முஷ்டியை முறுக்கிநெஞ்சு தசைகள் அனைத்தும்இறுகி முகம் கல்லாக மாறி
கோபத்தின் ஆவி பறக்க, ஒரே அடியில் ஆளைக் காலி செய்யும்புரூஸ் லீ
என்ற நடிகனின்திரைப்படங்களை திரும்பத்திரும்பப் பார்த்துக் கொண்டே
இருக்கிறோம். அவனைப் பற்றிய பன்முக பிம்பத்தைஇந்த நூலில் உருவாக்கி
இருக்கிறார் ஆர். அபிலாஷ். சின்ன வயதில் ஷாங்காயின் நெருக்கமான தெருக்களில்
சதா சண்டையிட்டுத்திரிந்த நோஞ்சான் இளைஞனான புரூஸ் லீ, குங்-பூ கற்று பெரும்
சண்டைக் கலைஞனாக உருப்பெறுவது இந்நூலின்பக்கங்களில் அபிலாஷுக்கேஉரிய
மொழியில் கட்டமைக்கப்படுகிறது. புரூஸ்லீக்குப் பெயர் வைத்தது அவர் பிறந்த
மருத்துவமனையின் மருத்துவர்என்பதில் ஆரம்பித்து சமீபத்தில்தமிழில் புரூஸ் லீக்கு
மிஷ்கின் செலுத்தும்மரியாதை வரைக்கும் இந்நூலில்கொண்டு வந்துள்ளார். நான்
அமெரிக்காவில் அதிகம் சம்பாதிக்கும் ஆசிய நடிகன் ஆவேன். பத்து ஆண்டில் ஒரு
கோடி டாலர் பணம் சம்பாதிப்பேன் என்று தான் படுத்த படுக்கையாகக்கிடந்தபோது
எழுதி வைத்து, அதன் படியே வென்றவர்புரூஸ் லீ. அவரிடம் ஆயிரக்கணக்கணக்கான
புத்தகங்கள் இருந்தன. வாஷிங்டன் பல்கலையில் அவர் தத்துவம் பயின்றவர்- ஆகிய
புரூஸ் லீ பற்றிய பெரிதும் அறியப்படாததகவல்களும் அவரது காதல், ஜென்
ஞானியைப் போன்ற ஒட்டாத நடவடிக்கைகள், அவர் குங் பூ ஆசானாக அமெரிக்காவில்
புகழ் பெற்ற கதைகள், அவர் பங்குகொண்டசண்டைகள், சவால்கள்- படிக்கப்படிக்க
புரூஸ்லீ பெரும் காவிய நாயகனாக நம்முன் எழுந்து நிற்கிறார். எல்லாவிதமான
முரண்களும் கொண்ட ஒரு சாதாரண மனிதனாக இருந்த அவர் அவற்றுடனே
அவற்றைக் கடந்து சென்றிருக்கிறார் என்பதே இந்நூல் விளக்கும் செய்தி.
நன்றி: அந்திமழை மார்ச் 2013
நன்றி: அந்திமழை மார்ச் 2013
புரூஸ் லீ பற்றிய அறியாத செய்தி...
ReplyDelete