Friday, 24 September 2010

வாக்குமூலம் - புக்காவஸ்கி




மரணத்துக்கு காத்திருக்கிறேன்
படுக்கை மேல் தாவும் ஒரு பூனை போல்

என் மனைவிக்காக ரொம்ப ரொம்ப
இரக்கப்படுகிறேன்


இந்த விறைத்த
வெளுத்த
உடலை
அவள் காண்பாள்

ஒருமுறை உலுக்குவாள், பிறகு
ஒருவேளை
மீண்டும்

"ஹேங்க்"

ஹேங்க் பதிலளிக்க
மாட்டான்

என்னை வருத்துவது
என் மரணமல்ல, என் மனைவிக்கு
இந்த இன்மைக் குவியலை
விட்டுப் போகிறேன் என்பதுதான்.

ஆனாலும்,
அவள் அருகே
உறங்கிய
அத்தனை இரவுகளும்

பயனற்ற அந்த
சர்ச்சைகளும்
கூட

எப்போதுமே அற்புதமான
விஷயங்கள்
என்பதை

அவள் தெரிந்து கொள்ள
விரும்புகிறேன்

அத்தோடு அந்த
நான் எப்போதும்
சொல்ல பயந்த
கடின வார்த்தைகளையும்
இப்போது
சொல்லி விடலாம்:

உன்னை
காதலிக்கிறேன்.
Share This

4 comments :

  1. //படுக்கை மேல் தாவும் ஒரு பூனை போல்//

    சத்தியமா இங்க என்ன சொல்ல வரிங்க புரியலை. கொஞ்சம் விளக்குங்க ப்லீஸ்...

    ReplyDelete
  2. திரு.பாண்டியன்
    ஒரு பூனை நான் எதிர்ப்பாராத வேகத்தில் நேரத்தில் துள்ளி ஏறக் கூடியது. பூனையை இங்கு மரணத்தின் எதிர்பாரா வருகைக்கு உவமை ஆக்குகிறார்.
    அடுத்து, ”படுக்கை மேல்” என்பதை கவனியுங்கள். மரணத்தை மேல் நோக்கி முன்னேறுவது என்று புக்காவஸ்கி நம்புகிறார். தனிமனிதன் வாழ்ந்து முடிக்கும் காலம் அதிமனிதனை உருவாக்கும் அவகாசமாக இருக்க வேண்டும் என்கிற நீட்சேயிய நம்பிக்கை இது. முக்கியமான வரி இது.

    ReplyDelete
  3. @ஆர்.அபிலாஷ்
    விளக்கத்திற்க்கு மிக்கா நன்றி!! :))

    ReplyDelete

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates