Monday, 20 September 2010

பைத்தியங்கள் என்னை எப்பொதும் நேசித்தனர் - புக்காவஸ்கி





அத்தோடு மந்தபுத்திகளும்

ஆரம்பப் பள்ளியில்
ஜூனியர் உயர்பள்ளியில்
உயர் நிலை பள்ளியில்
ஜூனியர் கல்லூரியில்
வேண்டப்படாதவர் தங்களை
என்னோடு
இணைத்துக் கொள்வர்

ஒற்றைக் கையர்கள்
முகத்தசை இழுப்புடையோர்
பேச்சுக் குறைபாடுடையவர்
ஒற்றைக் கண்ணின் மேல்
வெண்படலம் கொண்டவர்
பயந்தாங்கொள்ளிகள்
மானிட வெறுப்பாளர்கள்
கொலைகாரர்கள்
ஒளிந்துபார்க்கும் கிறுக்கர்கள்
மற்றும் திருடர்கள்

தொழிற்ச்சாலைகளில் எல்லாம்
என் குண்டிக்கு பின்னும்
வேண்டப்படாதவர்களை என்பால்
கவர்ந்தேன்

உடனடியாய்
அவர்கள் என்னை கண்டு கொண்டனர், என்னோடு
ஒட்டிக் கொண்டனர், இப்போதும்
கூட அவர்கள் அதைச் செய்வதுண்டு.

இப்போதிருக்கும் அண்டைப்பகுதியில்
என்னை கண்டுகொண்ட
ஒருவன் இருக்கிறான்.
குப்பை ரொம்பிய
ஓரு ஷாப்பிங் தள்ளுவண்டியை
தள்ளிச் செல்வான்:
உடைந்த கழிகள், ஷூ வார்இழைகள்,
காலி உருளைக்கிழங்கு வறுவல் பைகள்,
பால்பைகள், தினசரிகள், பேனா வைப்பான்கள்...
"என்ன நண்பா எப்படிக்கீறே?"
நான் நிற்பேன், நாங்கள் சற்று நேரம்
பேசுவோம்

பிறகு நான் வணக்கம் சொல்லிப் பிரிவேன்.
ஆனால் அவன் என்னைப்
பின்தொடர்வான்.

பீர் கடைகள்
காதல் கடைகள்
கடந்து
"எனக்கு அறிவூட்டு
நண்பா, அறிவூட்டு.
என்ன நடக்கிறது என்பது
எனக்கு அறிய வேண்டும்"

இவன் புதியவன்
வேறு யாரிடமும்
இவன் பேசி
நான் இதுவரைப் பார்த்ததில்லை

தள்ளுவண்டி
எனக்குப் பின்னால்
கலகலத்து சற்று வருகிறது

பிறகு எதுவோ
கீழே விழுகிறது
அதை எடுக்க
அவன் நிற்கிறான்

அவன் அவ்வாறு செய்ய நான்
முனையில் உள்ள
பச்சை உணவகத்து
முன்கதவு வழியாக
நடந்து செல்கிறேன்

பொதுஅறையைத்
தாண்டி
பின்கதவுக்கு வந்து
சேர்கிறேன், மேலும்
அங்கு ஒரு பூனை
முழு ஆனந்தத்தில்
பீ இடுகிறது
அது என்னைப் பார்த்து
இளிக்கிறது.
Share This

No comments :

Post a Comment

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates