இந்த குட்டி குச்சிக் கால்கள் யாருக்கு சொந்தம்? மரணம்
இந்த முள்ளடர்ந்த கருகிய தோற்றமளிக்கும் முகம் யாருக்கு சொந்தம்? மரணம்
இந்த இப்போதும் இயங்கும் நுரையீரல் யாருக்கு சொந்தம்? மரணம்
இந்த அன்றாட தேவைக்கான தசைகளின் தோல் யாருக்கு சொந்தம்? மரணம்
இந்த சந்தேகத்துக்குரிய மூளை யாருக்கு சொந்தம்? மரணம்
இந்த ரத்த சகதி எல்லாம்? மரணம்
இந்த ஒழுக்கங்கெட்ட சிறு நாவு? மரணம்
இந்த அவ்வப்போதான உஷார்தன்மை? மரணம்
கொடுத்தாயா, திருடினாயா, அல்லது தீர்ப்புக்காக காத்திருக்கும் நிலையில் காவலில் வைக்கப்பட்டாயா?
வைக்கப்பட்டேன்.
மழையும் கல்லாலுமான மொத்த உலகும் யாருக்கு சொந்தம்? மரணம்
நம்பிக்கையை விட யார் வலிமையானவர்? மரணம்
மன-உறுதியை விட யார் வலிமையானவர்? மரணம்
அன்பை விட வலிமையானவர்? மரணம்
வாழ்வை விட வலிமையானவர்? மரணம்
ஆனால் மரணத்தை விட வலிமையானவர் யார்?
நான் தான், கண்டிப்பாக.
போகலாம், காகமே.
No comments :
Post a Comment