
இசை மழை
Into old pots and pans
thrown out in the backyard-
the musical rain
பிரடரின் கேசர்
கோடை மதியம் --
துறவி நீல பென்சிலை எடுக்கிறார்
குருடனிடமிருந்து
summer afternoon-
the priest takes a blue pencil
from the blind man
டேவிட் லேகவுண்ட்
மெத்தை திணிப்பினூடே
கத்திரிக்கோல் ஒலி --
கடுங்குளிர் இலையுதிர் நிலவு
The sound of scissors
through quilt stuffing:
chill autumn moon
ஜேன் ரெயிச்ஹொல்டு
வெயிலுக்குள் நகர
மட்டக்குதிரை உடன் கொண்டு செல்லும்
எதோ மலை நிழல்
moving into the sun
the pony takes with him
some mountain shadow
சில்வியா போர்கஸ்-ரயன்
மழைக்கால காலை --
பழைய செருப்புக்களால்
சிற்றறை இருண்டு
winter morning-
the closet dark with
old shoes
ஆகஸ்டு வெப்பம் --
ஆடைகள் இல்லை
இனி உரிய
August heat-
no more clothes
we can take off
ராபர்டு மெய்னோன்
கண்ணாடிக்குள் ...
சவரம் செய்யும்
குரங்கு
inside the mirror ...
shaving
the monkey
லாரா போடெஷி
கடல் கொந்தளிக்கிறது
ஆரஞ்சு நிறத் தோற்றம்
மழைக்கால வானில்
the tide rises
a hint of orange
in winter sky
கெரி பெர்டன்
காலை பேரெழில்
ஆழமாய் நோக்க
மறையும் உலகம்
morning glory
when I look deeper
the world disappears
ஆலன் பர்ன்ஸ்
வறண்ட ஓடைப் படுகை
சேணமிட்ட குதிரை கடக்கும்
ஓட்டி இன்றி
dry creek bed
a saddled horse passes
without a rider
காணாமல் போன குழந்தை
ஒரு பனி தேவதையை கடக்கிறேன்
ஒரு முன்புல்வெளியில்
missing child
I pass a snow angel
on a front lawn
டெபோரா பி. கோலட்ஜி
பனிக்கு சற்று முன் ...
ஒரு வெள்ளைப் பருந்து
வட்டமிடும் இருளும் வானில்
about to snow . . .
a white hawk
circles a dark sky
ராபர்ட் மெய்னோன்
இரங்கல் வீட்டு மதிய உணவு
சன்னமான மண் சுவை
முள்ளங்கியில் இன்னும்
funeral lunch
a faint taste of dirt
still on the radish
Share This
Labels:
மொழியாக்கம்
,
ஹைக்கூ
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment