புத்தக கண்காட்சி மிக குழப்பமாக இருக்கிறது. ஒரு கற்காலத்தில் நடந்து வருகிறது. பலரும் குறிப்பிட்ட நூல்களை தேடி அலைவது காண வருத்தமாக உள்ளது. தவறான ஸ்டால்களில் இல்லாத நூல்களை தேடி திருவிழா குழந்தைகளை போல் அலைகிறார்கள். தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இவ்விழாவை மேலும் நேர்த்தியாக நடத்தலாம்.
முதலில் பதிப்பகங்களின் நூல்களின் databaseஐ இணைத்து தகவல் அறியும் மையத்தில் சில கணினிகள் மூலம் யாரும் ஒரு முனையில் இருந்து கொண்டு எந்த நூல் எந்த ஸ்டாலில் கிடைக்கும் என்று அறியும் வசதி கொண்டு வரலாம்.
பதிப்பகங்களுக்கு GPS மூலமாக தகவல் அனுப்பி நூல்களை எடுத்து வைக்கவோ அனுப்பவோ செய்யலாம்.
ஸ்டால்களின் வெளியே சின்ன LCD திரைகளில் புது மற்றும் முக்கிய நூல்களின் promoக்கள் அல்லது வெறுமனே முகப்பு இமேஜ்களை ஓட விடலாம்.
குறைந்த பட்சம் ஸ்டால்களை வகைப்படுத்தி ஓரிடத்தில் வைக்கலாம். அரசியல், சமூகம், ஜனரஞ்சகம், பத்திரிகை, இலக்கியம் என்று.
ஒருவர் என்னிடம் வந்து ஊனமுற்றவர் பற்றிய 45வது சட்டப்பிரிவு பற்றிய நூல் வேண்டும் என்றார். அவரை எதற்கு இலக்கிய, அரசியல், வரலாற்று புத்தகக் கடலில் மூழ்கி தத்தளிக்க விட வேண்டும். நடக்க முடியாதவர்களுக்கு முதியவர்களுக்கு மேற்சொன்ன வசதிகள் செய்து தரப்பட வேண்டும். அதாவது ஓரிடத்தில் இருந்த படி மொத்த கண்காட்சியையும் scan செய்யும் வாய்ப்பு.
படிப்பறிவில்லாத அன்னா ஹசேரேவுக்கு அளிக்கப்படும் தொழில்நுட்ப ஆதரவில் ஒரு சிறுபங்கு நமக்கு தர யாராவது முன்வரக்கூடாதா?
No comments :
Post a Comment