சில நேரங்களில்
இருபது நிமிடங்களில்
3 அல்லது 4 முறைகள்
என்னிடம் பிச்சை கேட்கப்படுவதுண்டு
நானும்
பத்தில்
ஒன்பது தடவைகள்
நான் கொடுக்காத
ஒன்றிரண்டு தடவைகள்
எனக்கு கொடுக்க வேண்டாம்
என்ற உள்ளுணர்வு சார் எதிர்வினை தோன்றுகிறது
நானும்
கொடுப்பதில்லை
ஆனால் பெரும்பாலும்
நான் தோண்டி எடுத்து
கொடுப்பேன்
ஆனால் ஒவ்வொரு முறையும்
நினைப்பதை தவிர்க்க முடியவில்லை
கண்ணில் குழி விழுந்து
விலா எலும்புகளுடன் தோல்
இறுக்கமாய் ஒட்டியிருக்க
மனம் காலியாக
வெறி கொண்டிருக்க
நான் யாரிடமும்
எதையும்
கேட்டதில்லை
அது
கௌரவத்தினால் அல்ல
எளிதாய் சொன்னால் நான் அவர்களை
மதிக்கவில்லை
அவர்களை
பொருட்படுத்தத்தக்க
மனிதர்களாய்
கருதவில்லை
என்பதால் மட்டுமே
அவர்கள் தாம்
விரோதிகள்
நான்
தோண்டி
எடுத்து
கொடுக்கையில்
இப்போதும் கூட
விரோதிகளே.
நேர்மையாக பார்த்தால் அவர்களை அங்கிருந்து உடனடியாக அனுப்பி விடுவதற்கும், நமது வெளியில் இந்த ஜீவன்கள் இல்லையென உறுதி செய்வதற்குமான முயற்சி தான் பிச்சையிடல்.
ReplyDeleteநேர்மையாக பார்த்தால் இந்த ஜீவன்கள் நமது வெளியில் இல்லையென நம்மை நாமே ஏமாற்றி கொள்ள, அதற்காக அவர்களை நம்மருகே இருந்து விரட்டி விட உடனடி முயற்சி தான் பிச்சையிடல்.
ReplyDelete