Friday, 30 July 2010

வட-அமெரிக்க ஹைக்கூ



பெக்கி லைல்ஸ்
Peggy Lyles

இலையுதிர் மூடுபனி ...
ஒரு முயலின் பற்தடங்கள்
மக்னோலியா இலைகளில்

nip of fall ...
a rabbit's toothmarks
in magnolia leaves


தேயிலை வாசனை
காலிக் கோப்பையில் இருந்து ..
மெல்லிய மழைக்கால நிலா

Tea fragrance
from an empty cup ...
the thin winter moon

டோம் லின்ச்
Tom Lynch

ஏறத்தாழ தூங்கி விட
தென்றலில் எழுகிறேன் –
துருவ மின்னொளி

almost asleep
a breeze wakes me—
northern lights

சட்டென இங்கே
என் முட்டி மேல் வெட்டுக்கிளி
சட்டென போச்சு

suddenly here
grasshopper on my knee
suddenly gone

பார்பரா மக்கோய்
Barbara Mccoy

இலையுதிர் பருவ அஸ்தமனம் –
மலைமீது நீல நிழல்கள்
சந்திக்கும் ஏரியின் நீல நிழல்களை

Autumn sunset—
Blue shadows on the mountain
meet blue shadows in the lake

ஜன்னல் கண்ணாடிக்கு அப்பால் பனி;
ஒரு படிக ஒற்றை-மலர் குவளையில்
வெள்ளை ரோஜா அவிழ்கிறது ...

Snow beyond the pane;
In a crystal bud vase
the white rose unfolds ...

ஆன் மக்கேய்
Anne Mckay

ஏப்ரல் பழத்தோட்டத்தில்
அந்த மெலிதான கரும்பறவை
... காத்திருக்கிறது

in the april orchard
that thin black bird
... waiting

அவள் ஜன்னலில் இருந்து
சூரியன் மறைய
நிலவு சாய

from her window
at sundown
at moondown
Share This

1 comment :

  1. சட்டென இங்கே என் முட்டிமேல் வெட்டிக்கிளி சட்டென போச்சு..


    அற்புதம் நண்பா! ஐம்பது முறை படித்துவிட்டேன்.. இனிமை!

    ReplyDelete

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates