ஒரு பிரதியை படித்து வாசிக்கும் மென்பொருளை text-to-read மென்பொருள் என்று அழைப்போம். ஆங்கிலத்தில் ஏகப்பட்டவை உள்ளன. இப்போது பெங்களூருவை சேர்ந்த பேராசிரியர் ராமகிருஷ்ணன் தமிழ் மற்றும் கன்னடத்தில் இப்படியான ஒரு மென்பொருளை உருவாக்கி வருகிறார். வெள்ளோட்டம் இந்த தொடுப்பில் உள்ளது: http://mile.ee.iisc.ernet.in:8080/tts_demo/
இதை சொடுக்கின பின் திறக்கும் பக்கத்தில் ஒரு பெட்டி தோன்றும். அதில் நீங்கள் unicode-இல் தமிழ் எழுதலாம். அல்லது ஏற்கனவே உங்களிடம் இணையம், pdf, word-இல் உள்ள பிரதிகளை copy-paste கூட செய்யலாம். இந்த மென்பொருள் அதை ஒரு ஒலிக் கோப்பாக மாற்றி தருகிறது.
இந்த மென்பொருளின் பயன்கள் என்ன?
தமிழ் கேட்டு புரிய முடிகிற ஆனால் வாசிக்க தெரியாத இளந்தலைமுறையினரில் ஒரு பகுதியினருக்கு வாசிப்பை எளிதாக்கும்.
எழுத்தாளர்களுக்கு தங்களின் நீளமான பிரதிகளை edit செய்வது எளிதாகும்.
வாசிக்க களைப்பான பொழுதுகளில், பயணங்களில், நீண்ட வரிசைகளில் காத்திருக்கையில், யாராவது மொக்கை போட வரும் போது இதனை கேட்பது நலம் பயக்கும்.
அனுகூலம்?
பொதுவாக ஆங்கில text-to-read மென்பொருட்களில் கணினி குரல் தான் பதியப்பட்டிருக்கும். கேட்க சற்றும் பயங்கரமான எந்திர உச்சரிப்பு. மனிதக் குரல் உள்ள மென்ப்பொருட்கள் இலவசமாக கிடைக்காது. வாங்க வேண்டும். (கைவசம் உள்ளவர்கள் எனக்கு தெரிவித்தால் மகிழ்ச்சி). ஆனால் ராமகிருஷ்ணனின் இந்த மென்பொருளில் மனிதக் குரலை தந்துள்ளார். கணீரென்ற குரல் இனிமையான உச்சரிப்பு. சில பிசிறல்களையும் குறிப்பிட வேண்டும். சில இடங்களில் எதிரொலி கேட்கிறது. வேறு சில இடங்களில் வார்த்தைகள் துள்ளி மறைகின்றன.
குறைகள்?
இரண்டுதான்: கிட்டத்தட்ட ஒரு பத்திக்கு மேல் படிக்க முடியாது.
ஒலிக் கோப்பை சேமித்து வைப்பது எளிதாக இல்லை.
பேராசிரியர் ராமகிருஷ்ணனுக்கு நன்றிகள்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
உங்களுக்கும்
ReplyDeleteநன்றி.
நல்ல முயற்சிதான், ஆனால் அவர் பேசுவது புரிய மாட்டேங்குது.. திருக்குறள் ஒன்றை அடித்து முயற்சித்தேன்.. ம்ஹூம் இன்னும் வேலை பாக்கணும்
ReplyDeleteநன்றி மதுமிதா
ReplyDeleteபகிர்விற்கு நன்றி.
ReplyDeleteஇன்னும் தெளிவாக இருந்தால் சிறப்பாக இருக்கும்.