Friday, 22 March 2013

கொடுத்து வைத்த வாழ்க்கை!


என் கூடப்படித்த நண்பன் ஒருவனின் அப்பாசில மாதங்களுக்கு முன் காலமானார். அவன்படுமக்கு. அவர் தான் பெருந்தொகைலஞ்சம் கொடுத்து பையனுக்கு அரசு வேலை வாங்கித்தந்தார். ஆனால் அப்பாவுக்கு மகன்மீது அப்படி ஒரு பெருமை. சதா புகழ்ந்து கொண்டே இருப்பார். இன்னொருபக்கம் பல புத்திசாலியான திறமைசாலியானமகன்களை மட்டம் தட்டும் தகப்பன்களைபார்த்திருக்கிறேன். இந்த முரண்பாட்டுக்கு ஏதோஒரு பொது நியதி இருக்கிறது.

பொதுவாக பெற்றோருக்கு மக்கு பிள்ளைகளை அதிகம்பிடிக்கிறது. அவர்களை கொண்டாடுகிறார்கள். பாதுகாக்கிறார்கள். திறமைசாலி பிள்ளைகளுக்கு இயல்பிலேயே கொஞ்சம் அலட்சியமும் சுதந்திரவிருப்பங்களும் வந்து விடுகின்றன. அவர்கள்மீது குறிப்பாக அப்பாக்களுக்கு ஒரு அச்சமும் வெறுப்பும்வந்து விடுகிறது. வரலாற்றிலேயே பல சாதனையாளர்களுக்கு அப்பாவோடுஅவஸ்தையான உறவு தான் இருந்திருக்கிறது. பலரும் தம்மை ஏன் அப்பாஏற்றுக் கொள்ளவில்லை என்ற கவலையை நெஞ்சில்சுமந்தபடி தான் வாழ்நாளெல்லாம் இயங்கிஇருக்கிறார்கள்.

யோசிக்க யோசிக்க மக்காய் இருப்பவர்களுக்குவாழ்க்கை அவ்வளவு சுலபமாய் அமைந்துவிடுவதை பார்க்கிறேன். கண்களில் குழப்பமில்லை, தலைக்கு மேல் பாரமில்லை. உலகில் என்ன நடந்தாலும் அவர்களைபாதிப்பதில்லை. இயல்பான பலவீங்கள் தம்மைபாதுகாக்கும் உணர்வு அபாரமாக வளர்த்துவிடுகிறது. அதனால் தம்மை பாதுகாப்பதைதவிர எந்த கவலையும் ஏற்படுவதில்லை. வீட்டில், வேலை பார்க்கும் இடங்களில், நண்பர்கள் இடையே இவனை தனியேநம்பி விட முடியாது எனஅஞ்சி எந்த பொறுப்பையும் ஒப்படைக்கமாட்டார்கள். யாராவது அவர்களை உள்ளங்கையில்வைத்து தாங்கியபடி இருப்பார்கள்.

நான் வேலை பார்க்கும் இடத்தில்ஒரு மூளைவளர்ச்சி குன்றியவர் இருக்கிறார். அவர் எந்த வேலையில்பண்ண மாட்டார். ஏதாவது ஒரு துறைக்குபோய் தெரிந்தவர்களிடம் காசு கேட்பார். அவரதுஅண்ணன் அந்நிறுவனத்தில் வேலை பார்த்து ஓய்வுற்றவர்என்பதால் எல்லோருக்கும் அவர் மீது சற்றுகருணை உண்டு. ஆனால் அவர்தெய்வத்திருமகன் விக்ரம் போல் தேவமகன் அல்ல. குடி, கஞ்சா பழக்கம் உண்டு. கல்யாணமாகி குழந்தைகளுக்கு கல்யாணமாகி பேரப்பையன்களும் பிறந்து விட்டார்கள். பார்க்க நாற்பது வயது எனத் தான் தோன்றும். ஆள் பலே ஜாலி ஆசாமி. பல பெண்களுடன் கள்ளத்தொடர்பு, விபச்சார சகவாசம் எல்லாம் உண்டு. இப்போது சொல்லுங்கள் உங்களில் எத்தனை பேருக்கு இப்படி கொடுத்து வைத்த வாழ்க்கை உண்டு?

Share This

1 comment :

  1. இன்னும் சில வருடங்களில் 'கொ(கெ)டுத்தது' எல்லாம் திரும்ப வரும்...!

    Wait and See...

    ReplyDelete

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates