Monday, 2 August 2010

வட-அமெரிக்க ஹைக்கூ



ஜார்ஜ் கிளாக்சன்ஸ்கி
George Klacsanzky

விடிகாலை
மீன்பிடிப்படகு முழுக்க
பெலிகன் பறவைகள்

early morning
fishing boat full of
pelicans


ஆரஞ்சு கெண்டை
பிரதிபிம்பத்தில் தொலைந்தது
சிவப்பு மேப்பிள் இலைகள்

orange carp
lost in the reflection
red maple leaves

ஒவ்வொரு பின்னோடும்
அலையுடனும் – கூழாங்கற்களின்
ஓசை

with each receding
wave—the sound of
pebbles

ஜெரி கில்பிரைட்
Jerry Kilbride

கிறித்துமஸ் இரவு
காற்றுக்கு பின்னுள்ள
மவுனம்

christmas night
the silence behind
the wind

துருவ மின்னொளி:
என் மூச்சு
ஜன்னலில்

northern lights:
my breath
on the window

மைக்கேல் கெட்செக்
Michael Ketchek

சன்னமான காலை மூடுபனி
ராட்சச ராட்டினம் மட்டும்
மரங்களுக்கு மேல் எழும்

light morning mist
only the roller coaster
rises above the trees

துறைமுக பாலத்தின் மீதாய்
அலைகள் மோதி உடையும் – புட்டி
என் கையில் இருந்து நழுவும்

waves crash
against the pier—the bottle
slips from my hand

அடேல் கென்னி
Adele Kenny

நிலா உதயம்:
வன எல்லையில்
கவனித்துக் கேட்கிறோம்

moonrise:
at the edge of the woods
we listen 

Share This

2 comments :

  1. அனைத்தும் அற்புதம்...பகிர்வுக்கு நன்றி.வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. நன்றி மதுரை சரவணன்

    ReplyDelete

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates