முதல் இரவு
கீழ்வருபவரின் மேசைக்கு
மேதகைய வென் ஜியாபாவோ
பிரீமியரின் அலுவலகம்
பெய்ஜிங்
விடுதலை விரும்பி சீன தேசத்தின் தலை நகரம்
கீழ்வருபவரின் மேசையிலிருந்து
"வெள்ளைப் புலி"
சிந்திக்கும் மனிதன் மற்றும்
சுயதொழில் முனைவோன்
உலகின் தொழிற் நுட்பம் மற்றும் அவுட்சோர்சிங்கின் மையத்தில் வாழ்பவன்
எலக்டுரானிக் சிட்டி ஃபேஸ் 1 (ஹொசூர் பிரதான சாலை சற்று தாண்டி)
பெங்களூர், இந்தியா
திரு பிரீமியர் அவர்களே,
சார்,
நீங்களோ நானோ ஆங்கிலம் பெசுவதில்லை; ஆனால் சில விசயங்களை ஆங்கிலத்தில் தான் பேசியாக வேண்டும். இதிலொன்றை எனது முன்னாள் முதலாளி காலமான திரு. அசோக்கின் முன்னாள் மனைவி சொல்லித் தந்தாள்; இன்று இரவு 11:30க்கு, அதாவது பத்து நிமிடத்துக்கு முன், அகில இந்திய வானொலியின் அந்த பெண்மணி "பிரீமியர் ஜியாபாவோ அடுத்த வாரம் பங்களூர் வருகிறார்" என அறிவித்த போது, நான் அதை உடனே சொன்னேன்.
உண்மையில், ஒவ்வொரு முறை உங்களைப் போல் மாமனிதர்கள் எங்கள் நாட்டிற்கு வருகை தரும்போதும் நான் அதை சொல்வேன். என் வழியில், சார், நான் என்னை உங்கள் வகையை சார்ந்தவனாக கருதுகிறேன். ஆனால் எப்போதெல்லாம் எங்கள் பிரதமரும் அவரது பெருமை வாய்ந்த தோஸ்துக்களும் விமான நிலையத்துக்கு தங்கள் கருப்பு கார்களில் வந்திறங்கி, டி.வி. படக்கருவி முன் உங்களுக்கு நமஸ்தே செய்து, இந்தியா எத்துணை ஒழுக்கமும், புனிதமும் மிக்கது எனக் கூறும் போது, நான் அந்த ஆங்கிலத்தில் அதனை சொல்ல வேண்டியதாகிறது.
இப்போது, நீங்கள் எங்களுக்கு இவ்வாரம் வருகை தருகிறீர்கள், மேதகையீர், அப்படித்தானே? அகில இந்திய வானொலி இவ்விசயங்களில் நம்பத் தகுந்தது தான்.
அதுவொரு ஜோக், சார்.
ஹா!
அதனால் தான் நீங்கள் நிஜமாகவே பெங்களூர் வருகிறீர்களா என்று நேரடியாகவே கேட்க நினைத்தேன். ஏனென்றால், நீங்கள் வருவதென்றால், முக்கியமானதொன்றை எனக்கு உங்களிடம் சொல்லவுள்ளது. பாருங்கள், வானொலியில் அப்பெண்மணி சொன்னாள், "திரு.ஜியாபாவோ ஒரு லட்சியத்தை மேற்கொண்டுள்ளார்: அவருக்கு பெங்களூர் பற்றின உண்மை தெரிய வேண்டும்"
என் ரத்தம் உறைந்தது. பெங்களூர் பற்றின் உண்மை யாருக்காவது தெரியுமானால் அது நான் தான். அடுத்து, அந்த பெண் அறிவிப்பாளர் சொன்னார், "திரு. ஜியாபாவோ சில இந்திய சுயதொழில் முனைவோரை சந்தித்து, அவர்களின் வெற்றிக் கதையை அவர்கள் உதடுகளில் இருந்தே கேட்க விரும்புகிறார்". அவள் பிறகு சிறிது விளக்கினாள். நிச்சயமாக, எங்கள் நாட்டில், குடிநீர், மின்சாரம், கழிநீர் கட்டமைப்பு, பொதுப்போக்குவரத்து, சுகாதார உணர்வு, ஒழுக்கம், மரியாதை, நேரந்தவறாமை இல்லையென்றாலும், நிச்சயம் சுயதொழில் முனைவோர் உண்டு. அதோடு இந்த சுயதொழில் முனைவோர் -- நாங்கள் சுயதொழில் முனைவோர் -- ஏறத்தாழ அமெரிக்காவையே தற்போது இயக்கும் இந்த அவுட்சோர்சிங் நிறுவனங்கள் அனைத்தையும் அமைத்துள்ளோம். ஆயிரக்கணாக்கானோர். குறிப்பாய் தொழில் நுட்பத்துறையில்.
No comments :
Post a Comment