இரு செவிவழிக் கதைகள்
I
கருமை வெளியே இல்லாத கண்ணாய் இருந்தது
கருமை உள்ளிருக்கும் நாவாக இருந்தது
கருமை இதயமாக இருந்தது
கருமை ஈரல், கருமை
ஒளியை உறிஞ்ச முடியாத நுரையீரல்
கருமை சத்தமான சுரங்க வழியுடனான குருதி
கருமை உலையில் திணிக்கப்பட்ட குடல்
கருமை வெளிச்சத்துக்குள் வெளியேற திமிறும்
தசைகளும் கூடத்தான்
கருமையே நரம்புகள், கருமையே
கல்லறை காட்சிகள் கொண்ட மூளை
கருமை ஆன்மாவும் கூட, வீங்கி வளர்ந்து,
தன் சூரியனை உச்சரிக்க முடியாத
அப்பெரும் விக்கித்த அலறல்
II
கருமைதான் ஈர நீர்நாயின் நிமிர்ந்த தலையாக இருப்பது
கருமை நுரையில் மூழ்கும் பாறையாக உள்ளது
கருமை குருதிப் படுக்கையில் கிடக்கும் பித்தநீர்ப்பை
கருமை இருண்மை முட்டைக்கு ஓர் இஞ்சு கீழுள்ள
பூமிக் கோளம்,
அங்கு சூரியனும் நிலவும் பருவநிலைகளை ஒன்றுவிட்டு ஒன்றாய் தொடர விடும்
ஒரு காகத்தை குஞ்சு பொரிக்க, இன்மை மேலாய்
இன்மையில் வளைந்து
ஆனால் பறக்கும் ஒரு கரிய வானவில்லை
No comments :
Post a Comment