Thursday, 29 July 2010

ஜான் பிராண்டி கவிதைகள் II









நேற்றிரவின் கனவு
அதை எழுதினேன்


பென்சிலின் தவறான முனையால்

Last night’s dream
Wrote it with the wrong end
Of the pencil

அப்படியொரு வறுமை
வராந்தாவை பார்வையால் அளவெடுக்கிறேன்
விறகுக்காக

So broke
Size up the porch
For firewood

புயலுக்குப் பிறகு
ஒரு தும்பி
கற்றாழையில் தைக்கப்பட்டு

After the storm
A dragonfly
Pinned to the cactus

ஒரு எறும்பை கொல்லப் போகிறேன்
ஆனால் வேண்டாம் அது சுமக்கிறது
ஒரு பிணத்தை

About to kill an ant
No it’s carrying
A corpse

ஒவ்வொருவரும்
பிரிவு வணக்கம் சொல்லி பிறகு தங்கி விடும்
ஒரு விருந்து

A party
Where everyone says goodbye
Then stays


Share This

3 comments :

  1. புயலுக்குப் பிறகு
    ஒரு தும்பி
    கற்றாழையில் தைக்கப்பட்டு.

    மனதை தைக்கிறது.
    அனைத்தும் அருமை.
    உங்களுக்கு நன்றி.

    ReplyDelete
  2. தேர்ந்த மொழியாக்கம்..

    ReplyDelete

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates