Friday, 8 January 2010

ஜெயமோகன்: வழுக்கி செல்லும் மீன்



எழுத்தாளர் யுவகிருஷ்ணா தனது பதிவொன்றில் ஜெயமோகன் இந்துமத்தை பின்நவீனத்துவ இயக்கம் என்று கூறும் கட்டுரையை கண்டித்து பகடி செய்திருக்கிறார். இப்படி ஜெ.மோவின் வலதுசாரி அரசியலை கண்டிப்பதில் ஒரு கலாச்சார காரணம் உள்ளது. அதைக் குறித்ததே இச்சிறு பதிவு.

ஜெ.மோ போன்றவர்களின் மதச்சாய்வை வாசகர் கண்டிப்பதற்கு ஒரு அரசியல் கலாச்சார காரணம் உள்ளது. ஒரு எழுத்தாளன் தீவிர வலதுசாரியாகவும் இருக்கலாம். தவறில்லை. உலக இலக்கியத்தில் இவர்களை விமர்சகர்கள் பொங்கி வடிப்பதில்லை. உதாரணமாக, ஷேக்ஸ்பியர் கலகத்தை வெறுத்தவர்; முடியாட்சியை, அதன் எண்ணற்ற குறைகளுடன் சேர்த்தே, ஆதரித்து எழுதியுள்ளார். எனக்குத் தெரிந்து இடதுசாரிகள் இவருக்கு எதிராக கோஷம் இட்டதில்லை.



ஆனால் இங்கு திராவிட பாரம்பரியம் அதன் எழுத்தாளர்களிடத்து இந்து மதத்தை கண்டிக்கும் போக்கை வளர்த்து விட்டது. நாகர்கோவில் பகுதியிலுள்ள ஒரு மிகப்பிரபலமான இடதுசாரி நாவலாசிரியர் குமாரகோவிலுக்கு ரகசியமாய் சென்று வருபவர். மேலும் பல தமிழ் எழுத்தாளர்கள் இப்படியான கொரில்லா பக்தியாளர்களே. அவர்கள் தங்கள் ’பக்தியை’ வெளிப்படையாக எழுத முடியாததற்கு மேற்சொன்ன திராவிட கலாச்சாரம் காரணம். மனுஷ்யபுத்திரன் தனது சமீபத்திய அகநாழிகை பேட்டியில் சொல்லியுள்ளது போல் எழுத்தாளர்கள் தங்கள் வக்கிரங்களை அல்லது மறைவான எண்ணங்களை நாற்சந்திக்கு கொண்டு வரவேண்டும். அதுவே உகந்தது.

ஜெ.மோவை நாம் அரசியல் ரீதியாக அணுகக் கூடாது; வழுக்கி விடுவார். அதற்கு அவரது ஆயுதத்தையே எடுக்க வேண்டும்: தர்க்கம்.
Share This

No comments :

Post a Comment

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates