காகம் அழுத போது அவன் அம்மாவின் காது
கட்டையாக கருகிப் போனது.
அவன் சிரித்த போது அவள் குருதியால்
அழுதாள் அவள் முலைகள் அவள் உள்ளங்கைகள் அவளது நெற்றி எல்லாம் குருதியால் அழுதன.
ஓரடி எடுத்து வைக்கப் பார்த்தான், பிறகு மற்றோர் அடி, மீண்டும் ஓரடி –
அவன் வெகுண்டெழுந்த போது
கடுமையான வெட்டுக்காயத்துடன் பயங்கரமான அலறலுடன் பின்சாய்ந்தாள்
அவன் நிறுத்திய போது அவள் புக்மார்க் கொண்ட புத்தகத்தை போல அவன் மீது மூடினாள், அவன் தொடர வேண்டி இருந்தது.
அவன் ஒரு காருக்குள் குதித்தான் இழுக்கும் வடம்
அவள் கழுத்தை சுற்றியிருந்தது அவன் வெளியே குதித்தான்.
அவன் ஒரு விமானத்துக்குள் குதித்தான் ஆனால் அவளது உடல் விமானத்துக்குள் திணிக்கப்பட்டிருந்தது –
பெரும் சச்சரவு ஏற்பட்டது, விமானம் ரத்து செய்யப்பட்டது.
அவன் ஒரு ராக்கெட்டுக்குள் குதித்தான்; அதன் ஏவுபாதை
அவளது இதயத்தை முழுசாக துளைத்தது அவன் தொடர்ந்தான்
மேலும், ராக்கெட்டுக்குள் சொகுசாக இருந்தது, அவனால் ரொம்பவெல்லாம் பார்க்க முடியவில்லை
ஆனால் ஜன்னல்களின் ஊடே உற்று நோக்கினான் படைப்பை
மில்லியன் மைல்களுக்கு அப்பால் நட்சத்திரங்களை பார்த்தான்
எதிர்காலத்தை, பிரபஞ்சம்
திறந்து கொண்டே செல்வதை பார்த்தான்
மேலும் அவன் தொடர்ந்தான், தூங்கினான், கடைசியாக
நிலவில் பேரொலியுடன் மோதினான் விழித்தான் ஊர்ந்து வெளியேறினான்
அம்மாவின் புட்டங்களுக்கு கீழே.
அருமையான எழுத்துகளின் வாசம்....வாழ்த்துகள்..!
ReplyDelete