ஹாலிவுட் பார்க்கில் வெக்கையான, சோர்வான நாட்களில் ஒன்றான அன்று
பெருங்கூட்டத்துடன்,
சோர்வுறும், முரட்டுத்தனமான, முட்டாள்
கூட்டம்
கடைசிப் போட்டியில் வென்று விட்டேன், வாங்குவதற்கு காத்திருந்தேன்,
என் காரை நெருங்கிய போது
அப்பகுதியிலிருந்து வெளியேற முயல்வதற்கான
ஒரு பிரம்மாண்ட போக்குவரத்து நெரிசல்
ஆக என் ஷூக்களை கழற்றினேன், காத்திருந்தேன், வானொலியை
இயக்கினேன், அதிஷ்டவசமாய் சிறிது பாரம்பரிய இசை ஒலித்தது, ஒரு பின்ட்
ஸ்காட்ச் காரின் சின்ன சேமிப்பறையிருந்தது,
மூடியைத் திறந்து ஒரு மடக்கு
இவர்களெல்லாம் இங்கிருந்து கிளம்பும்வரை பொறுத்திருப்பேன்,
நான் எண்ணினேன், பிறகு நான் கிளம்புவேன்
முக்கால் சிகர் கிடைத்தது, பற்ற வைத்தேன், மற்றொருஸ்காட்ச் மடக்கு
இசை கேட்டேன், புகை பிடித்தேன்,
ஸ்காட்ச் அருந்தினேன், தோற்றவர்கள் கிளம்புவதை
வேடிக்கை பார்த்தேன்
100 யார்டுகள் கிழக்கே
மட்டமான சிறு ஆட்டமொன்று வேறு
நடந்து கொண்டிருந்தது
பிறகு அதுவும் முடிந்தது
விஸ்கியை காலி செய்ய முடிவு செய்தேன்
அப்படியே செய்து, பின் இருக்கையில்
கால் நீட்டி படுத்தேன்.
எவ்வளவு நேரம் தூங்கியிருப்பேன்
என்று தெரியாது
ஆனால் நான் விழித்தபோது இருட்டியிருந்தது
வண்டி நிறுத்துமிடம் காலியாயிருந்தது
ஷுக்களை மாட்ட வேண்டாமென தீர்மானித்து, காரை இயக்கி
அங்கிருந்து வெளியேறினேன்
என் இடத்தை அடைந்த போது
தொலைபேசி மணியடிப்பது கேட்டது
சாவி நுழைத்து கதவைத் திறந்த போது
தொலைபேசி தொடந்து மணியடித்தது
நடந்து சென்று
தொலைபேசியை எடுத்தேன்
"ஹலோ"
"தேவடியா மவனே எங்கே போயிருந்தாய்"
"ஓடுதளத்துக்கு"
"ஓடுதளமா? மணி இப்போது 12:30 a.m.!
7 p.m. இலிருந்தே உன்னை அழைத்துக்
கொண்டிருக்கிறேன்"
"ஓடுதளத்திலிருந்து இப்போது தான்
வந்தேன்"
"எவகூட இருந்தே அங்கே"
"இல்லை"
"உன்னை நம்ப மாட்டேன்"
தொலைபேசியை வைத்தாள்.
குளிர்பதன பெட்டியிடம் சென்றேன், பீர் ஒன்று எடுத்தேன்,
குளியலறை போனேன்,
தொட்டியில் நீர் திறந்து விட்டேன்.
பீரை தீர்த்தேன், மற்றொன்று எடுத்தேன், திறந்தேன்,
தொட்டிக்குள் இறங்கினேன்.
தொலைபேசி மீண்டும்
அடித்தது
பீரோடு தொட்டியிலிருந்து வெளியேறினேன்,
சொட்ட சொட்ட
தொலைபேசியிடம் சென்றேன்,
அதை எடுத்தேன்
"ஹலோ"
"தேவடியா பையா, நான்
இப்போதும் உன்னை நம்பவில்லை"
அவள் துண்டித்தாள்.
எனது பீரோடு நான் தொட்டிக்கு திரும்ப நடந்து சென்றேன்
மற்றொரு நீர்த் தடத்தை
பின் விட்டு
நான் தொட்டியை அடைந்த போது
தொலைபேசி மீண்டும்
அடித்தது
அதை அடிக்க விட்டேன், மணி ஒலிகளை
எண்ணியபடி: 1,2,3,4,5,6,7,8,9
10,11,12,13,14,15,
16 ...
அவள் வைத்தாள்.
பிறகு , ஒருவேளை, 3 அல்லது 4 நிமிடங்கள்
கழிந்திருக்கும்.
தொலைபேசி மீண்டும்
அடித்தது.
மணி ஒலிகளை எண்ணினேன்:
1,2,3,4,5,6,7,8
9
பிறகு
அமைதி
அப்போது காரில் என் ஷூக்க்ளை
மறந்து விட்டிருந்ததை
நினைவு கூர்ந்தேன்.
பரவாயில்லைதான், என்னிடம்
ஒரு ஜோடி மட்டுமே இருந்தது என்பதைத் தவிர.
அந்த காரை ஒருபோதும் யாரும்
திருட விரும்ப மாட்டார்கள்
என்பதற்கு, ஒருவேளை, வாய்ப்பிருந்தது.
தொட்டியை விட்டு இறங்கினேன்
மற்றொரு பீருக்காக
மற்றொரு தடத்தை
பின்னால் விட்டு
அது ஒரு
நீண்ட
நீண்ட
நாளின்
முடிவு.
escuseme sorry bro puriyaliyeaaaa
ReplyDeletemeendum meendum meendumeana 3, 4 murai padithean eatho purinthamaathiri irrukkirathuuuu
ReplyDeletepattasuu
Nandru
ReplyDelete