Friday, 23 April 2010
ஒரு கணம் - ரூத் ஸ்டோன்
நெடுஞ்சாலைக்கு குறுக்கே வெள்ளம் சூழ்ந்த வயலில் ஒரு நாரை நிற்கிறது. அது சிந்தனையில்
ஆழ்ந்தது போல், ஒற்றைக் காலில், அசட்டையாக
ஏதோ அவ்வயலே நாரைகளுக்கு சொந்தம் என்பது போல் நிற்கிறது.
காற்று தெளிவாய் நிசப்தமாய்.
இந்த இரண்டாம் வறண்ட நாளில் பனி உருகுகிறது.
அம்மாவும் மகளும்,
நாம் வாகன நிறுத்துமிடத்தில்
டோனட்ஸ் மற்றும் காபியுடன் அமர்ந்துள்ளோம்.
நாம் மௌனமாக உள்ளோம்.
ஒரு கணத்திற்கு நம்மிடையே உள்ள சுவர்
பிரபஞ்சத்திற்கு திறக்கிறது;
பிறகு மூடுகிறது.
மேலும் நீ தொடர்ந்து சொல்கிறாய்
உனக்கு என் வாழ்வை திரும்ப வாழ வேண்டாம்.
நன்றி: The Best American Poetry 1999
ரூத் ஸ்டோன்: சிறுகுறிப்பு
Share This
Labels:
கவிதை
,
மொழியாக்கம்
Subscribe to:
Post Comments
(
Atom
)
கரைந்த மணித்துளிகள் திரும்ப கிடைக்காத ஏக்கம் கவிதை வரிகளில் ததும்பி வழிகிறது...
ReplyDeleteயயாதி மாதிரியா?
ReplyDeleteகொஞசம் பெருங்குறிப்பு
வரையக் கூடாதா?
அருமை நண்பரே
ReplyDeleteThanks for sharing this poem and about Ruth Stone(previous post)
ReplyDeleteநெடுஞ்சாலைக்கு குறுக்கே - என்று இல்லாது
ReplyDeleteநெடுஞ்சாலைக்கு அப்பால் (across)
என்று மொழிபெயர்த்திருக்கலாமோ ?
(பெருங்குறிப்பு கேட்டவர்க்கு எழுத வேண்டும் என தோன்றிய சிறு குறிப்பு...
எடுத்துக்கொண்ட உரிமைக்கு மன்னிக்கவும்.)
மகள் தன் தாயிடம் சொல்கிறாள் ...
நீண்ட கனத்த, வெறித்த மௌனங்களுக்குப்பிறகு
அம்மா நீ வாழ்ந்தது போலொரு வாழ்வை நான் வாழ விரும்பவில்லை என்று.
சில விவாதங்களுக்குப்பிறகு இப்படியொரு விமர்சன நோக்கு தாங்கியதொரு முடிவு
வெளிப்படுகிறது மகளிடமிருந்து.
--