மகிழ்ச்சியான மனநிலைக்கு உறசாகமான பல காரணங்கள் உள்ளன. மகிழ்ச்சிக்கான காரணங்களை சொல்லும்போது அம்மன நிலை மேலும் தெளிவாகிறது. ஆனால் சோர்வில் துவளும் போது அது அத்தனை எளிதல்ல. தற்போது நான் சோர்வுக்கான ஒரு பட்டியல் இட்டால் அது அபத்தச் சுருளாகவே நீளும்.
அதனால் என் சோர்வை நிறுவும் அறிகுறிகளை மட்டும் பட்டியலிடுகிறேன்.
சோர்வடையும் போது அதிகம் பேசுவேன். மகிழும் போது மௌனிப்பேன்.
வாசிப்பு, உணவு மற்றும் திட்டமிடலில் ஈடுபாடு குறைகிறது.
தோளில் யாரோ அமர்ந்திருப்பதான உணர்வு. கடுக்கிறது.
எழுத சோர்வு மேலிடுகிறது. அதனால் இங்கேயே நிறுத்தி விடுகிறேன்.
No comments :
Post a Comment