கடந்த ஒரு மாதமாக வலைப்பூவை புதுப்பிக்க இல்லை. டாட்டா இண்டிகாம் இணைய சேவையை துண்டித்து விட்டு பி.எஸ்.என்.எல் முயன்றேன். அவர்கள் இந்த ஒருமாதமாக என்னை வெறுப்பேற்றி இன்றுதான் இணைப்பு தந்தார்கள். அது போக சிலபல எளிய விபத்துக்களில் வேறு மாட்டிக் கொண்டேன்.
ஒரு விடிகாலையில் நான் எழுதுவது டி.வி பார்ப்பது என்று இரவை ஓட்டி விட்டு தூங்குவதற்காக சென்ற போது விழுந்து விட்டேன். வழுக்கியோ தடுக்கியோ மோதியோ அல்ல. நான் காலில் அணியும் காலிப்பர் எனும் கருவி நான் நடக்கும் போது தன்னிச்சையாக மடிந்தது. முட்டியில் ரத்தக்கசிவு, கால் சுண்டு விரலில் எலும்பு முறிவு. மருத்துவமனை நான் சென்றிருந்த போது களைகட்டியது. பக்கத்தில் சங்கீதக்கச்சேரி. உள்ளே இந்தியா--பாக் கிரிக்கெட் ஓடியது. எலும்பு மருத்துவர் செல்போனில் வைத்தியம் பார்த்தபடியே என் காலைத் திருகிப் பார்த்தார். அவர் டேன் பிரவுனின் தீவிர விசிறி. வேறு நிறைய குப்பை புத்தகங்கள் படித்து வருவதாகவும் சொன்னார். மூன்று வாரங்கள் கட்டாய படுக்கை-ஓய்வு. அடுத்த வாரத்துடன் முடிகிறது.
இரண்டாவது வார ஞாயிறு ஒன்றில் தூக்கக் கலக்கத்தில் ஆவி பறக்கும் காப்பியை குடிக்க தடுமாறிக் கொண்டிருந்தேன். எனக்குள் ஒரு அட்டவணை ஓடிக்கொண்டே இருக்கும். அதை சரி பார்க்க நான் கடிகாரம் எட்டி பார்க்க, கோப்பை கவிழ்ந்து கொதிக்கும் காப்பி என் வெற்று மாரில் கொட்டியது. ”பாவமன்னிப்பில்” சிவாஜி கணேசன் போல் கதறி உருண்டேன். மனைவி வந்து படாரென்று ஒன்று போட்ட பிறகு அடங்கினேன். ஒரு மீடியம் சைஸ் பப்பாளி அளவுக்கு தோல் வெந்து விட்டது. அதே வடிவில் தோல் கருப்பு இன்னும் மாறவில்லை. என்ன நீங்கள் உற்றுப் பார்க்க வேண்டும். சிவப்பாக பிறக்கவில்லை என்று எவ்வளவோ சந்தோஷப்பட்டேன்.
Wednesday, 14 October 2009
Subscribe to:
Post Comments
(
Atom
)
உள்ளத்தை உருக்கிவிடது அனால்
ReplyDeleteதமாசா இருக்கு
நலம் பெற வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி நண்பர்களே!
ReplyDeleteஎனக்கு பிடித்த எழுத்தாளரான நீங்கள் விரைவில் நலம் பெற என் பிரார்த்தனைகள்
ReplyDeleteமிக்க நன்றி ராஜசூரியன்.
ReplyDelete