மிகச்சிறந்த தருணங்களும்
ஆகப்பெரும் துயரங்களும்
கடந்து செல்ல அனுமதித்தோம்
மறக்க முடியாத
மறக்க விரும்பாத
துக்கங்களை
நாட்காட்டியின் துடிக்கும் தாள்களில்
ஒரு புயலின் மையம் போல்
ஆற்றின் தூண்டிலிட்ட கரை போல்
எதனாலும்
அலைகழிய இல்லை
அடித்துச் செல்லப்பட இல்லை
நம் காதல்
நேற்றில் தொடங்கி
நேற்றிலேயே இருக்கிறது
நமது இன்று
ஒரு தூங்கும் குழந்தையின் கையைப் போல்
திறந்தே இருக்கிறது
ஒரு தூங்கும் கையைப்போல் திறந்தே இருக்கிறது
ReplyDeleteஅருமையான சிந்தனை ....
பாராட்டுக்கள்
வளவன்
vaazhthukkal
ReplyDeleteஒரு தூங்கும் குழந்தையின் கையைப் போல்திறந்தே இருக்கிறது......நல்ல சிந்தனை....... வாழ்த்துக்கள்.
ReplyDeleteNice
ReplyDeleteஅருமை வாழ்த்துகள்
ReplyDelete