இந்த மாத தாமரை இதழில் வெளியாகி உள்ள என் மொழியாக்க கவிதை.
பொன்னிறம்
ஆக நான் அவனிடன் சொன்னேன்: கட்டில் மேல் நின்று வெளியே பார்,
மரங்களுக்கு கீழ் தங்க இலைகளின் விரிப்பு எத்தனை தடிமனாக உள்ளது பார், இலைகள் விழுவதை கவனி.
அவன் தயங்கினான். நான் யாருடைய கட்டிலின் மீதாவது
நின்று ரொம்ப காலமாகிறது, அவன் சொன்னான்.
மேலும், ஒருவேளை நான் வெளியே பார்த்திட நீ
காண்பதை பார்க்கவில்லை என்றால், என்ன செய்ய. ஒருவேளை எனக்கு
இலைகள் பொன்னிறமாக இல்லை எனில். ரொம்ப
காலமாகி விட்டது, அவன் திரும்பவும் சொன்னான்,
தன் கால்சட்டையின் மந்தமான பழுப்பை நீவியபடி,
தன் ரொம்பவே சின்ன கண்ணாடிகளை
சரி செய்தபடி; இதோ பார், நான் சொன்னேன்,
என் கையை பிடித்துக் கொள், நாம் சேர்ந்து
கட்டிலில் நிற்போம். ஆக
அவன் என் கைகளை பற்றினான்; ஒன்றாக
நாங்கள் கட்டிலில் நின்றபடி கவனித்தோம்,
நாங்கள் தொடர்ந்து கவனித்தோம்
இலை-அகற்று எந்திரம் கொண்டு ஆட்கள்
புல்வெளியை சுத்தப்படுத்திட, குழந்தைகள்
ஒரு நாயுடன், வாலில்
ஒரு பொன்னிற இலை கொண்டிருந்த கறுப்பு நாய், நடைபழகுவதை
கவனித்தோம். மௌன உறைபனி பொழுதுகள் வர,
நாட்கள் சாம்பலாகி, மேலும் வெள்ளையாகி,
பனிப் பொழிந்து, முடிவற்று மீண்டும் சாம்பலாக கவனித்தோம்.
வசந்தத்திற்காக பறவைகள் வட்டமிடுவதை
மேலும் வெற்று மரங்கள்
உவகையில் நடுங்குவதை கவனித்தோம்.
மரங்கள் மீண்டும் தொடங்குவதை நாங்கள் கவனித்தோம்
Wednesday, 27 January 2010
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment