ஒரு நண்பர் சொன்னார்: “மனுஷ்யபுத்திரனை ஒரு வாரம் பேஸ்புக் லாக் இன் பண்ணாமல் இருக்க சொல்லுங்க. அவதூறுகளில் நனையாமல் அப்ப தான் அவர் நிம்மதியாக இருப்பார்”. நான் நினைத்தேன்: “மனுஷ்யபுத்திரன் பேஸ்புக் வராமல் இருப்பதா? அது பேஸ்புக்கே ஷட்டரை இழுத்து மூடி விடுவது போல் அல்லவா? அதற்கு சூரியன் கிழக்கே உதிக்காமல் இருக்ணும், நிலா தோன்றாமல் இருக்கணும், ஜெயலலிதா கலைஞர் மாதிரி ஆகணும், கலைஞர் காமராஜர் மாதிரி ஆகணும்”.
மேலும் தமிழ் முகநூலில் அவ்வளவு சுவாரஸ்யமான விவாதங்களை உருவாக்கிய நம்மை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த அவர் ஏன் போகணும்? வசை தூற்றிக் கொண்டிருப்பவர்கள் அவரை விட்டு போனால் போதுமே?
ஆனால் முன்பு ஒரு காலம் இருந்தது. அப்போது மனுஷ்யபுத்திரன் முகநூலை எட்டி நின்று கவனித்துக் கொண்டிருந்தார். என்னிடம் கேட்பார்: “நீங்க பேஸ்புக்கில இருக்கீங்களா?”
“ஆமா இருக்கேன். பேருக்கு. அதில ஏதும் எழுத மாட்டேன்”
மனுஷ் சொல்வார்: “நானும் தான் பேஸ்புக்கில எல்லாத்திலயும் இருக்கிறேன் ஆனால் ஒண்ணும் எழுதறதில்ல. எல்லாத்திலயும் இருப்பேன். ஆனா இருக்க மாட்டேன்”.
அது வேறு ஒரு காலம்! அவர் அப்போது இன்னும் அதிக நிம்மதியாக இருந்தாரா? தெரியாது. ஆனால் சதா ஒரு பக்கம் ஜனங்களோடு இருப்பதை விரும்புகிறவர் என்பதால் பேஸ்புக் அவருக்கு நிறைய இணக்கமான பொழுதுகளை தந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஒரே வித்தியாசம் கடந்த சில மாதங்களில் வேறு தலைவர்கள் மீதான வெறுப்பை வெளியே கொட்ட இவரை ஒரு மென் இலக்காக பயன்படுத்துவது அதிகமாகி உள்ளது. எல்லாவற்றையும் எல்லோரையும் வரவேற்கும் மனிதர் என்பதால் கலைஞரை, இஸ்லாமியரை, சிறுபான்மையினரை, இன்ன பலரை நேரடியாக தாக்க முடியாதவர்கள் இவரை தங்களது அந்தரங்க வெறுப்புக் கிடங்காக பயன்படுத்துகிறார்கள். எல்லோருக்கும் அணுக்கமாக இருப்பதன் ஒரு சிக்கல் இது.
பேஸ்புக் நம் எல்லோருக்கும் போலவே மனுஷ்யபுத்திரனுக்கும் பலதரப்பட்ட புதிய மனிதர்களை சந்தித்து அறிகிற வாய்ப்பை தந்திருக்கும். ஒரே வித்தியாசம் நூற்றுக்கணக்கான முகமற்ற எதிரிகளை முகவரி மாற்றி அவர் வீட்டுப் பக்கம் அனுப்பிக் கொண்டிருக்கிறது. பொதுவாக எதிர்மறையான ஆட்கள் கசப்பானவர்களை பார்க்க பார்க்க உற்சாகமாவார்கள். மனுஷ்யபுத்திரனை போன்ற நேர்மறையானவர்கள் வெறுப்பை கக்குபவர்களை பார்த்து பார்த்து களைப்பாவார்கள். அவர் ரொம்ப களைத்துப் போயிருப்பார் என நினைக்கிறேன். முகமற்ற எதிரிகள் அவருக்கு கொஞ்ச ஓய்வு கொடுக்கலாமே!
அவரைத் தாக்குவதற்கென்றே ஒரு முகப்பக்கம் உருவானதே ஒரு சாதனைதானே
ReplyDeleteஅவரிடம் நெருக்கமான உரையாடலில்
இரு ந்தவர்கள் சிலரே என்னிடம் இவர் ஏன் இப்படி வம்பில் மாட்டிக்கொள்கிறார்
என்றார்கள் அவர்களால் அருதியிட்டு
சொல்வதெற்கென்று காரணங்கள் இல்லை
இப்படித்தான் சிலர் அன்பை காட்டுவார்கள்
என்று மனுஷ்யபுத்திரனே சொல்லக்கேட்டிருக்கிறேன்
பாவம்யா அவரு . இப்புடி உசுப்பி வுட்டே அவர ரணகளமாக்கிட்டீங்க.
ReplyDeleteஎல்லாம் சரி, ஆனால் அவர் ஆரோக்கியமான எதிர் கருத்துகளை கூட எதிர்கொள்ள தயாராக இல்லை போல தெரிகிறது, தன்னைச்சுற்றி ஒரு கூட்டத்தை வைத்துக்கொண்டு இவர் என்ன சொன்னாலும் சரி என்று கூறுபவர்களை மட்டும் வைத்துக்கொண்டு மற்றவர்களை block செய்து விடுகிறார்.
ReplyDeleteசில நாட்களுக்கு முன்பு, "இப்பேர்பட்ட மனிதர்களின் முகமூடியை கிழிக்கதான் போராடிக்கொண்டு இருக்கிறேன்" என ஒரு பதிவு போட்டிருந்தார். நானும் அப்படி என்ன போராடுகிறீர்கள், நான்கு தொலைக்காட்சியில் சென்று பேசினால் அதன் பெயர் போராட்டமா என்று கேட்டிருந்தேன், என்னை block செய்துவிட்டார்.
என்னுடைய கேள்விக்கு அவர் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை, அல்லது என்ன செய்கிறார் ,அல்லது தொலைக்காட்சியை பார்ப்பவர்களுக்கு அவர்களைப் பற்றி தெரிய வைக்கிறேன் என கூறி இருக்கலாம், அதைவிடுத்து block செய்வது என்ன வகை பதில் என தெரியவில்லை.
அது அவருடைய சுவர், எந்த கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும், யாரை block செய்ய வேண்டும் என்பதெல்லாம் அவருடைய விருப்பம், அதைப் பற்றி நான் கேள்வி கேட்க கூடாது என சொல்வீர்களேயானால் ,என் பதில் அவரை எதிர்த்து பதில் பதிவு செய்யும் நபர்களை ஓய்வெடுக்க சொல்லும் உரிமையும் உங்களுக்கில்லை என்பதுதான்,
மனுஷ்யபுத்திரன் என்கிற பெயரை எப்படியாவது பயன்படுத்தி(அவரைப் படுத்தியோ, படுத்தாமலோ) ஒரு பதிவை போட்டால் அது கவனிக்கப்படும் வீதம் சற்று அதிகம் என்ற நம்பிக்கை முகநூலில் உலவிக் கொண்டிருக்கிறது. நான் கூட அதற்கு விலக்கல்ல... மிக அத்தியாவசிய தேவையில்லாமல் அவர் இந்த மாதிரியான விமர்சனங்களுக்கு பதிலளிக்க அவசியமில்லை. ஆப்பிளைப் பார்த்து பேரிக்காய்களும் இலந்தைப் பழங்களும் அப்படித் தான் சொல்லிக் கொண்டிருக்கும். ஆப்பிள் ஆப்பிள் தான்.
ReplyDeleteஅவர், எதிர் கருத்தை ஏற்க தைரியம்மில்லாதவர்.எதி கேள்வி கேட்டாள் பிளாக் தான்.பொது வாழ்வில் இருப்பதாக காட்டிக்கொள்வதால் தான் கேள்விகளை கேட்கிறோம், அதற்க்கு கூட பதில் தராமல், பிளாக் செய்பவர்.
ReplyDeleteஅட.. அவ்வளவு ஏன் , அவர் ,தில்லு முல்லு, சினிமா பார்க்க போறேன் ன்னு ஸ்டேட ஸ் போட்டாரு, அதற்கு கமெண்ட்டா ' அப்ப இன்னைக்கு டீ.வீக்கெல்லாம் எப்படி சார், தியேட்டர்ல இருந்து பேட்டி கொடுப்பிங்க்களான்னு போட்டிருந்தேன். மறுநாளே என்னைய ப்ளா க் பண்ணிட்டாரு.
ReplyDeleteமனுஷ்யபுத்திரன் நகைச்சுவையை கூட ரசிக்கத்தெரியாதவரா இருக்காரேன்னு வருத்தப்பட்டேன்