ஆரம்பத்தில் அலறல் இருந்தது
அது குருதியை பெற்றது
அது விழியை பெற்றது
அது அச்சத்தை பெற்றது
அது சிறகை பெற்றது
அது எலும்பை பெற்றது
அது கிரானைட்டை பெற்றது
அது வயலட் பூவை பெற்றது
அது கிட்டாரை பெற்றது
அது வியர்வையை பெற்றது
அது ஆதாமை பெற்றது
அது ஏவாளை பெற்றது
அது கடவுளை பெற்றது
அது இன்மையை பெற்றது
அதுவும் இன்மையையே பெற்றது
இன்மை இன்மை இன்மை
அது காகத்தை பெற்றது
ரத்தத்துக்காக, முட்டைப் புழுவுக்களுக்காக,
அப்பப்பொருக்குகளுக்காக, எதற்காகவும்
அலறியபடி
கூட்டின் அழுக்கில் நடுங்கியபடி இறகுகளற்ற முழங்கைகள்
No comments :
Post a Comment