பஷீரின் “என் உப்புப்பாவுக்கு ஒரு ஆனை இருந்தது” ஒரு அழுகாச்சி நாவலானாலும் வாழ்வு குறித்த உற்சாகமும் ஏற்பும் ஒரு வெளிச்சமாக ஒவ்வொரு சொல்வழியும் பெருகுகிறது. அந்த தித்திப்பான நாவலின் மனநிலையை அப்படியே பிரதிபலிப்பதாய் அவ்வளவு பிரகாசமாக இருந்தது அட்டைப்படம். யாருடா இதை வடிவமைத்தது என்று தேடிப் பார்த்தால் உயிர்மை, காலச்சுவடு புத்தகங்களில் பல பிரபலமான அட்டைகளை வடிவமைத்த, கூர்மையான அங்கதம் கொண்ட பிளாகுகளை எழுதும் சந்தோஷ்.
பொதுவாக இலக்கிய புத்தக அட்டைப்படங்கள் என்றால் அரை இருட்டில் சாம்பல் வண்ணத்திலோ வயிற்றை கலக்க வைக்கிற மாதிரி ஒரு நவீன ஓவியத்தையோ போட்டு விடுவார்கள். அதற்கும் பிரதிக்கும் சம்மந்தமிருக்கிறதா என்று நீங்கள் தினமும் அரைநொடி யோசித்து கடுப்பாகலாம். ஆனால் சந்தோஷ் வண்ணங்கள் பூத்து விரியும் படி அட்டையை பண்ணி இருந்தார். எதேச்சையாக பண்ணினாரா படித்து விட்டு பண்ணினாரா என்று தெரியாது; ஆனால் புத்தகத்தில் பஷீர் சித்தரித்த வாழ்வுநிலைக்கு மிகப் பொருத்தமாக அமைந்திருந்தது. சந்தோஷின் வடிவமைப்பில் ஒரு நூல் எழுத ஆசை தோன்றியது.
ஏதேர்ச்சையாக செய்திருக்க வாய்ப்பில்லை என்று நினைக்கிறேன்.அது குழந்தையின் கனவு.குஞ்ஞுபாத்துமாவின் கனவு.அந்த அட்டைப்படம் என்னை வெகுவாக கவர்ந்தது.சமீபத்தில் சில அடையாளம் பதிப்பத்தின் நூல்களை வாங்கினேன்.அவற்றின் அட்டை வடிவமைப்பு கூட நன்றாக இருந்தது.
ReplyDelete